டீசல் விலை கட்டுப்பாட்டை விலக்கிக் கொண்ட மன்மோகன் அரசிற்கு சிபிஐ(எம்) கண்டனம்…!

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடைபிடித்து வரும் தாராளமயக் கொள்கையின் ஓர் அம்சமான அத்தியாவசிய எரிபொருட்களுக்கு வழங்கும் மானியத்தை ஒழித்துக் கட்டும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக டீசல் விலை நிர்ணயிக்கும் அரசின் உரிமையை விலக்கிக் கொள்ளும் முடிவினை எடுத்துள்ளது.

பெட்ரோல் விலை நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசு கைவிட்ட பின்னர் பெட்ரோல் விலை பல முறை உயர்த்தப்பட்டதும் அதன் தொடர் விளைவாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. தற்போதைய அரசின் இந்த முடிவால் டீசல் விலை உயர்த்தப்படும்; பணவீக்கம் அதிகரிக்கும்; விலைவாசி கடுமையாக உயரும்; மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
 
டீசல் விலைக் கட்டுப்பாட்டை கைவிடும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. மத்திய அரசின் டீசல் விலைக் கட்டுப்பாட்டை கைவிடும் முடிவிற்கு எதிராக அனைத்துப் பகுதி மக்களும் குரல் கொடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

Check Also

மருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…

மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய அளவில் ஒதுக்கப்படும் இடங்களில் இந்த ஆண்டே இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ...

Leave a Reply