திமுக முன்னாள் மத்திய அமைச்சரும் – அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., அவர்களின் துணைவியார் திருமதி அனுசுயா (வயது 65) அவர்கள் இன்று (15.12.2020) உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனைக்கு உள்ளானோம். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்மையார் திருமதி அனுசுயா அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் திரு. ஜெகத்ரட்சகன் எம்.பி., அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கே. பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்