ஜூலை 8: தோழர் பி.ராமச்சந்திரன் நினைவு நாள் (1925-2008)

PRC
P.Ramachandran

மக்களுக்காக உழைக்கும் இலட்சியப் பிடிப்போடு தோழர் பி.ராமச்சந்திரன் மாணவப் பருவத்திலேயே நாட்டு விடுதலைப் போரில் பங்கேற்றார். புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டுவதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். கிளைச் செயலாளரிலிருந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வரை பல பொறுப்புகளை வகித்தவர்.

“ஒரு கம்யூனிஸ்ட்டின் நினைவு குறிப்புகள்” நூலில் அவர் எழுதியுள்ள ஒரு பகுதி வருமாறு:

1941 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக சேர்ந்தேன். எனது நீண்ட பயணத்தில் நான் பெற்ற அனுபவங்கள் ஏராளம். இயக்கங்களை உருவாக்கியது, பங்கேற்றது, கட்சியையும் வெகுஜன அமைப்புகளையும் படிப்படியாகக் கட்டி வளர்த்தது, ஆயிரக்கணக்கான தோழர்களுடன் மிக நெருக்கமாகப் பழகி அவர்களை ஊக்குவித்தது, ஏராளமான தோழர்களுக்கு அரசியல் கல்வி புகட்டியது போன்ற அனுபவங்களைப் பெற்றேன்.

வசதிகளின்றி, வறுமைக்கும், அதனால் தோன்றும் இன்னல்களுக்கும் இடையே மனம் தளராமல் பணியாற்றிய அனுபவங்கள் பல. காவல்துறையின் அடக்குமுறைகள், சிறை வாழ்க்கை, தலைமறைவு வாழ்க்கை, வாழ்ந்த அனுபவங்கள் போன்றவற்றையும் சந்தித்துள்ளேன். அரசியல் சூழலின் மாற்றங்களையும் கண்டுள்ளேன். இந்த மாபெரும் இயக்கத்திற்கு ஏற்பட்ட தோல்விகள், எதிர்கொள்ளும் நெருக்கடிகள், பின்னடைவுகள் மத்தியிலும் நமது தோழர்கள் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் கட்சி பணியாற்றி வருவதைக் காண்கிறேன்.

கோடிக்கணக்கான மக்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தை மனித குலத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக எண்ணுகிறார்கள். இந்த எண்ணம்தான் நமது வெற்றிக்கு ஆதாரமாக அமையும் என்பதில் ஐயமில்லை. பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரும் எழுத்தாளரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர் கெப்ரியல் பெரி (ஞ.க்ஷ மெம்பர்) எழுதிய ஒரு கடிதத்தில் “கம்யூனிசம் மனித குலத்தின் மனசாட்சியாகும்” என்ற ஆழமான பொருள் பொதிந்த கருத்தினை எழுதினார். அவர் நாஜிகளால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த போதுதான் இதை வரைந்தார். மறக்க முடியாத அந்த மகத்தான சொற்களைப் படித்த நாளில் இருந்து என் மனதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

Check Also

சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் காவல் அடைப்பில் கொல்லப்பட்டதற்கு – சிபிஐ (எம்) அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையும் மகனும் காவல் அடைப்பின்போது கொல்லப்பட்ட அதிர்ச்சி நிகழ்வுக்குக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...