டிசம்பர் 13 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்திக்கிறார்

2015, டிசம்பர் 13, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வேளச்சேரி பகுதியில் குப்பைக்கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து கல்லுக்குட்டை பகுதியில் மக்களை சந்தித்து வெள்ள பாதிப்பு விவரங்களை கேட்டறிகிறார்.

விருகம்பாக்கம் – சூளைப்பள்ளம் பகுதி, ஆர்.கே.நகர்- நேதாஜி நகர் பகுதி, திருவொற்றியூர் – கார்கில் நகர் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார். சீதாராம் யெச்சூரி எம்பி அவர்களுடன் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களும் கலந்து கொள்கிறார்.

நிவாரணம் வழங்குதல்

மாலை 4 மணியளவில் ஆயிரம் விளக்கு பகுதியில் மக்கள் நல கூட்டியக்கத்தின் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு நிவாரணம் வழங்குகிறார். மக்கள் நலக் கூட்டியக்கத்தின் தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

Check Also

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் ...