செவிலியர்கள் மீது தமிழக அரசு அடக்குமுறை நடவடிக்கை சிபிஐ(எம்) கண்டனம்

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரூ. 7,700/- என்ற தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களுக்கும் மேலாக சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் போராடி வருகின்றனர். செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, போராடும் செவிலியர்களை மிகமோசமாக மிரட்டி பணியவைக்கும் முயற்சியினை தமிழக அரசு மேற்கொள்வதோடு, டி.எம்.எஸ். வளாகத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்த குடிநீர், கழிவறை வசதிகளை தடை செய்து போராட்டத்தை ஒடுக்க அடக்குமுறை நடவடிக்கைகளை கையாண்டு வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் செவிலியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக ஏற்று போராட்டத்தை தமிழக அரசு முடிவிற்கு கொண்டு வர வேண்டுமெனவும்; மாறாக போராடும் செவிலியர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுவது, பணியிலிருந்து நீக்குவதாக மிரட்டல் விடுப்பது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

மருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி ...