செப்டம்பர் 20 தேசம் தழுவிய போராட்டத்தை வெற்றி பெறச் செய்வீர்! சிபிஐ, சிபிஐ(எம்) வேண்டுகோள்!

 

மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களையும், சுமைகளையும் ஏவும் நிலை தொடர்கிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு, மக்களுக்கு மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை வருடத்திற்கு 6 ஆகக் குறைத்தது, கோடிக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்பையும் வர்த்தகர்களின் வாழ்வையும் பாதிக்கும் வகையில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூலதனத்தை  அனுமதித்தது, நவரத்னா பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தொடர்ச்சியாக தனியாருக்கு விற்று வருவது போன்ற பல தாக்குதல்கள் மூலம் மக்களின் வாழ்வாதாரங்களை சீரழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோத போக்குகளைக் கண்டித்து 2012 செப்டம்பர் 20-ல் பொது வேலை நிறுத்தம், கடையடைப்பு, மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற கண்டன இயக்கங்களை தேசந்தழுவிய அளவில் நடத்துமாறு சமாஜ்வாதி கட்சி, ஜனதா தளம் (எஸ்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிஜூ ஜனதா தளம், தெலுங்கு தேசக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் அறை கூவல் விடுத்துள்ளன. இப்போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் சாத்தியமான வடிவங்களில் நடத்துமாறும் தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், லாரி உரிமையாளர்கள், வணிகர்கள் மற்றும் அனைத்து தேசபக்த ஜனநாயக சக்திகளும், அரசியல் இயக்கங்களும் இப்போராட்டத்தில் இணைந்து வெற்றிகரமாக்க முன்வருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

Leave a Reply