‘சொர்க்கம்’ எங்கே இருக்கிறது? – மதுக்கூர் ராமலிங்கம்

தமிழக அரசின் நிர்வாகம் ஸ்தம்பித்துப்போய் உள்ளது.மொத்தமுள்ள 2180 காலியிடத்திற்கு 6 லட்சம் பேர் குரூப் 4 தேர்வு எழுதியுள்ளனர். இது தான் தமிழக மக்களின் நிலை. சோழநாடு சோறுடைத்தது என்பார்கள்.

ஆனால், அங்குள்ள விவசாயிகள் காவிரி தண்ணீர் கிடைக்காமல், விவசாயம் பொய்த்துப் போனதால் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி, கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என தெரிவிக்கிறார்.

பணம் அதிகமாக நடமாடியதால் தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது. தற்போது தேர்தல் நடைபெறுகிறது. திமுகவும், அதிமுகவும் அதே வேட்பாளரை நிறுத்தியுள்ளனர். திமுக பொருளாளர் ஸ்டாலின், ஊழலை ஒழிப்போம், மணல் கொள்ளையை தடுப்போம் என தேர்தல் பிரச்சாரத்தில் கூறுகிறார். ‘‘அரியும், சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில் மண்ணு” எனக் கூறுவார்கள்.

தற்போது, உள்ள நிலை என்னவெனில் திமுகவும், அதிமுகவும் ஒன்னு. இதை அறியாத மக்கள் வாயில் மண்ணு என்பதுதான். எனவே, இந்த இரு கட்சிகளும் வேண்டாம் என நாங்கள் கூறுகிறோம். ரஷ்யாவில் புரட்சி நடைபெற்றபோது, ஆஹா எழுந்தது யுகப்புரட்சி என பாரதி பாடினார். அந்த சோசலிசத்தை இந்தியாவிலும் கொண்டு வர வேண்டும். மதங்களின் தலைவர்கள் சொர்க்கம் என்பது விண்ணில் உள்ளது எனக் கூறுவர். ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் மட்டும்தான் கூறுகிறோம். சொர்க்கம் வேறு எங்கும் இல்லை. இந்த மண்ணில்தான் உள்ளது.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...