ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது கண்டனத்திற்குரியது – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மத்திய அரசின் கட்டளைக்கிணங்க, ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தைக் கலைத்து ஆளுநர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையானது சட்டவிரோதமான மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.

“எதிரெதிரான” சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் ஒரு பொருத்தமான அரசாங்கத்தை அமைத்திட முடியாது என்று முடிவு செய்திடும் வேலை ஆளுநருக்குக் கிடையாது. இந்த அளவுகோலின்படி பார்த்தோமானால், தேர்தலுக்குப் பின்னர் பிடிபி-பாஜக அரசாங்கம் அமைத்திட அனுமதிக்காமல் இருந்திருக்க வேண்டும். எனவே, ஆளுநரின் வேலை என்னவென்றால், தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்று கூறும் தலைவரிடம் சட்டமன்றத்தைக்கூட்டி அவையில் பெரும்பான்மையை நிரூபியுங்கள் என்று கேட்பது மட்டுமேயாகும்.

மோடி அரசாங்கம், இவ்வாறு எதேச்சாதிகார நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம் மாநிலத்தின் நிலைமையை மேலும் சிக்கலாக்கியும் மோசமாக்கியும் இருக்கிறது.

English : Dissolution of J & K Assembly Condemned

Check Also

மருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி ...