டான்பாஸ்கோ பள்ளியை மீண்டும் திறக்க சிபிஐ(எம்) எம்எல்ஏ. அ.சவுந்தரராசன் வலியுறுத்தல்

பெரம்பூர் தொகுதி, எம்.கே.பி. நகரில் உள்ள டான்பாஸ்கோ என்ற உயர்நிலைப்பள்ளிக் கட்டிடங்களுக்கு சென்னை மாநகராட்சி  29.05.2015 அன்று சீல் வைத்து மூடியுள்ளது. 10ஆம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 2500 குழந்தைகள் படிக்கின்றனர்.

இந்தப் பள்ளிக்கு சீல் வைப்பதற்கான நீதிமன்ற உத்தரவு எதுவும் இல்லை. பள்ளிக்கு சீல் வைக்கப்படும் என்று முறையான முன்னறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை.இந்தப் பள்ளி செயல்படுவதற்கான உரிமத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகஸ்ட் 2016 வரை வழங்கியுள்ளார். 01.06.2015 அன்று பள்ளி திறப்பதற்கு முன்பாக திடீரென்று இப்படி சீல் வைத்திருப்பதால் பள்ளிக் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் பெருங்கவலை கொண்டுள்ளனர்.

கோட்டம் 4 ன் ஆபீசர், ஜே.டி.சி., மாநகராட்சி கமிஷனர், மேயர் யாரிடமும் சீல் வைப்பதற்கு முன்பாக அனுமதியோ, ஆலோசனையோ  நடந்திருப்பதாகத் தெரியவில்லை. அங்குள்ள கோட்ட நிர்வாகப் பொறியாளர், பகுதி நிர்வாகப் பொறியாளர் போன்றோர் முன்றிவிப்பு ஏதுமின்றியும்,பள்ளி நிர்வாகத்திற்கு வாய்ப்பு தராமலும் அதிரடியாக சீல் வைத்திருக்கிறார்கள்.

பள்ளி நிர்வாகம் கட்டிடம் கட்டியதில் விதிமீறல் இருந்தால் அதை சரி செய்யக்  கோருவது அவசியம். அதே வேளையில்  பள்ளிக் குழந்தைகளின் எதிர்காலம் வீணாகாமல் பார்க்க வேண்டிய பொறுப்பும் மாநகராட்சிக்கு உள்ளது.

சட்ட விரோதமாகவும், உரிய முறைகளைப் பின்பற்றாமலும் பள்ளிக்கு வைக்கப்பட்டுள்ள சீல் அகற்றப்பட வேண்டுமென மாநகராட்சியை வலியுறுத்துகிறேன். சட்டவிரோதமாக செயல்பட்ட அதிகாரிகளைக் கண்டிப்பதோடு, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென மேயர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
01.06.2015 அன்று வழக்கம்போல் பள்ளி திறந்து செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமென மாநகராட்சியை கேட்டுக்கொள்கிறேன்.

அ.சவுந்தரராசன்
சட்டமன்ற உறுப்பினர்

A. Soundararajan MLA Statement

Check Also

OBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் ...