சென்னையில் குறைந்த விலையில் 1000 அரசு சிற்றுண்டி உணவகங்கள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு சுகாதாரமான முறையில் சலுகை விலையில் தரமான உணவு வழங்க சென்னை மாநகராட்சி மூலம் ஆயிரம் சிற்றுண்டி உணவகங்கள் தொடங்கப்படும் என்றும், முதற்கட்டமாக சென்னையில் நகரில்உள்ள ஒவ்வொரு வார்டிலும், ஒரு சிற்றுண்டி உணவகம் என்ற அடிப்படையில் 200 சிற்றுண்டி உணவகங்களை தொடங்கப்படுமென்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 
இந்த உணவகங்களில் ஒரு இட்லி  1 ரூபாய்,  சாம்பார் சாதம் 5 ரூபாய், தயிர் சாதம்  3 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் இந்த உணவகங்களின் பணிகளை சென்னை மாநகராட்சியே கண்காணிப்பதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு வரவேற்கிறது.
 
காங்கிரஸ் தலைமையிலான திமுகவும் இடம் பெற்றுள்ள மத்திய அரசு பின்பற்றும் தவறான தாராளமய பொருளாதாரக் கொள்கை மற்றும் நடவடிக்கைகளின் விளைவாக  காய்கறிகள் உட்பட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளன. மானிய விலை சமையல் எரிவாயு உருளை எண்ணிக்கை 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது.  ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இத்தகு நிலையில் தமிழக அரசின் இந்த திட்டம் ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் மற்றும் குடிசைப்பகுதிவாழ் மக்களுக்கு ஓரளவு பயன்தரும் திட்டமாகும். தமிழக அரசு அறிவித்துள்ளபடி, சென்னை நகரத்தில் 1000 சிற்றுண்டி உணவகங்களை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும், இந்த திட்டத்தை இதர மாநகராட்சிகள் மற்றும் அடித்தட்டு உழைப்பாளி மக்கள், பிழைப்புக்காக இடம் பெயர்ந்து வாழும் உழைப்பாளி மக்கள் குவியலாக வாழும் நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கவும், சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அக்.20ல் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம்

மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் சூரப்பாவை பதவி ...

Leave a Reply