செஞ்சிலுவை சங்கம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த ஒலிபெருக்கி பயன்படுத்த தடை: சிபிஐ(எம்) கண்டனம்

செஞ்சிலுவை சங்கம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த ஒலிபெருக்கி பயன்படுத்த தடை: அரசியல் கட்சிகளின் ஜனநாயக குரல் வலைய நெறிக்கும் கோவை மாநகர காவல்துறை நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு கண்டனம்;

மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு கூட்டம் 27.1.2015ம்தேதி காந்திபுரம் மாவட்டக்குழு அலுவலகத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செஞ்சிலுவை சங்கம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதித்துள்ள கோவை மாநகர காவல்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

கோவை மாநகரம், முன்பு 72 வார்டுகள் இருந்த போது 150 சதுரக் கி.மீ  இருந்தது, தற்போது குணியமுத்துர் நகராட்சி, குறிச்சி நகராட்சி, கவுண்டம்பாளையம் நகராட்சி அகிய 3 நகராட்சிகளும்.  மற்றும் 7 பேரூராசிகள் ஒரு ஊராட்சிகள் இணைக்கப்பட்டு தற்போது 252 சதுர கி.மீ சுற்றளவு கொண்ட மிக பெரிய மாநகரப் பகுதியாக வளர்ந்துள்ளது.

கோவை மாநகரத்தில் மத்திய பேருந்து நிலையம். செஞ்சிலுவை சங்க கட்டிடம் அருகில்  அரசியல் கட்சிகள் மக்கள் கோரிக்கை இயக்கங்களை நடத்திட ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்து, தற்போது காந்திபுரம் மேம்பால வேலைகள் நடைபெறுவதால்  செஞ்சிலுவை சங்கம் எதிரில் மட்டுமே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

நடைபெறும் ஆர்ப்பாட்ட கோரிக்கைகள் அதிகரவர்க்கத்தின் செவிகளுக்கு எட்டக் கூடாது என்ற வகையில் தற்போது கோரிக்கை இயக்கங்களுக்கு ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதித்து கோவை மாநகர காவல்துறை தட்டி வைத்திருப்பது ஏற்புடையதல்ல.

1998 ஆண்டிற்கு பிறகு அரசியல் கட்சிகளிடம் கலந்து பேசி மாநகரத்தில் போராட்டம் நடத்த இரு மையங்கள்  என பேசி தீர்மானிக்கப்பட்டது, தற்போது காவல்துறை எந்த அரசியல் கட்சிகளிடமும் கலந்து பேசாமல் தன்னிச்சையாக ஒலிபெருக்கி தடை விதித்துள்ளது கண்டிக்கதக்கது.

தொடர்ந்து மக்கள் குரலை நசுக்கும் வேலையை கோவை மாநகர காவல்துறையும். மாவட்டம் நிர்வாகமும் செய்து வருவதின் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்திற்கு ஒலிபெருக்கி வைக்க தடை விதித்துள்ளது,

காளப்பட்டி. கோவைபுதுர். மருதமலை அடிவாரம். துடியலுர். ஒண்டிப்புதுர் பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள்  நீன்ட தொலைவு வந்து, பெரும் பொருட்ச் செலவு செய்துதான் ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கோரிக்கைகளை அதிகர வர்க்கத்திற்கு தெரிவிக்க முடியும்  என்பதே பொதுமக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை ஒடுக்கும் நடவடிக்கை ஆகும். எனவே செஞ்சிலுவை சங்கத்தின் எதிரில் ஒலிபெருக்கி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த ஆனுமதி அளிக்க வேண்டும்

மேலும் கோவை மாநகரத்தில் காவல்துறையால் பொதுக்கூட்டம் நடத்த ஆனுமதிக்கப்பட்ட இடங்களில்  ஆர்ப்பாட்டம் நடத்திட அனுமதி அளித்திட வேண்டும் இதன் மூலம் காவல்துறைக்கும்  பொதுமக்களும் சிரம்மம் குறையும், அல்லது  காவல்துறையே அரசியல் கட்சிகளின் கூட்டத்தை நடத்தி பொறுத்தமான இடத்தை தேர்வு செய்திட முன் வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு சார்பில்  கேட்டுக் கொள்கிறோம்.

Check Also

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ராஜாங்கம் காலமானார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், தொழிற்சங்க தலைவர் தோழர் எம்.ராஜாங்கம் 21.7.20 அன்று  மதியம்  சுமார் 12.00  மணியளவில் ...