தத்துவார்த்தத் தீர்மானத்தின் விளக்கக் குறிப்புகள் 20-வது அகில இந்திய மாநாடு

தத்துவார்த்தத் தீர்மானத்தின் விளக்கக் குறிப்புகள் 

இந்திய கம்யூனிட் கட்சி (மார்க்சிஸ்ட்)‌

20-வது அகில இந்திய மாநாடு

 
(1) பத்தி 1.7 : இவற்றில் அற்புதமான தெலுங்கானா மக்களின் ஆயுதப்போராட்டம்; தேபாகா இயக்கம் (வங்கம்); புன்னப்புரா வயலார்(கேரளா); வார்லி பழங்குடியினர் போராட்டம் (மகாராஷ்டிரா); திரிபுரா ஆயுதப்போராட்டம்; சுர்மா பள்ளத் தாக்குப் போராட்டம்(அசாம்); வளர்ச்சி வரி எதிர்ப்புப் போராட்டம் (பஞ்சாப்); கீழ்த்தஞ்சையில் பண்ணை அடிமைமுறை எதிர்ப்பு இயக்கம் (தமிழ்நாடு); மற்றும் எண்ணற்ற உழைக்கும் வர்க்கப் போராட்டங்கள் முதலியவை அடங்கும்.
 
(2) பத்தி 2.3 : 1990ம் ஆண்டு என அண்மைக் காலத்தில் கூட,  அமெ ரிக்காவின் முதல் பத்து பெரிய நிதி நிறுவனங்கள், ஒட்டுமொத்த நிதிச் சொத்துக்களில் பத்து விழுக்காட்டை மட்டுமே தங்கள் வசம் வைத்திருந்தன. 2009 ஆம் ஆண்டில் அது 50 விழுக்காடாக உயர்ந்தது. 2009 ஆம் ஆண்டில் முதல் பெரிய இருபது நிறுவனங்கள் வசம் 70 விழுக்காடு நிதிச் சொத்துக்கள் இருந்தது. 1990 ஆம் ஆண்டில் அது வெறும் 12 விழுக்காடாக மட்ட்டுமே இருந்தது. 1985 ஆம் ஆண்டின் இறுதியில், அமெரிக்காவில், ஃபெடரல் டிப்பாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில், 18 ஆயிரம் வங்கிகள் உறுப்பினர் களாக இருந்தன. 2007 ஆம் ஆண்டு இறுதியில், இந்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 534 ஆக சரிந்தது. அதற்குப் பின்னர் எண்ணிக்கை மேலும் சரிந்தது. 1991 ஆம் ஆண்டில் இருந்த அமெரிக்காவின் முதல் பெரிய 15 வங்கிகளில் (அப்போது இந்த வங்கிகளின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1.5 லட்சம் கோடி டாலர்கள்). அதில், 2008 ஆம் ஆண்டு இறுதியில் வெறும் ஐந்து வங்கிகள்தான் மிஞ்சின. (ஆனால், அவற்றின் சொத்து மதிப்பு 8.9 லட்சம் கோடி டாலர் களாக உயர்ந்துள்ள்ளது) 
 
(3) பத்தி 2.7 : ஹில்ஃபர்டிங் மற்றும் ஹாப்சன் போன்றவர்கள் ஏகாதிபத்தியம் குறித்து எழுதியுள்ளதையும் எடுத்துக் கொண்டு, அவர்களின் விளக்கங்களைத் தாண்டி ஆய்வு செய்து, ஏகாதி பத்தியம் என்பது முதலாளித்துவத்தின் உச்சகட்டம் எனவும், அது தொடர்ந்து சர்வதேச நிதிமூலதன  மேலாதிக்கத்தின்கீழ் வருகிறது எனவும் முடிவு செய்தார். ஏகாதிபத்தியம் என்பதன் விளக்கம் கீழ்க்கண்ட ஐந்து அம்சங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்றார். உற்பத்தி மற்றும் மூலதனம் ஆகியவற்றின் குவியல் மிகவும் உச்சகட்டத்தை அடையும். அதாவது பொருளாதார வாழ்க்கையில் தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கும்.
 
ஏகபோகங்கள் உருவாகும். வங்கி மூலதனமும், தொழில் மூலதனமும் இணைந்து நிதி மூலதனமாக உருவெடுத்து, அதனடிப்படையில் மூலதனத்தின் ஆட்சி உருவாக்கப்படும். பண்டங் களின் ஏற்றுமதிக்கு பதிலாக மூலதன ஏற்றுமதி மிக அதிக முக்கியத் துவம் பெறும். உலகைத் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ளும் சர்வதேச ஏகபோக முதலாளித்துவ சங்கங்கள் உரு வாகும். மற்றும் ஒட்டுமொத்த உலகை பெரும் முதலாளித்துவ சக்திகள் பிராந்திய வாரியாகப் பிரித்துக் கொள்ளும் பணி முழுமையடைந்துவிடும். முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கில் ஒரு கட்டத்தில் ஏகபோகங்கள் மற்றும் நிதி மூலதனத்தின் செல்வாக்கு உருவாகிவிட்ட நிலைதான் ஏகாதிபத்தியம். இதில் மூலதனம் ஏற்றுமதி ஆவதற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும். சர்வதேச அமைப்புகளுக்குள் உலகைப் பங்கிடும் வேலை துவக்கப் படும். அதில் பெரும் முதலாளித்துவ சக்திகள் உலகின் அனைத்துப் பகுதிகளையும் பிரித்துக் கொள்ளும் வேலை நிறைவு பெற்றதாக இருக்கும். (லெனின், நூல் திரட்டு, தொகுதி 22 பக்கங்கள் 266-267)
 
(4) பத்தி 2.8 : நிதி மூலதனம் தனது செல்வாக்கை 1913 ஆம் ஆண்டிலேயே ஏற்படுத்திவிட்டது என்பதை பின்வரும் விபரங்கள் மூலம் லெனின் கவனத்தில் கொண்டு வந்தார். 
 
வங்கி சொத்துக்கள்
(அக்டோபர்-நவம்பர் 1913ல் கிடைத்த விபரங்களின்படி) (000,000 ரூபிள்களில்)
 
ரஷ்ய வங்கிகளின் குழு செய்யப்பட்ட முதலீடு             உற்பத்தி          ஊகம்         மொத்தம்
 
நான்கு வங்கிகள் : சைபீரியன் 
கமர்சியல், ரஷ்யன், இன்டர்நேஷனல்,
மற்றும் டிஸ்கவுன்ட் வங்கி இரண்டு 
வங்கிகள் : வர்த்தக  மற்றும் தொழில்,                                   413.7                859.1              1272.8
 
ரஸ்ஸோ-பிரிட்டிஷ் ஐந்து வங்கிகள் :                                   239.3                169.1                408.4
 
ரஷ்ய-ஆசியாடிக், செயின்ட் பீட்டர்ஸ்
பர்க் பிரைவேட், அசோவ்-டான், யூனியன் 
மாஸ்கோ, ரஸ்ஸோ-பிரெஞ்சு கமர்சியல்                             711.8               661.2              1373.0
 
மொத்தம் 11 வங்கிகள்                                                                  1364.8             1689.4              3054.2
 
எட்டு வங்கிகள் : மாஸ்கோ  மெர்சன்ட்ஸ், 
வோல்கோ-காமா,  ஜங்கர் அண்டு கோ, 
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கமர்சியல் (முன்பாக 
வாவல்பெர்க்), பேங்க் ஆப் மாஸ்கோ 
(முன்பாக ரியாபுஷின்கி), மாஸ்கோ டிஸ்கவுன்ட், 
மாஸ்கோ கமர்சியல், மாஸ்கோ பிரைவேட்                         504.2                391.1               895.3
 
மொத்தம் 19 வங்கிகள்                                                                  1869.0              2080.5             3949.5
 
நவீன காலத்தில் நிதியை ஊகவணிகத்தில் ஈடுபடுத்துவது மூலம் கிடைத்த லாபத்திற்கு எடுத்துக்காட்டுகள் சில :
 
1. 2003 ஆம் ஆண்டில் குழுமத்தின் லாபத்தில் 42 விழுக்காட்டை ஜி.இ.கேபிடல் ஊக வணிகத்தின் மூலம் ஈட்டியது.
 
2. 2003 ஆம் ஆண்டில் விற்பனை பெரிய அளவில் இல்லாவிட் டாலும், வாடிக்கையாளருக்கு குத்தகைக்கு விடும் ஏற்பாடுகள் மூலமே அனைத்து லாபத்தையும் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு ஆகிய நிறுவனங்கள் சம்பாதித்துள்ளன.
 
3. 2004 ஆம் ஆண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் ஏற்புக்கழகப் (ஜி.எம்.ஏ.சி) பிரிவு 2.9 பில்லியன் டாலர் ரூபாய் வருமானம் ஈட்டியது. இது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 80 விழுக்காடாகும்.
 
(5) பத்தி 2.19 : இந்தியாவில் நமது சொந்த அனுபவங்களைத் தவிர, உயர் மட்டங்களில் ஊழல் என்பது ஏகாதிபத்திய உலகமயத்தின் பரவலான அம்சமாக மாறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தலைவர் கள் பட்டியலில் அண்மையில் பிரான்சின் முன்னாள் பிரதமர் ஜாக்குஸ் சிராக், தாக்சின்(தாய்லாந்து), பெர்லுஸ் கோனி(இத்தாலி), குளோரியோ அகினோ(பிலிப்பைன்ஸ்) உள்ளிட்டோர் இடம் பிடித்தனர்.
 
2009 ஆம் ஆண்டுக்கான உலக ஊழல் அறிக்கையில் 1980களில் இருந்து புதிய வலுவான உலகளாவிய கூட்டமைப்பு உலக அளவில் தனது வேலையைச் செய்து கொண்டிருப்பதற்கான சாட்சியத்தைத் தருகிறது. பெரிய நிறுவனங்களின் பெயர்கள் இதில் அடிபடு கின்றன. குறிப்பாக, வளரும் நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளன. உலகம் முழுவதுமுள்ள முக்கியமான சந்தைத் துறைகள், உணவு மற்றும் வைட்டமின்களிலிருந்து, கட்டமைப்புத் திட்டங்கள் வரையில், மலேரியா எதிர்ப்பு மருந்துகளிலிருந்து பெரும் நவீன உயர்தொழில்நுட்பப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் சேவை வரையில் ஊழல் வயப்பட்டிருக்கிறது. பிரிட்டனில், மொத்தமுள்ள சந்தை மூலதனத்திரட்டலில் 40 விழுக்காடு அரசியல் தொடர்புள்ள நிறுவனங்களின் வசமே இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. ரஷ்யாவில் இது பெரிய அளவில் 80 விழுக்காட்டைத் தொட்டு நிற்கிறது. கூடுதலாக, இவ்வளவு பெரிய அளவிலும், விரைவாகவும் இத்தகைய தரகு வேலைகள் நடப்பது, இதுபோன்ற வாய்ப்பு வசதியில்லாத குடிமக்களின் உரிமைகள் மற்றும் பங்கேற்பு பற்றி பெரும் கவலைகளை உருவாக்கியுள்ளது. பிரஸ்ஸல்ஸ் நகரில் தரகு வேலை பார்க்கும் 2,500 நிறுவனங்கள் உள்ளன. ஐரோப்பிய யூனியனின் கொள்கைகள் உருவாக்கப்படும்போது அதில் செல்வாக்கு செலுத்த 15 ஆயிரம் தரகு வேலை பார்ப்பவர்கள் முனைந்து நிற்கிறார்கள். அமெ ரிக்காவில், இந்த வேலைகளைப் பார்க்க நிறுவனங்கள் செய்யும் செலவு அதிகரித்துள்ளது. 
 
அரசு மட்டத்தில், ஒவ்வொரு நாடாளு மன்ற உறுப்பினருக்கும் அவர்கள் செய்யும் செலவு சராசரியாக 2 லட்சம் டாலரைத் தொடுகிறது. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் தங்கள் பால் ஈர்க்க ஐந்து தரகர்கள் முனைந்து நிற்கின்றனர். வளரும் மற்றும் மாறிவரும் நாடுகள் ஆகியவற்றில் மட்டும், ஒவ்வொரு ஆண்டும் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் லஞ்சமாகப் பெறும் தொகை 20 முதல் 40 பில்லியன் வரையில் இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதிகாரபூர்வமான வளர்ச்சி உதவியில் 20 முதல் 40 விழுக்காட்டிற்கு இது சமமாக இருக்கிறது.  அண்மைக்காலத்தில், குறைந்தது 23 நாடுகளின் ஆளுங்கட்சிகள் அல்லது அவற்றின் உறுப்பினர்கள் பல்வேறு ஊழல் நடவடிக்கை களில் ஈடுபட்டிருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பட்டி யலில் அமெரிக்கா, மெக்சிகோ, கொலம்பியா, பெரு, அர்ஜெண் டினா, பிரேசில், அயர்லாந்து, பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா, ஸ்லொவேனியா, ஜப்பான், தென் கொரியா, தைவான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், உகாண்டா மற்றும் கென்யா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் ஜப்பான், தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகளில் ஊழல் மிக முக்கியமான பிரச்சனையாக மாறி அதனால் அங்குள்ள அரசு பதவிலிருந்து விலகியது அல்லது கவிழ்ந்தது.
 
1998 ஆம் ஆண்டில் வெளியான ஆசிய வளர்ச்சி வங்கியின் ஊழல் எதிர்ப்பு அறிக்கையின்படி, தங்களின் வரி வருவாயில் 50 விழுக் காட்டை இழக்கும் நிலை ஊழலால் பல அரசுகளுக்கு ஏற்படுகிறது. தாங்கள் வசூலிக்கும் அபராதத்தில் குறிப்பிட்ட சதவீத அளவில் தங்கள் பங்காக ஒரு தொகையினை சுங்க அதிகாரிகளே எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு லத்தீன் அமெரிக்க நாடு அறிவித்தபோது, ஒரே ஆண்டில் அந்நாட்டின் சுங்கவரி வசூல் 60 விழுக்காடு அதிகரித்தது…. ஒரு ஐரோப்பிய நாட்டின் ஊழல், அந்நாட்டின் மொத்த கடனை மேலும் 15 விழுக்காடு அல்லது 200 பில்லியன் டாலர் அதிகரிக்கச் செய்தது என்று சில மதிப்பீடுகள் காட்டு கின்றன.
 
(6) பத்தி 3.4 : 2010ஆம் ஆண்டு வெளியான மனிதவள மேம்பாட்டு அறிக்கையில், 110 நாடுகளில் 65 நாடுகளில் (சுமார் 60 சதவீத நாடுகள்) மொத்த வருமானத்தில் தொழிலாளர்களுக்குரிய பங்கு கடந்த இருபது ஆண்டுகளில் குறைந்தே வந்திருக்கிறது என்று கூறப் பட்டுள்ளது. தொழிலாளர்களின் பங்கு குறையாமல் அப்படியே இருப்பதாக முன்பு கூறப்பட்டது. 1990 முதல் 2008 வரையில் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற சில பெரிய நாடுகளில் ஐந்து விழுக்காடு புள்ளிகள் வரையில் தொழிலாளர்களின் பங்கு குறைந்தது. இது உலக அளவிலான சராசரியில் 2 விழுக்காடு புள்ளிகள் குறையும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆய்வொன்றின்படி, உலகின் கினி கோஎஃபிஷியன்ட்(வருவாய் ஏற்றத்தாழ்வை அளக்க உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று) 1988 ஆம் ஆண்டிலிருந்து மோசமாகி வருகிறது. அது தற்போது திடுக்கிட வைக்கும் வகையில் 0.71 ஆக உள்ளது (0 என்பது முழுமையான  சமத்துவத்தினைக் குறிக்கும். 1 என்பது பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வறுமையில் உழலுவதை, அதாவது, முழுமையான சமத்துவமின்மையினைக் குறிக்கும்) நாடுகளுக்குள் வருவாய் சமத்துவமின்மை அதிகரிப்பதைத்தான் இது குறிக்கும். 
 
1980களில் இருந்ததைவிட அதிகமான கோஎஃபிஷியன்ட் உள்ள நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததைவிட, கிழக்கு ஆசியா மறும் பசிபிக் பகுதியில் உள்ள பெரும்பாலான நாடுகளில் அதிகமான வருவாய் சமத்துவ மின்மை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தன்மையானது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கிடையில் உள்ள இடைவெளி அதிகரிப்பதன் மூலம் ஓரளவிற்கு விளங்குகிறது. பல்வேறு வடி வங்களில் இழப்புகளை ஏழை மக்கள் சந்தித்துக் கொண்டிருக் கிறார்கள். இதில் மற்ற பிரச்சனைகளோடு பாலியல் வேறுபாடு களும் கடுமையாக உள்ளன.
 
மோசமாகி வரும் இந்த நிலைமை, குறிப்பாக முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளிலும் உள்ளது. குறைவான சமத்துவ மின்மையுடன் துவங்கியதால், குறைவான அளவு கோஎஃபிசியன்ட் தான் இந்த நாடுகளுக்கு உள்ளது. மாற்றம் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதத்தை முழுமையாகத் தகர்த்துவிட்டது. பெரிய அளவில் இருந்த அரசு வேலைவாய்ப்புகளையும் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டனர். பெர்லின் சுவர் தகர்க்கப்படுவதற்கு முன்பாக, சோசலிச நாடுகளைச் சேர்ந்தவர்களில் பத்தில் ஒன்பது பேர் அரசு வேலைகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். இதே காலகட்டத்தில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (ஓ.இ.சி.டி) நாடுகளில் பத்தில் இரண்டு பேர்தான் அரசு வேலையில் இருந்தனர். மொத்தத்தில், 104 நாடுகளில் உள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் அல்லது 175 கோடி மக்கள் பன்முகப் பரிமாணம் கொண்ட வறுமையை அனுபவித்துக் கொண்டிருப்ப தாக நாங்கள் மதிப்பிடுகிறோம்.
 
மறுபுறத்தில், மகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் 300 பேர் அதிகரித்து, அதன் எண்ணிக்கை 1,210 ஆக உயர்ந்துவிட்டது. அவர்கள் சொத்தின் மொத்த மதிப்பு 4.5 டிரில்லியன் டாலர். 2008-2011 காலகட்டத்தில் மகா கோடீஸ்வரர்கள் ஈட்டிய வருமானத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், ஆசியா-பசிபிக் பகுதியில் நிதி நெருக்கடிக்கு முந்தைய காலத்தைவிட 24 விழுக்காடு அதிகரிப்பும், அமெரிக் காவில் 41 விழுக்காடு அதிகரிப்பும் ஏற்பட்டிருக்கிறது. உலக மக்கள் தொகையில் பணக்கார இரண்டு விழுக்காட்டினர் வசம் உலக செல்வத்தில் பாதி இருக்கிறது. 48 பெரிய ஏழை நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவானது, உலகின் மூன்று பெரிய பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பை விடக் குறைவாக இருக்கிறது. 40 விழுக்காடு உலக ஏழை மக்கள் ஈட்டும் வருமானம், உலகின் மொத்த வருமானத்தில் ஐந்து விழுக்காடு மட்டுமே. உலக மக்கள் தொகையில் 20 விழுக்காடு பெரிய பணக் காரர்கள் வசம்,  நான்கில் மூன்று பங்கு வருவாய் இருக்கிறது. உலக மக்களில் முதல் 20 விழுக்காடு பணக்காரர்களின் சராசரி ஆண்டு வருமானம், அடிமட்டத்தில் இருக்கும் 20 விழுக்காடு ஏழைகளின் சராசரி ஆண்டு வருமானத்தைவிட சுமார் 50 மடங்கு அதிகமாக உள்ளது.
 
அமெரிக்காவில், வருமானம் என்பதை விட செல்வத்தை எடுத்துக் கொண்டால், 40 விழுக்காட்டை ஒரு விழுக்காட்டினர் கட்டுப்படுத்துகிறார்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பாக,  12 விழுக் காட்டினர், 33 விழுக்காட்டினைக் கட்டுப்படுத்தினார்கள். மேல் மட்டத்தில் உள்ள ஒரு விழுக்காட்டினரின் வருமானம் கடந்த பத்தாண்டுகளில் 18 விழுக்காடு அதிகரித்துள்ளது. நடுத்தர மட்டத்தில் உள்ளவர்களின் வருமானமோ உண்மையில் சரிவைக் கண்டிருக்கிறது. ஆகஸ்டு 2011ன் இறுதியில் அமெரிக்காவின் முதல் 400 பணக்காரர்களின் தனிப்பட்ட செல்வ மதிப்பு 1.53 டிரில்லியன் ஆக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிட்டால் 12 விழுக்காடு அதிகரித்துள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே முதல் 400 பணக்காரர்களின் செல்வத்தின் மதிப்பு 2007 ஆம் ஆண்டுதான் அதிகமாக இருந்தது. பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு ஒரு ஆண்டு முன்னதாக அவர்கள் செல்வத்தின் மதிப்பு 1.57 டிரில்லியன் டாலராக இருந்தது. 1982 ஆம் ஆண்டில் ஃபோர்பஸ்  400 என்ற பட்டியலில் இடம் பெற வேண்டுமானால் ஒரு அமெரிக்கர் வசம் 75 மில்லியன் டாலர் இருக்க வேண்டும். 2011 ஆம் ஆண்டில் இந்த வரம்பு 1.5 பில்லியன் டாலரைத் தாண்டிவிட்டது. 1982 முதல் 2011 ஆம் ஆண்டிற்குள் ஃபோர்ப்ஸ் 400 பட்டியலில் இடம் பெற்றவர் களின் மொத்த வருமானம், பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டா லும் கூட, கண் விழி பிதுங்கும் அளவிற்கு 612 விழுக்காடு அதிகரித் துள்ளது. 1983 மற்றும் 2009 ஆம் ஆண்டிற்கிடையில், செல்வத்தில் நாட்டிற்குக் கிடைத்த பலன்களில் 82 விழுக்காட்டை அமெரிக் காவின் முதல் 5 விழுக்காடு பணக்காரர்கள் கைப்பற்றிக் கொண்ட னர். அடிமட்டத்தில் உள்ள 60 விழுக்காடு குடும்பங்களின் செல்வம் 1983 ஆம் ஆண்டைவிட, 2009 ஆம் ஆண்டில் குறைந்து போனது.
 
நமது நாடான இந்தியாவில், ஒரு புறம் டாலர் பில்லியனர்களின் (சுமார் ரூ. 5000 கோடி சொத்துள்ளவர்கள்) எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மறுபுறத்தில் ஏழைகள் மற்றும் கைவிடப்பட் டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2010 ஆம் ஆண்டில் 52 ஆக இருந்த டாலர் பில்லியனர்களின் எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டில் 69 ஆகிவிட்டது. இவர்கள் சொத்தின் மொத்த மதிப்பு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 30 விழுக்காட்டிற்கு சமமானதாகும். மறுபுறத்தில், இந்திய மக்கள் தொகையில் சுமார் 80 விழுக்காட்டினர் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவான தொகையைக் கொண்டு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 
 
(7) பத்தி 3.4 : வேலையின்மை : 2010 ஆம் ஆண்டின் மனித வள மேம்பாட்டு அறிக்கையின்படி, வேலையின்மையும், வறுமையும் பெருமளவில் அதிகரித்துள்ளது. 3 கோடியே 40 லட்சம் மக்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். 6 கோடியே 40 லட்சம் மக்கள் ஒருநாளைக்கு 1.25 டாலர் வருமானம் என்ற வரம்பிற்கும் கீழ், அதாவது வறுமைக்கோட்டிற்குள் வந்துள்ளனர். மொத்தத்தில் பண்டங்களின் விலைகள் அதிகரித்ததால் 16 கோடி முதல் 20 கோடி மக்கள் முந்தைய ஆண்டுகளில் கூடுதலாக வறுமைக்கோட்டுக் குக்கீழ் சென்றுள்ளனர். 2010 ஆம் ஆண்டில் வளர்ந்த நாடுகளின் வேலையின்மை விகிதம் 9 விழுக்காடாக இருந்தது. அமெரிக்காவின் வேலையின்மை விகிதம் 10 விழுக்காட்டையும், ஸ்பெயின் 20 விழுக்காட்டையும் எட்டியுள்ளன. உலக நிதித்துறை நெருக்கடியால் 2009 ஆம் ஆண்டு வரை  4 கோடியே 30 லட்சம் மக்கள் வேலை யிழந்துள்ளனர் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு(ஐ.எல்.ஓ) கணித்துள்ளது. மேலும், நீண்டகால வேலையின்மையை நோக்கி அழைத்துச் சென்றுள்ளது என்றும் கூறியுள்ளது.
 
(8) பத்தி 3.5 : மூலதனம் தொகுதி 3ல் மார்க்ஸ் இவ்வாறு எழுது கிறார்: அனைத்து நெருக்கடிகளுக்கும் இறுதியான காரணமாக வறுமையும், மக்களின் நுகர்வு வரையறைக்கு உட்பட்டதாக இருப்பதும்தான். முதலாளித்துவ உற்பத்தியின் இயக்கம், உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுப்பதாகவே இருப்பினும், அதுவே சமூகத் தின் ஒட்டு மொத்த நுகர்வு சக்தியின் அளவினையும் கட்டுப்படுத்து கிறது.  
 
(9) பத்தி 3.6 : தகுதியற்ற (சப் பிரைம்) கடன் என்பது பிரதான வட்டியை விடக் குறைவான வட்டியில் கடன்களைத் தருவதாகும். துவக்கத்தில் கடன் வாங்குபவர்களை ஈர்த்துவிட்டு, பின்னர் வட்டியை அதிகப்படுத்தும் உத்தியாகும். வாங்கிய கடனைக் குறித்த காலத்தில் செலுத்த முடியாதவர்களைக் குறிவைத்தே இந்தக் கடன்கள் வழங்கப்பட்டன. கடன் சந்தையில் இடம் பிடிக்க முடியாதவர்களுக்குக் கடன் கொடுப்பதை மனதில் கொண்டே இது தரப்பட்டது. 
 
(10) பத்தி 3.7 : உற்பத்தி மற்றும் நுகர்வு பற்றி மார்க்ஸ் இவ்வாறு கூறுகிறார் : உற்பத்தி என்பது தேவைக்கான பொருளை மட்டு மல்ல, பொருளுக்கான தேவையினையும் வழங்குகிறது. இயற்கையி லிருந்து உடனடியாகக் கிடைக்கும் பக்குவமற்ற பொருட்களையே நுகரும் நிலையிலிருந்து விடுபடும்போது, புதிய இலக்கு குறித்த உந்துதலாக அது மாறுகிறது. அது அப்படி நிகழ்ந்திராவிட்டால், நுகர்வு என்பது அப்படியே முடங்கிப் போயிருக்கும். தனது இலக்காக நுகர்வு எதை உணர்கிறதோ, அது நுகர்வு குறித்த சிந்தனையின் மூலம் உருவாகிறது. மற்ற எந்த உற்பத்திப் பொரு ளையும் போன்றே, கலையின் நோக்கு அதை உணர்ந்து ரசிக்கும் ஒரு மக்கள் பகுதியினை உருவாக்குகிறது. எனவே, உற்பத்தி என்பது மனிதனுக்காக பொருளை உற்பத்தி செய்யும்போதே, பொருட் களுக்கான மனிதனையும் உற்பத்தி செய்கிறது. 
 
இவ்வாறு உற்பத்தி (1) நுகர்வுக்கான பொருளை உருவாக்குவதன் மூலமும், (2) நுகர்வின் தன்மையினைத் தீர்மானிப்பதன் மூலமும், (3) நுகர்பவரின் உணர்வின் அடிப்படையில் தேவை குறித்த சிந்தனைகளை உருவாக்குவதன் மூலமும், நுகர்வினை உருவாக்குகிறது. இவ்வாறு, நுகர்விற்கான பொருளை, நுகர்வின் தன்மையினை, நுகர்விற்கான உந்துதலை அது உருவாக்குகிறது. (க்ரண்டிரஸ்ஸே, பக்கம் 92)
 
(11) பத்தி 3.7 : டெரிவேடிவ்ஸ் என்பது பல்வேறு ஊக வணிகங் களை மேற்கொள்வதற்கான நிழல் நிதிப் பத்திரங்களாகும். ஃப்யூச் சர்ஸ், ஆப்ஷன்ஸ், ஃபார்வர்ட் வர்த்தகம் என்பவையெல்லாம் இதில் அடங்கும். பங்குச்சந்தையில் ஒருவர் பங்கை வாங்கினாலொ அல்லது விற்றாலொ அது உண்மையான வர்த்தகமாகும். இருந் தாலும், ஒருவர் பங்கை வாங்குவதற்கான தனது விருப்பத்தை வாங்கினாலொ அல்லது விற்றாலொ அதற்கு டெரிவேடிவ் வர்த் தகம் என்று பொருள். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், வர்த் தகத்தில் ஈடுபடும் பங்கு அவருக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. அதேபோல்,  பங்கிற்கான முழுமை யான தொகையை வாங்குபவர் செலுத்த வேண்டியதுமில்லை. உலகப் பண்டச் சந்தையில், உணவு மற்றும் எண்ணெய் விலைகளில் இத்தகைய ஊக வணிகம் முழுமையான நாசத்தை ஏற்படுத்தி யுள்ளது. 
 
இத்தகைய ஊக வணிகப் பத்திரங்கள் மூட்டை கட்டப்பட்டு, இந்த நிதி நிறுவனங்களால் விற்கப்பட்டு அல்லது வாங்கப்பட்டு, அத்தகைய ஊக நிதிப்பரிமாற்றங்களை உலக நிதியமைப்போடு இணைக்கப் வைக்கப்படுகிறது. இதனால், கடன்கள் திரும்பவும் வராததால் ஒரு வங்கி சரிவடைந்தது என்பதைக் காட்டிலும், தகுதியற்ற(சப்-பிரைம்) கடன்கள் ஒட்டு மொத்த நிதியமைப்பையே நெருக்கடியில் தள்ளிவிட்டது. இத்தகைய ஊக வர்த்தகத்தின் பகாசுர வளர்ச்சியை 2008 ஆம் ஆண்டின் இறுதியில் சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேசத் தீர்வாணைய வங்கி வெளியிட்ட புள்ளிவிபரங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம். உலகம் முழுவதும் நடந்துள்ள இந்த டெரிவேடிவ் ஊக வணிகத்தின்   மதிப்பு 680 டிரில்லியன் டாலர். 2002 ஆம் ஆண்டில் இது 106 டிரில்லியன் டாலராக இருந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு சொற்ப அளவில்தான் இது இருந்தது. அபாயமான நிலைமைகளைக் குறைக்கவும், நிதிப்பிரச்சனைகளைப் போக்கவுமே இந்த ஏற்பாடு என்று  கோட்பாட்டளவில் கருதப் பட்டாலும், ஒப்பந்தங்கள் மூலம்  நிலையற்ற தன்மையை கிளப்பி விட்டதோடு, அவற்றிற்கு நிறுவனங்கள் எவ்வளவு மதிப்பு தரும் என் சந்தேகம் எழுந்ததால் உண்மையில் ஆபத்தான நிலைமையினையே அது ஏற்படுத்தியது.  இந்த நிழல் பொருளாதாரம் உலகின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 10 மடங்கு அதிகமான தாகும்(65 டிரில்லியன் டாலர்) மற்றும் உலகின் பங்குச்சந்தைகளில் உண்மையாகவே நடைபெறும் வர்த்தகத்தை விட ஆறு மடங்கு அதிகமாகும்(100 டிரில்லியன் டாலர்). 
 
உலக அளவில், பங்குச்சந்தையில் பதிவு பெற்ற கம்பெனிகளின் மொத்த சந்தை மூலதன மதிப்பாக்கம் ஜனவரி 2007ல் 1.2 டிரில்லியன் டாலராக இருந்தது. மே 2008ல் இது 57.5 டிரில்லியன் டாலராக உயர்ந்தது. ஆனால், செப்டம்பர் 2008ல் 47 டிரில்லியன் என  வீழ்ச்சியடைந்தது. ஆகஸ்டு 2011ல் உலகின் சந்தை மூலதன மதிப்பாக்கம் என்பது 51.61 டிரில்லியன் டாலராகும். ஆகஸ்டு 2011ல் பங்குகளின் மதிப்பு 44.47 டிரில்லியன் டாலராக இருந்தது. ஜனவரி-ஆகஸ்டு 2011 காலகட்டத்தில் இடப்பட்ட முதலீட்டின் அளவு 159.9 பில்லியன் டாலராகும். இப்படித்தான் ஏகாதிபத்திய உலகமயம் தனது லாபப் பெருக்கத்தை அதிகரித்துக் கொண்டது. இதுதான் 2008 ஆண்டில் வெடித்த ஊகக் குமிழி வெடிப்பில் கொண்டு போய்விட்டது. தலையிலிருந்து கால் வரையிலும், ஒவ்வொரு நுண்துளையி லிருந்தும், ரத்தம் மற்றும் அழுக்கோடு ஒவ்வொரு சொட்டிலும் மூலதனம் என்பது வருகிறது. இது மூலதனம் நூலில், தொழில் மூலதனத்தின் துவக்கம் பற்றிய தனது அத்தியாயத்தை நிறைவு செய்கையில் மார்க்ஸ் குறிப்பிட்டது. இந்த மேற்கோளுக்கு ஆதரவாக தொழிலாளியும், தொழிற்சங்கத் தலைவருமான டி.ஜே.டன்னிங் கூறியதை (தனது ஆய்வை உறுதி செய்ய தொழி லாளர்கள் எழுதுவதையும், அவர்களின் அனுபவத்தையும் கவனத்தில் கொள்வது மார்க்சின் வழக்கம்) அடிக்குறிப்பாக வைக்கிறார் : போதிய லாபம் இருந்தால் மூலதனம் மிகவும் துணிவு கொள்ளும். உறுதியான பத்து விழுக்காடு லாபம் கிடைத்தல், அது எங்கு வேண்டுமானாலும் செல்லும். 20 விழுக்காடு என்பது அதன் ஆர்வத்தைத் தூண்டும். 50 விழுக்காடு அதற்கு துடுக்குத்தனத்தினை  ஏற்பபடுத்தும். நூறு விழுக்காடு லாபம் என்றால் அனைத்து மனிதச் சட்டங்களையும் நசுக்கத் தயாராகிவிடும். 300 விழுக்காடு லாபம் என்றால் எந்த ஒரு குற்றத்தையும் விட்டுவைக்காமல், வாய்ப்பு கிடைத்தால் சொந்த முதலாளியையே கூட தூக்கிலிடத்  தயங்காது.
 
(12) பத்தி 3.12 : 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், முதலீடு  அதிகரிப்பு, கடன் உதவி  மற்றும் பிற உறுதிமொழிகளோடு 12 டிரில்லியன் டாலருக்கு மேல் நிறுவனங்களை மீட்பதற்காக அவற்றுக்கு அமெரிக்க அரசு வழங்கியது. 2007/2008ல் அமெரிக்க அரசின் மீட்புப்பணத்தைப் பெரும் அளவில் பெற்றவற்றில், ஒன்பது நிதி நிறுவனங்கள், 2008 ஆம் ஆண்டின் துவக்கத்தில் தங்களது 5 ஆயிரம் வர்த்தகர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு தலைக்கு பத்து லட்சம் டாலர்களுக்கு மேல் போனஸ் வழங்கின. அவர்களில் சுமார் 5 ஆயிரம் பேர், தொழிற்துறையின் ஒரு சிறு குழுவினர், போனசாக மட்டும் 5 பில்லியன் டாலர் பணத்தைப் பெற்றனர். கோல்டுமேன் நிறுவனத்தில் 200 பேருக்குக் கூட்டாக சுமார் 1 பில்லியன் டாலர் பணம் தரப்பட்டது. மார்கன் ஸ்டான்லியில், 101 பேர் 777 மில்லியன் டாலரைப் பகிர்ந்து கொண்டனர். இவ்வாறு போனஸ் தந்த இந்த ஒன்பது வங்கிகளும் மீட்புப்பணமாக பெற்ற பணம் 32.6 பில்லியன் டாலர். அதேவேளையில் அந்த வங்கிகளின் இழப்பு 81 பில்லியன் டாலராக இருந்தது. 
 
உதாரணமாக, மார்கன் ஸ்டான்லியில்,  2008 ஆம் ஆண்டில் பெறப்பட்ட இழப்பீடு வங்கியின் லாபத்தை விட ஏழு மடங்கு அதிகமாக இருந்தது. 2004 மற்றும் 2005ல், பங்குச்சந்தைகள் லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த அந்தக் காலத்தில், இழப்பீட்டுக்காக தனது லாபத்தில் இரு மடங்குதான் மார்கன் ஸ்டான்லி செலவிட்டது. ஸ13 பத்தி 3.13 : 2010 ஆம் ஆண்டின் மனித வள மேம்பாட்டு அறிக்கையின் படி, உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் என்பது, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்தது. சிலி, மெக்சிகோ மற்றும் பெரு நாடுகளில் கணிசமான சரிவு ஏற்பட்டது. 2008 ஆம் ஆண்டில் 5 விழுக்காடு வளர்ச்சி என்பதிலிருந்து, 2009 ஆம் ஆண்டில் மிகவும் குறைவாக 2 விழுக்காடு வளர்ச்சி என்று குறைந்தாலும், சஹாரா வுக்குத் தெற்கேயுள்ள ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொண்டன. 2009 ஆம் ஆண்டில், வளர்ச்சியடைந்த நாடுகளின் வருடாந்திர வளர்ச்சியில் ஆறு விழுக்காடு சரிவு ஏற்பட்டு -3.4 விழுக்காடாகக் குறைந்தது. ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா ஆகிய பகுதிகளில் உள்ள சில நாடுகள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன போல் தோன்றுகிறது. முன்னாள் சோவியத் யூனியனின் பொருளாதாரங்கள் 2008 ஆம் ஆண்டில் 5 விழுக் காட்டிற்கு மேல் வளர்ச்சி கண்டிருந்தன. அவை கடுமையாகப் பாதிக் கப்பட்டு ஏழு விழுக்காட்டிற்கும் மேல் சரிவைச் சந்தித்தன. குறிப் பிடத்தக்க அளவில் இந்த நாடுகளில் வறுமையும் வளர்ந்தது. 40 விழுக்காடு நாடுகள் வளர்ச்சி குறைவதை எதிர்நோக்கியுள்ளன. இந்த நாடுகளில் 2009 ஆம் ஆண்டில் வறுமை பெருகியிருந்தது. 
 
மேலும் பொருளாதார தள்ளாட்டத்தை நிர்வகிக்க முடியாத அளவுக்கு, நிதி மற்றும் அமைப்பு ரீதியான பலம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே இருந்தது. வளர்ச்சியைத் தடுக்கும் அளவுக்கு நீண்ட கால செலவினம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதால், குழந்தைகள் இறப்பு மற்றும் ஊட்டச்சத்துக்குறைவு போன்றவற்றை இந்த நெருக்கடிகள் அதிகப்படுத்தின. அண்மையில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் ஆப்பிரிக்காவில் குறைந்தது 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை குழந்தைகள் இறக்க நேரிடும் என்று மதிப்பிடப்படுகிறது. கடுமை யான பட்டினியால் துயரப்படுவோர் பட்டியலில் மேலும் 9 கோடி மக்கள் சேர்க்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை நூறு கோடியைத் தொட்டுவிட்டது. உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பல நாடுகளில் உணவுக்கலவரங்கள் நடந்துள்ளன. இது நெருக்கடியால் நேர்ந்த மற்றொரு பாதிப்பாகும்.
 
(14) பத்தி 3.14 : தொடர்ந்து உற்பத்தியிலும், செல்வத்திலும் அபரி மிதமான வளர்ச்சி ஏற்பட்ட போதிலும், அமெரிக்காவில்  விவ சாயம் அல்லாத தனியார் பணியில் இருப்பவர்களின் உண்மையான ஊதிய விகிதம் 1967 ஆம் ஆண்டில் என்ன இருந்ததோ, அதுதான் 2006 ஆம் ஆண்டிலும் இருந்தது. 2000-07ல், அமெரிக்கப் பொரு ளாதாரத்தில் உற்பத்தி வளர்ச்சி 2.2 விழுக்காடாக இருந்தது. ஆனால் நடுத்தர மக்களின் மணிநேர சராசரி ஊதிய வளர்ச்சியோ -0.1 மட்டுமே. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1970 ஆம் ஆண்டில் 53 விழுக்காடாக இருந்த கூலி மற்றும் ஊதியத்தின் அளவு, சரிந்து,  2005 ஆம் ஆண்டில் 46 விழுக்காடாகக் குறைந்துவிட்டது. ஆனால் இந்தப் போக்குகளை மீறும் வகையிலொ என்னவோ, நுகர்வின் அளவு அதிகரித்துள்ளது. 1960களின் துவக்கத்தில் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 60 விழுக்காடாக இருந்த நுகர்வு, 2007 ஆம் ஆண்டில் 70 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
 
(15) பத்தி 4.3 : பாதுகாப்புத் திட்ட வழிகாட்டு என்று பென்டகன் வெளியிட்ட ராணுவ உத்தி பற்றிய கேந்திரமான ஆவணத்தில் இது முதன்முறையாக விளக்கிச் சொல்லப்பட்டுள்ளது. உலகின் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிரந்தரமாக்கும் உத்தியை இது வகுத்திருக்கிறது. இது இவ்வாறு கூறுகிறது : புதிய போட்டியாளர் மீண்டும் எழுவதைத் தடுப்பதே நமது முதல் நோக்கமாகும்…. அத்தகைய நிலை, முன்பாக சோவியத் யூனியன் ஏற்படுத்தியதைப் போன்ற அபாயத்தை முன்னிறுத்தும். அதனால் ஒரு பிரதேசத்தில் செல்வாக்கு செலுத்தும் விரோதமான சக்தி ஒன்று உருவாவதை நாம் தடுக்க வேண்டும். அத்தகைய சக்திகளிடம் இருக்கும் ஆதாரங் களை ஒருங்கிணைத்து நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண் டாலே, உலக அளவில் சக்தியாக இருப்பதற்குப் போதுமான தாகும். 2000ஆம் ஆண்டிற்கான அதிபர் தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த போது பெருமளவு மேற்கோள் காட்டப்பட்ட ஃபாரின் அஃபயர்ஸ் என்ற சஞ்சிகையில் எழுதப்பட்ட கட்டுரையில் கான்டிலிசா ரைஸ் இக்கொள்கையை விளக்கியிருந்தார். அதில் அவர் சொல்கிறார், சீனா ஒரு பெரும் சக்தியாகும். இன்னும் தீர்க்கப் படாத, குறிப்பாக தைவான் பற்றியது உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் உள்ளன… ஆசிய-பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை சீனா கடுமையாக எதிர்க்கிறது. இந்தக் காரணங் களுக்காக, அவர் சொல்கிறார் : சீனா அப்படியே தேங்கி நிற்கும் சக்தி அல்ல;  ஆசியாவின் பலாபலங்களை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் ஆர்வம் அதற்கு உள்ளது. ஒருமுறை கிளிண்டன் நிர்வாகம், சீனாவை கேந்திரமான கூட்டாளி என்று அழைத்தது.  ஆனால், அது கேந்திரக் கூட்டளி அல்ல. மாறாக, கேந்திரப் போட்டியாளர் என்றே குறிப்பிட வேண்டும்.  பிரதேச சக்தியாகச் சீனா வளர்வதைத் தடுக்கும் உத்தியைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக அவசியம் என்று அவர் வாதாடுகிறார். குறிப்பாக, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடனான ஒத்துழைப்பை அமெரிக்கா மேலும் ஆழப்படுத்த வேண்டும்.,. இப்பகுதியில் வலுவான ராணுவ பலத்தை வைத்திருக்கவும் வேண்டும். பிராந்திய சமநிலையில் இந்தியாவின் பாத்திரத்தையும் வாஷிங்டன் கூர்ந்து கவனிக்க வேண்டும். மேலும், சீனாவுக்கு எதிரான கூட்டணியில் அதையும் இணைக்க வேண்டும்.
 
அமெரிக்காவில் 9/11 பயங்கரவாத தாக்குதல் நடந்தபிறகு இந்தக் கொள்கை வழிகாட்டுதலுக்கு வலு கிடைத்தது. நமது கட்சி மாநாடுகளின் தீர்மானங்களில் குறிப்பிட்டபடி, கம்யூனிசத்திற்கு எதிரான போர் என்கிற பனிப்போர்க்கால முழக்கத்திற்குப் பதிலாக பயங்கரவாதத்திற்கெதிரான சர்வதேசப் போர் என்ற முழக்கம் முன் வைக்கப்படுகிறது. முந்திக்கொண்டு தாங்களே முதல் தாக்குதல் நடத்தும் கொள்கையை முன்வைத்து புஷ் இவ்வாறு அறிவித்தார் : நமது நாட்டுக்கு அவர்கள் வருவதற்காகக் காத்திராமல், அந்நிய மண்ணிலேயே எதிரிகளோடு போர் புரிகிறோம். உலகத்தால் நாம் வடிவமைக்கப் படுவதைவிட, உலகை நாம் வடிவமைப்பதையே விரும்புகிறோம்.
 
(16) பத்தி 4.3 : இன்றைய தினம் உலகம் முழுவதும் 132 நாடுகளில் 702 ராணுவத் தளங்களை அமெரிக்கா வைத்துள்ளது.  இயங்கக் கூடிய நிலையில் உள்ள பத்தாயிரம் அணுஆயுதம் பொருத்தப்பட்ட ஏவுகணைகளும், அதில் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்  2 ஆயிரம் ஏவுகணைகளும் அந்நாட்டிடம் உள்ளது. தனது ஆட்சிக் காலத்தில், அமெரிக்கா போரில் இருக்கிறது என்று புஷ் எழுப்பிய கோஷம், அமெரிக்கக் கொள்கையில் செல்வாக்கு செலுத்தியது. இயல்பாகவே இந்த அணுகுமுறை ராணுவச் செலவை அதிகரித்தது. 1989 ஆம் ஆண்டில் அமெரிக்க ராணுவச் செலவு 304.08 பில்லியன் டாலர். 1999 ஆம் ஆண்டில் இந்தச் செலவு 280.96 பில்லியன் டாலராகக் குறைந்தது. ஆனால் தற்போது 1.14 இரில்லியன் டாலராக எகிறியுள்ளது. பனிப்போர் காலத்தில் ஒட்டுமொத்த உலக ராணுவச் செலவில் அமெரிக்க செய்த செலவு 36 விழுக்காடாக இருந்தது. ரஷ்யாவின் செலவு 23.1 விழுக்காடாகும். 2008 ஆம் ஆண்டில், உலக ராணுவச் செலவில் அமெரிக்காவின் செலவு 41.5 ஆக உயர்ந்துள்ளது.
 
(17) பத்தி 4.3 : பனிப்போருக்குப் பிந்தைய காலத்தில் உலக மேலாதிக்கத்தை உருவாக்கும் நோக்கத்துடனான புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான திட்டத்தின் முக்கியமான அங்கமாக நேட்டோ விரிவாக்கம் அமைந்தது. ஒட்டுமொத்த உலகத்தை உள்ளடக்கும் வகையில் நேட்டோவின் சாசனம் விரிவாக்கப்பட்டது. ஏகாதிபத்திய மேலாதிக்கத்தைக் கொண்டு வருவதற்கான அரசியல்-பாதுகாப்புக் கருவியாக இது வடிவமைக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டில் இது உருவாக்கிய புதிய ராணுவக் கோட்பாட்டில், இரண்டு முக்கியமான நோக்கங்கள் இருந்தன. முன்னாள் சோவியத் குடியரசுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை நேட்டோவுக்குள் கொண்டு வந்துவிட வேண்டுமென்பது முதல் நோக்கமாகும். தங்களுக்கு ஆபத்து இருக்கிறது என்ற கருத்தை முன்வைத்து உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும ராணுவத்தை வைத்து முதலில் தாக்குதல் தொடுக்கும்  உரிமையை எடுத்துக் கொள்ளும் நோக்கம் இரண்டாவதாகும். 
 
(18) பத்தி 4.4 : தன்னுடைய கச்சா எண்ணெய்த் தேவையில் 51 விழுக்காடு, அதாவது ஒரு நாளைக்கு 1 கோடியே 95 லட்சம் பீப்பாய்களை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. எரிபொருள் தகவல் நிர்வாகம் என்ற அமைப்பின் மதிப்பீட்டின்படி 2020 ஆம் ஆண்டுக்குள் தனது கச்சா எண்ணெய்த் தேவையில் 61 விழுக்காடு, அதாவது ஒரு நாளைக்கு 2 கோடியே 58 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை அமெரிக்காவுக்கு ஏற்படும். காஸ்பியன் பகுதி எண்ணெய் இருப்புதான் உலகிலேயே மூன்றாவது பெரிய இருப்பாக (மேற்கு சைபீரியா மற்றும் பெர்சியா வளைகுடா ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக) இருக்கலாம். அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்குள் பெர்சிய வளைகுடா எண்ணெயை ஈடுகட்டுவதாக அமையும். காஸ்பியன் கடலில் இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு மட்டுமே இப்பகுதியில் உள்ள ஒரேயொரு ஹைட்ரோகார்பன் இருப்பு என்றில்லை. துர்க்மெனிஸ்தானின் காரகும் பாலைவனம்தான் உலகிலேயே மூன்றாவது அதிக எரிவாயு இருப்பைக் கொண்டிருக்கிறது. 3 லட்சம் கோடி கன மீட்டர் அளவிலான எரிவாயு இருப்பு இங்குள்ளது. மேலும் 600 கோடி பீப்பாய் எண்ணெய் இருப்பு இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டி ருக்கிறது. பெருமளவிலான எரிவாயு இருப்பதோடு, காஸ்பியன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் 20 ஆயிரம் கோடி பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என்று தற்போது வெளியாகியுள்ள மதிப்பீடுகள் கூறுகின்றன. அலாஸ்காவின் வடக்குச் சரிவுப்பகுதியில் உள்ளதை விட இது 33 மடங்கு அதிகம். இதனுடைய இன்றைய மதிப்பு 4 டிரில்லியன் டாலர் ஆகும். அமெரிக்காவின் எரிபொருள் தேவை யில் 30 ஆண்டுகளுக்கும், அதற்கு மேலும் கூட இது போதுமானது. இங்கு இவ்வளவு எண்ணெய் இருப்பதும், அவற்றை ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்பு இருப்பதும் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு கேந்திர ரீதியான கவலைகளை அளித்துள்ளது. 
 
காகசஸ் மற்றும் மத்திய ஆசியாவி லிருந்து ஜப்பான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகம் செய்ய குழாய்களை அமைக்கும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் செய்வதால், இந்தக் கவலைகள் ராணுவ ரீதியானதாக மாறி விடும்.  ஆப்கானிஸ்தான் குறித்து டிசம்பர் 2009ல் அமெரிக்க அரசின் எரி பொருள் தகவல் விவர அறிக்கை இவ்வாறு கூறியது: எரி பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆப்கானிஸ்தானுக்கு இருக்கும் முக்கியத்துவம், அதன் பூகோள ரீதியான நிலையால் கிடைத்தது. மத்திய ஆசியாவிலிருந்து அரபிக்கடலுக்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்ய போக்குவரத்துப் பாதையாக இது மாறக்கூடிய சாத்தியமுள்ளதே இதற்குக் காரணமாகும்.
 
காஸ்பியன் கடல் பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களின் மதிப்பு 4 டிரில்லியன் டாலர் மதிப்புள்ளதாகும். அமெரிக்காவுக்கு, காஸ்பியன் பகுதி அளவுக்கு முக்கியமான பகுதியாக இன்றைக்கு வேறு எந்த பகுதியும் எழவில்லை.
 
(19) பத்தி 4.4 : அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆப்கானிஸ்தானில் நடத்தப்படும் போர் மற்றும் ஆஃப்-பாக் கொள்கை விஷயத்தில் இதுதான் உண்மையான பிரச்சனையாகும். எனினும், பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என்ற முழக்கத்தை வைத்து நியாயப் படுத்துவதாகவே இது இருந்தது. அமெரிக்கப் பகாசுர எண்ணெய் நிறுவனங்களின் நலன்களை முன்னிறுத்த, கோடானு கோடி டாலர் மதிப்பிலான எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் அரபிக் கடலை அடைவதையும், அப்பகுதியில் உள்ள ஆதாரங்களின் மீது வலுவான கட்டுப்பாட்டை உருவாக்குவதையும் உறுதி செய்வதற்கு, ஒன்றுபட்ட ஆப்கானிஸ்தான் அரசின் வலுவான கூட்டாளி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தேவைப்படுகிறது என்பது மட்டும் தெளிவாகிறது.
 
(20) பத்தி 4.12 : எடுத்துக்காட்டாக, பெரு நிறுவனமான டைம், மற்றொரு பகாசுர எண்டர்டைன்மென்ட் நிறுவனமான வார்னர் பிரதர்சுடன் ஏற்கெனவே இணைந்தது. தற்போது டைம்-வார்னர் நிறுவனத்தை, 164 மில்லியன் டாலர் கொடுத்து மிகப்பெரும் செய்தி நிறுவனமான அமெரிக்கன் ஆன்லைன் லிமிடெட்(ஏ.ஓ.எல்) விலைக்கு வாங்கியது. இதனால் உலகிலேயே மிகப்பெரிய தகவல் தொடர்பு, கேளிக்கை மற்றும் இணையதள நிறுவனமாக ஏ.ஓ.எல் உருவானது. இதன் இன்றைய மதிப்பு 68 பில்லியன் டாலர். இதேபோல், வால்ட் டிஸ்னியும் மார்வெல்(ஸ்பைடர்மேன் புகழ்) நிறுவனத்தை தற்போது வாங்கியிருக்கிறது. உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கலாச்சாரப் பண்டங்கள் பெரும் அளவு லாபத்தை ஈட்டுவதற்காக இறக்கிவிடப் பட்டிருக்கின்றன. ஜனவரி 2011ல் , காம்காஸ்ட் கார்ப் என்ற நிறுவனம் என்.பி.சி. என்ற நிறுவனத்தை  விலைக்கு வாங்கியது. இதன் மூலம் 30 பில்லியன் டலர் மதிப்பிலான ஊடக நிறுவனம் உருவானது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை மட்டும் கட்டுப்படுத்தாமல், அவை எவ்வாறு மக்களின் வீடுகளுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் இது தீர்மானித்தது. வீடியோ மற்றும் வீடுகளுக்கு இணையதள சேவையை வழங்குவதில் அமெரிக்காவில் முதலிடத்தில் இருக்கும் நிறுவனமான காம்காஸ்ட் கார்ப்(இந்த நிறுவனத்திற்கு 2 கோடியே 30 லட்சம் வீடியோ சந்தாதாரர்களும், 1 கோடியே 70 லட்சம் இணையதள சந்தாதாரர்களும் உள்ளனர்) என்.பி.சி. யுனிவர்சல் நிறுவனத்தின் 51 விழுக்காடு பங்குகளை ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திடமிருந்து விலைக்கு வாங்கியது. புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனத்திற்கு என்.பி.சி. யுனிவர்சல் எல்.எல்.சி என்று பெயரிடப்பட்டது. என்.பி.சி. ஒளிபரப்பு நிலையங்கள், பிரேவோ, யு.எஸ்.ஏ  இ  போன்ற கேபிள் அலை வரிசைகள், யுனிவர்சல் திரைப்பட ஸ்டுடியோ மற்றும் பல்வேறு உல்லாசப் பூங்காக்கள் உள்ளிட்டவை இதன் சொத்துக்களாக இருந்தன.
 
இது தொடர்பான இந்திய நிகழ்வுகள்
 
ரிலையன்ஸ் கேளிக்கை நிறுவனம் (ரிலையன்ஸ் பிக் கேளிக்கை நிறுவனம் என்று முன்பு அழைக்கப்பட்டது) என்பது ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்திற்கு முழு உரிமையான துணை நிறுவனமாகும். ஊடகம் மற்றும் கேளிக்கை வணிகம், செய்திப் பரிமாற்றத் தளங்கள் போன்றவை இவற்றிற்கு சொந்தமானவை யாகும். செய்திப் பரிமாற்றத் தளத்தில் திரைப்படங்கள், இசை, விளையாட்டு, இணையதளம் மற்றும் அலைபேசித் தளங்கள் போன்றவற்றில் முன்முயற்சி எடுக்கப்பட்டது. டிஜிட்டல் திரைப் படம், ஐபிடிவி, டி.டி.எச் மற்றும் மொபைல் டிவி உள்ளிட்டவற்றை நேரடியாக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. 2005 ஆம் ஆண்டில், திரைப்படம் உருவாக்குதல், தயாரிப்பு, காட்சிப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் திரைப்படம் போன்றவற்றில் இயங்கிய இந்தியாவின் பெரிய கேளிக்கை நிறுவனங்களில் ஒன்றான அட்லாப்ஸ் பிலிம்ஸ் லிமிடெட் நிறுவனத்தை ரிலையன்ஸ்ஸ் ஏடிஏ குழுமம் விலைக்கு வாங்கியது. ஏலத்தில் 45 நிலையங்களை விலைக்கு வாங்கிய பின்னர், பிக் 92.7 எஃப்.எம்.தான் இந்தியாவிலேயே பெரிய தனியார் எப்.எம். ரேடியோ நிறுவனமாக மாறியது. பிப்.28, 2007 அன்று 12 ரேடியோ நிலையங்களை நாடு முழுவதும் இந்த நிறுவனம் அமைத்திருந்தது. பிக் சினிமாஸ் நிறுவனம்தான் இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்கு நிறுவனமாகும். இந்தியா, அமெரிக்கா, மலேசியா மற்றும் நெதர்லாந்து என்று 516 திரையரங்குகள் இந்த நிறுவனத் திற்கு சொந்தமாக உள்ளன. இந்தத் திரையரங்குகள் 3 கோடியே 50 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மட்டும் 253 திரையரங்குகளைக் கொண்டு பிக் சினிமாஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. பெரிய படங்கள் தரும் வருமானத்தில் 10 முதல் 15 விழுக்காடு வரை இந்நிறுவனத்தின் திரையரங்குகளில் இருந்துதான் வருகிறது. பிக் ஃப்லிக்ஸ் நிறுவனத்தை வாங்குவதன் மூலம், யாரும் செல்வாக்கு செலுத்தாமல் இருந்த வாடகை வீடியோ வணிகத்தில் இந்த நிறுவனம் நுழைந்தது. ஏப்ரல் 2008ல் கலிபோர்னியாவின் பர்பேங்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் டிஜிட்டல் முறையில் திரைப்படங்களைப் புதுப்பிக்கும் நிறுவனமான டி.டி.எஸ் டிஜிட்டலை ரிலையன்ஸ் பிக் நிறுவனம் விலைக்கு வாங்கியது.
 
ஜூலை 15, 2009 அன்று ரிலையன்ஸ் பிக் நிறுவனமும், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கும் இணைந்து 825 மில்லியன் டாலர் செலவில் கூட்டாக ஒரு நிறுவனத்தை அமைப்பதாக அறிவிப்பு வெளியானது. அண்மையில், சிங்கப்பூரில் இருக்கும் 8 விழுக்காடு இந்தியர்களைக் குறிவைத்து பிக் 92.7 எப்.எம் வானொலி நிலையம் ஒன்றை அங்கு துவக்கியது. ஜன.15, 2010 அன்று எம்.ஜி.எம். நிறுவனத்தின் பங்கு களைப் பெறும் போட்டியில் ரிலையன்ஸ் இறங்கியதாகக் கூறப் பட்டது. ஏப்.5, 2010 அன்று கோட்மாஸ்டர்ஸ் என்ற நிறுவனத்தில் 50 விழுக்காடு பங்குகளை அவர்கள் பெற்றனர். ஈநாடு குழுமத்தின் பிராந்தியத் தொலைக்காட்சிகளில் 2,600 கோடி ரூபாய் முதலீட்டை ரிலையன்ஸ் செய்திருக்கிறது. டிவி18 குழுமத்தின் நெட்வொர்க்18 நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ஜன.3, 2012 அன்று அறிவிக்கும்போது இது தெரிய வந்தது. ஐந்து ஈடிவி பிராந்திய செய்தி சேனல்கள் மற்றும் ஐந்து பிராந்திய கேளிக்கை சேனல்கள் ஆகியவற்றில்  முழுமையாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொருளாதார நலன்கள் அடங்கியுள்ளன. ஈடிவி தெலுங்கு மற்றும் ஈடிவி தெலுங்கு செய்திகள் ஆகிய சேனல்களில் 49 விழுக்காடு பங்குகள் ரிலையன்ஸ் வசம் உள்ளன.
(21) பத்தி 5.1 : 14வது மாநாட்டுத் தீர்மானம் இவ்வாறு கூறுகிறது : 
 
2.22: இந்த நூற்றாண்டில், லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பலி கொண்ட இரண்டு காட்டுமிராண்டித்தனமான உலகப் போர்களில் மனிதகுலத்தை முதலாளித்துவம் தள்ளிவிட்டது.  மனிதாபிமானமற்ற மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள் வதற்காக அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து பயன்படுத்தியது. நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தும் அணுஆயுதப் போட்டியில் உலகத்தைத் தள்ளிவிட்டது. அது, சோசலிசத்தை நோக்கி மனித குலம் முன்னேறுவதைத் தடுப்பதற்காக எண்ணற்ற யுத்தங்களைத் தொடுத்தது, சுதந்திர நாடுகளின் உள்விவகாரங்களில் தலை யிட்டது. அரசுகளைக் கைப்பற்றும் சதிகளை ஏற்பாடு செய்தது. தனது நலன்களுக்கு சேவை செய்யும் வகையில் பிற்போக்குத் தனமான சர்வாதிகார ஆட்சிகளைத் திணித்தது. அதன் மிக மோச மான காட்டுமிராண்டித்தனமான வடிவம் பாசிச சர்வாதி காரங்களில் வெளிப்பட்டது.
 
2.23 : இன்னொரு பக்கத்தில் சோசலிசப் புரட்சிகளும், தேச விடுதலைப் போராட்டங்களும் மனித நாகரீகத்திற்கு ஒரு வளமான உள்ளடக்கத்தைச் சேர்ந்தன. பல நாடுகளில் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தமது வாழ்க்கையை தேசிய அடக்குமுறை இல்லாமலும், சுரண்டலிலிருந்து விடுபட்டும நடத்துவதைச் சாத்தியமாக்கின. இந்தத் தாக்கம், தேச விடுதலையையும், சமுதாய விடுதலையையும் நோக்கிச் செல்லும் மனித வளர்ச்சியின் எதிர்காலப் பாதையைத் தொடர்ந்து வகுத்துக் கொண்டிருக்கிறது. இருந்த போதிலும், இந்த நடைமுறை நீண்டகாலம் பிடிக்கக்கூடிய தாக, சிக்கலானதாக, மாறுதல்களும் திருப்பங்களும் கொண்டதாகத் தான் இருக்கும். ஆனால், முதலாளித்துவத்தி லிருந்து சோச லிசத்தை நோக்கி மாறிச் செல்வதே, இந்த சகாப்தத்தின் அடிப் படைத் திசைவழி யாகும்.
 
(22) பத்தி 5.5 : நமது 14வது மாநாட்டுத் தீர்மானம் இவ்வாறு குறிப் பிட்டது :
 
2.24 : எனினும் இந்த மாறுதல் காலத்தை உடனடியாக முதலாளித்துவம் தகர்ந்துவிடும் என்றும், உலக அளவில் சோசலிசம் வெற்றி பெறும் என்றும் மிக அப்பாவித்தனமாகப்  புரிந்து கொள்வது சரி செய்யப்பட வேண்டும். வர்க்க சமுதாயத்திலிருந்து வர்க்கமற்ற சமுதாயத்திற்கு மாறுகிற காலகட்டமாகிய சோசலிசம் அதன் இலக்கணப்படியே பார்த்தால் உலகளவில் முதலாளித் துவமும், சோசலிசமும் நீண்டகாலத்திற்கு நீடித்திருக்கும் என்பதை உள்ளடக்கியதாகும். இது, சுரண்டல் முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்க விரும்புகிற எதிர்ப்புரட்சி சக்திகளுக்கும், மனிதகுல விடுதலைக்காக நிற்கும் புரட்சிகர சக்திகளுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல் நடக்கும் காலமாகும். இந்தத் தொடர்ச்சி யான போராட்டம் உலக அளவிலும் சோசலிச நாடுகளுக்கு உள்ளேயும் நடப்பதாகும்.
 
5.3 (2) : இருப்பினும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வடிவங்கள் நிலையானதாகவோ அல்லது மாற்ற முடியாததாகவோ இருக்காது. சோசலிச சமுதாயம் வளர்ந்திடும்போது இதன் வடிவங்கள் பல்வேறுபட்ட கட்டங்களைக் கடந்து செல்லும்.
 
5.3 (3) : ஒரு கட்டத்திலிருந்து மற்றொன்றிற்கு மாறிச் செல்வதற்கான திறன் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும உள்ள வர்க்க சக்திகளின் அணிச்சேர்க்கை மற்றும் அதன் சரியான மதிப்பீடு ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. ஏகாதிபத்தியவாதிகளின் தலையீடுகள், உள்நாட்டு யுத்தம், பிறந்திருக்கும் சோசலிசத்தை அழிப்பதற்கான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த சூழ்நிலையில் பாட்டாளி வர்க்க அரசு எதிர்ப்புரட்சியை ஒடுக்கி சுரண்டல் சக்திகளை ஒழித்துக்கட்ட வேண்டியிருந்தது. இது மையப்படுத்தப்பட்ட அரசு அமைப்பை தேவையாக்கியது. திட்ட மிட்ட பொருளாதாரத்தைக் கட்டுவதற்கும் இது அவசியமாக இருந்தது. இருப்பினும், இந்தக் கட்டத்திற்குப்பிறகு சோசலிச அமைப்பு உறுதிப்படுத்தப்பட்டு, வர்க்க சக்திகளின் அணிச் சேர்க்கை இதற்கு சாதகமாக மாறிய நிலையில், ஜனநாயகத்தை விரிவுபடுத்தவும், புதிய முன்முயற்சிகளை திறந்துவிடுவதற்குமான வாய்ப்புகள் உருவாயின. துரதிருஷ்டவசமாக எதார்த்த நிலைமை யைத் தவறாக மதிப்பீடு செய்தது, பிந்தைய காலங்களிலும் அரசு அமைப்பை முந்தைய முறையிலேயே நடத்திச் செல்வதற்கு இட்டுச் சென்றது. இது பெருந்திரளாக மக்களைப் பங்குபெறச் செய்து சோசலிச ஜனநாயகத்தின் முழு சக்தியை விரிவுபடுத்தி, ஆழப் படுத்துவதை சாதிப்பதில் தோல்விக்கு இட்டுச் சென்றது மட்டு மல்லாது அதிகார வர்க்கப் போக்கு வளர்வது, சோசலிச சட்ட நீதிகள் மீறப்படுவது, தனிநபர் சுதந்திரம், உரிமைகள் ஒடுக்கப் படுவது போன்ற சீர்குலைவுகளுக்கும் வழிவகுத்தது. பாட்டாளி வர்க்க சர்வாதிகார வடிவத்தை உயர்ந்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் இயக்கம் என்பது சோசலிச ஜனநாயகத்தை முற்போக்கான முறையில் செழுமைப்படுத்த வேண்டுமென உணர்த்துகிறது.
 
5.3 (6) வடிவங்கள் தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பதால் ஒவ் வொரு சோசலிச நாட்டிலும் ஏற்படும் திட்டவட்டமான நிகழ்ச்சிப் போக்குளுக்கு ஏற்றாற்போல் தகவமைத்துக் கொள்ள வேண்டி யிருப்பதால் – இவை பல்வேறு சோசலிச நாடுகளிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இருக்கவும் முடியாது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் குறிப்பிட்ட வடிவம் ஒரு சோசலிச நாட்டின் திட்டவட்டமான சமூகப் பொருளாதார நிலைமைகள் மற்றும் இந்த நாடுகளின் வரலாற்றுப் பின்னணியைச் சார்ந்தே இருக்கும். லெனின் அரசும், புரட்சியும்  என்ற நூலில் பின்வருமாறு தெளிவாகக் கூறுகிறார் : முதலாளித்துவ அரசு களின் வடிவங்கள் மிகவும் வேறுபடுகின்றன. ஆனால் இவற்றின் உள்ளடக்கம் இந்த எல்லா அரசுகளிலும் ஒரேமாதிரித்தான் இருக்கிறது. இவை என்ன வடிவில் இருந்தாலும் இறுதியாக ஆராய்ந்து பார்த்தால் இவை தவிர்க்க முடியாதவாறு முத லாளித்துவ சர்வாதிகாரமாகவே உள்ளது. முதலாளித்துவத்தி லிருந்து கம்யூனிசத்திற்கு மாறிச் செல்ல நிச்சயமாக ஏராளமான, மாறுபட்ட அரசியல் வடிவங்களுக்கு உட்பட வேண்டும். ஆனால் இவற்றின் சாராம்சம் தவிர்க்க முடியாத வகையில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகவே  இருக்கும்(அழுத்தம் நம்முடையது).
 
(23) பத்தி 5.6 : நமது 14வது மாநாட்டுத் தீர்மானத்தில், சோவியத் யூனியனில், சோசலிசம் தகர்ந்து போனதற்கான காரணமாக, அதைக்கட்டுவதில் ஏற்பட்ட சில குறைபாடுகள் பற்றிய நமது புரிதலைக் கொடுத்துள்ளோம். பத்தி 5.1 முதல் 5.6.4 வரையிலான தீர்மானத்தில் இந்தக் குறைபாடுகளை விரிவாக விவாதித்து, இவ்வாறு முடிவுக்கு வந்தோம் : சோசலிசத்தின் கீழ் அரசு வர்க்க குணாம்சத்துடன் செயல்படத் தவறியது. சோசலிச ஜனநாயகத் தைப் பலப்படுத்துவதிலும், ஆழமாக்குவதிலும் தவறியது. பொரு ளாதார நிர்வாக முறையில் காலத்தே செய்ய வேண்டிய மாற்றங் களைச் செய்ய இயலவில்லை. புரட்சிகர ஒழுக்கமுறைத் தரங்களில் அரிப்பு ஏற்பட்டது. தத்துவார்த்தத் துறையில் இருந்த மோசமான திரிபுகள் ஆகிய இந்தத் தவறுகள் அனைத்தும் கட்சி மற்றும் அரசிடம் இருந்து மக்கள் அந்நியப்படுவது அதிகரிப்பதற்கான தளத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் உள்ள எதிர்ப்புரட்சி சக்திகள் சோசலிசத்தை ஒழித்துக் கட்டுவதற்கு இணைந்து செயல்பட வாய்ப்பு கிடைத்தது.
 
(24) பத்தி 6.4 : லெனின், தொகுப்பு நூல்கள், தொகுதி 33, பக்கம் 58,(அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது). லெனின் மேலும் கூறுகிறார் : சோசலிசத்தோடு ஒப்பிடுகையில் முதலாளித்துவம் என்பது கொடிய நஞ்சாகும். ஆனால், சிறு உற்பத்தி மற்றும் சிறு உற்பத்தி யாளர்கள் மறைவதால் உருவாகும் அதிகார வர்க்கத்தால் ஏற்படும் தீமை கொண்ட மத்தியக் காலத்துவத்துடன் ஒப்பிடும்போது, முதலாளித்துவம் ஒரு வரம்தான். சிறு உற்பத்தியிலிருந்து நாம் நேரடியாக சோசலிசத்திற்கு முன்னேற முடியவில்லை. இதனால் சிறு அளவிலான உற்பத்தி மற்றும் பரிமாற்றத்திற்கு சிறிது முதலாளித்துவம் தவிர்க்க முடியாததாகும். அதனால் நாம் முதலாளித்துவத்தை சிறிய உற்பத்திக்கும், சோசலித்திற்கும் இடையிலான தொடர்பாக, பாதையாக, உற்பத்திச் சக்திகளை அதிகரிக்கும் உத்தியாகப் பயன்படுத்த (குறிப்பாக, அரசு முதலாளித்துவத்தின் வழியில் அதை திருப்பிவிடவேண்டும்) வேண்டும். ஆனால், முதலாளித்துவத்தை மீண்டும் நிலைநிறுத்துவது என்று இதற்கு அர்த்தமாகுமா? புதிய பொருளாதாரக் கொள்கை காலகட்டத்தில் இதற்கு ஒளிவுமறைவில்லாமல் லெனின் பதிலளிக் கிறார். `இதற்கு என்ன அர்த்தம் என்றால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு முதலாளித்துவத்தை மீண்டும் உருவாக்குகிறோம் என்பதுதான். இதை வெளிப்படையாகவே செய்கிறோம். இது அரசு முதலாளித் துவம். மூலதனத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் முதலாளித்துவ நாட்டின் அரசு முதலாளித்துவத்திற்கும், பாட்டாளி வர்க்க ஆட்சியின் கீழ் இருக்கும் அரசு முதலாளிதுவத்திற்கும், கருத்தியல் ரீதியாக இரண்டு வேறுபாடுகள் உண்டு.  முதலாளித்துவ அரசில், அரசு முதலாளித்துவம் என்பது அரசால் அங்கீகரிக்கப்பட்டு, மற்றும் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருந்து, முதலாளித்துவத்தின் நலன்களுக்காகவும், உழைக்கும் வர்க்கத்திற்கு பாதகமாகவும் இருக்கக்கூடியதாகும். உழைக்கும் வர்க்க அரசில், அதே விஷயம் உழைக்கும் வர்க்கத்தின் நலன்களுக்காகச் செய்யப்படுகிறது. வலு குறையாமல் இருக்கும் முதலாளித்துவத்தை எதிர்கொள்ளவும், அதற்கு எதிராகப் போராடவும் இது உதவுகிறது. நாம் அந்நிய முதலாளித்துவத்திற்கும், அந்நிய முதலீட்டிற்கும் சலுகைகளை அளிக்க வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. நாட் டுடைமைத் தன்மையினைக் கொஞ்சம் கூடக் கைவிடாமல், நாம் சுரங்கங்கள், வனங்கள் மற்றும் எண்ணெய் வயல்கள் ஆகியவற்றை அந்நிய முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு விடமுடியும்.
 
அரசு முதலாளித்துவம் மற்றும் உற்பத்திச் சக்திகளை அதி விரைவில் விரிவாக்கம் செய்வதற்கான தேவையை வலியுறுத்தும் அதே வேளையில், அத்தகைய மாற்றத்திற்கான காலகட்டம் சோசலிச அரசுக்கு கொண்டு வரும் ஆபத்துகள் பற்றியும் அவர் எச்சரித்தார். அரசு முதலாளித்துவத்தைக் கட்டுவது என்பது போரைப் போன்றது என்று வர்ணிக்கிறார். லெனின் இவ்வாறு கூறுகிறார் : தற்போதைய போரில் பிரச்சனை என்னவென்றால், யார் வெற்றி பெறுவார்கள், நிலைமையை யார் முதலில் சாதக மாக்கிக் கொள்வார்கள்? கதவைத் திறந்து அல்லது பல கதவுகளைக் கூட (நமக்குத் தெரியாமல் பல கதவுகள், அதில் சில நாம் இல்லாம லேயே திறக்கப்படும். சில நம்மை மீறித் திறக்கப்படும்) திறந்து வைத்து நாம் உள்ளே வர அனுமதிக்கும் முதலாளித்துவவாதியா அல்லது உழைக்கும் வர்க்கத்தின் அரசு அதிகாரமா?(லெனின் நூல் திரட்டு, தொகுதி 33, பக்கம் 65)
 
அவர் மேலும் சொல்கிறார் : இந்தப் பிரச்சனையை நாம் நேரடியாக எதிர்கொள்ள வேண்டும் – யார் வெற்றி பெறுவார்? முதலில் அணிதிரள்வதில் முதலாளித்துவவாதிகள் வெற்றி பெறுவார்கள். அப்படி நடந்தால் முதலில் கம்யூனிஸ்டுகளை விரட்டி அடித்து விடுவார்கள். அதோடு கதை முடிந்துவிடும். அல்லது உழைக்கும் வர்க்கத்தின் அரசு அதிகாரம், விவசாயிகளின் உதவியோடு, அந்த கனவான்கள், முதலாளித்துவவாதிகள் மீது முறையாக கட்டுப்பாட்டை வைத்துக் கொள்வதில் வெற்றி கண்டு, அரசுக்கும், அரசுக்கு சேவை செய்யும் வகையிலும் தனக்குக் கீழ்ப்படிந்த முதலாளித்துவத்தை உருவாக்க வேண்டும். (நூல் திரட்டு, தொகுதி 33)
 
அக்டோபர் புரட்சியின் நான்காவது ஆண்டுவிழாவில் லெனினே இவ்வாறு குறிப்பிட்டார் : பெரும் ஆர்வத்தைச் சுமந்துகொண்டு, முதலில் அரசியல் ஆர்வத்தைக் கிளப்பிவிட்டு, பின்னர் மக்களின் ராணுவ ஆர்வத்தைக் கிளப்பிவிட்டு, அதன் மூலம் அரசியல் மற்றும் இராணுவ  இலக்குகளை அடைந்தது போல், பொருளாதார இலக்குகளையும் அடைந்து விடுவதென்று எதிர்பார்த்தோம். போதிய அளவு கருத்தில் கொள்ளாமல் அரசு உற்பத்தியையும், விநியோகத்தையும், ஒரு சிறு விவசாயி நாட்டில் (Small Peasant Country) கம்யூனிசப் பாணியில் உழைக்கும் வர்க்க அரசின் கட்டளையால் செய்துவிட முடியும் என்று நாம் எதிர்பார்த்தோம். அப்படி நம்பிவிட்டோம் என்று கூடச் சொல்ல லாம். நமது எண்ணம் தவறு என்று அனுபவம் நிரூபித்துவிட்டது. கம்யூனிசத்தை நோக்கி செல்வதற்கு முன்பாக. அதற்குத் தயாரிப்பதற்காக, பல ஆண்டுகள் செய்ய வேண்டிய முயற்சிகளுக்கு தயார் செய்வதற்காக, அரசு முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் போன்ற பல்வேறு மாற்றங்களின் நிலைகள் தேவை என்று தெரிகிறது. நேரடியாக ஆர்வத்தை மட்டும் நம்பியிராமல், பெரும் புரட்சி உருவாக்கும் ஆர்வத்தின் உதவியால், தனிப்பட்ட நலன்களின் அடிப்படையில், தனிப்பட்ட சலுகை மற்றும் வர்த்தகக் கோட்பாடுகளால் சிறு விவசாயிகளைக் கொண்ட இந்த நாட்டை சோசலிசத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையை அரசு முதலாளித்துவம் மூலமாகக் கட்டியமைக்கும் வேலையை முதலில் செய்ய வேண்டும். இல்லையென்றால், நாம் ஒருபோதும் கம்யூ னிசத்தை நோக்கிச் செல்ல முடியாது. கம்யூனிசத்தை நோக்கி லட்சோப லட்சம் மக்களைக் கொண்டு வர இயலாது. புரட்சியை வளர்த்தெடுக்கும் நோக்குள்ள பாதையில் கிடைத்த அனுபவம் இதைத்தான் கற்றுக் கொடுத்திருக்கிறது.  
 
(25) பத்தி 6.4 : 14வது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தத்து வார்த்தத் தீர்மானம் இவ்வாறு ஆய்வு செய்கிறது : சோசலிச நிர்மாண நடவடிக்கைகளுக்கான கால அளவு என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும். துவக்கத்தில் இருந்த வரலாற்றுப்பூர்வ நிலை களைப் பொறுத்து உடமைகளை சமுதாயமயமாக்கும் போக்கு நீண்ட காலக் கட்டங்களைக் கொண்டதாக இருக்கும். அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், கூட்டு அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், சிறு தனிநபர் சொத்துக்கள் என மாறுபட்ட உடைமை முறைகள் இருக்கின்றன. சொத்துக்களை சமுதாயமய மாக்கும் நடவடிக்கையின் வேகம் என்பது இந்த சோசலிச நாடுகளில் இருந்து பின்தங்கிய பொருளாதாரத்தின் ஆரம்ப கட்ட நிலை களைப் பொறுத்தே இருக்கும். மேலும் இது உள்நாட்டிற்குள் இருக்கும் வர்க்க சக்திகளின் திட்டவட்டமான பலாபலத்தையும் மற்றும் சர்வதேச அளவில் வர்க்க எதிரிகள் கொடுக்கும் நிர்ப் பந்தத்தையும் பொறுத்தே இருக்கும். வரலாற்றுச் சூழ்நிலை மற்றும் உற்பத்தி சக்திகள் ஏற்கனவே அடைந்துள்ள வளர்ச்சி கட்டத்திற்கு ஏற்றாற்போலவே இந்த நடவடிக்கையின் வேகம் இருக்க வேண்டும் என்பதே மிகச் சரியானதாகும். வர்க்க எதிரிகள் உள்நாட்டிற் குள்ளும், வெளிநாடுகளிலும் ஒன்றுபட்டு தாக்குதல் நடத்தும் காலங்களில் இத்தகைய நடவடிக்கைகள் சோசலித்தை நீடித்திருக்ச் செய்வதற்காக துரிதப்படுத்தப்படலாம். இப்படி சொத்துக்களை சமுதாயமயமாக்குவதை துரிதப்படுத்துவதைத் திணிக்கும் இந்தப் புறக்காரணிகளே சில பொருளாதார சூழல்களை உருவாக்கு கின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த செயல் முறையில் சில திரிபுகள் ஏற்படலாம். அதேநேரத்தில் வர்க்க சக்தி களின் பலாபலத்தை தவறாக மதிப்பீடு செய்வதும் பல்வேறு முறையில் உள்ள சொத்துடமையாளர்களின் உரிமைகளை மக்கள் பங்கெடுப்பின் மூலமாக இல்லாமல் அரசு பலாத்காரத்தின் மூலம் செய்வது கடுமையான உருக்குலைவுகளுக்கு இட்டுச் செல்லும். இதன் மூலம் மக்கள் அந்நியப்பட்டு செல்வதற்கான அடித்தளம் அமைக்கப்படுவது மட்டுமல்லாது எதிர்காலத்தில் பொருளாதாரத் திறனுக்கும் தடைகள் ஏற்படும்.
 
(26) பத்தி 6.12 : சீன சீர்திருத்தங்களின் கட்டங்கள் : ஆர்வமுள்ள மேற்கத்திய மாணவர்களும், சீன வளர்ச்சிப் போக்குகளை தொடர்ந்து கவனித்து வருபவர்களும் வரும் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். சீனச் சீர்திருத்தங்களை விரிவாகப் பார்த்தால் ஐந்து கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் கட்டம் (1979-1986) : அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் திட்டமிட்டவற்றையும் தாண்டி செயல்பட அனுமதிக்கப்பட்டன. இரண்டாவது கட்டம் (1987-1992) : வர்த்தக ரீதியாக இயங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவில் உருவாயின. மூன்றாவது கட்டம் (1993-2001) : அரசுத்துறை சுருங்கியது. தனியார் துறை விரிவடைந்தது. நான்காவது கட்டம் (2002-2007) : அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மறுகட்டமைப் புக்கு உள்ளாகின. அவை சுருங்குவது முடிவுக்கு வந்தது. ஐந்தாவது கட்டம்(2008 முதல் தற்போது வரை) : அரசுத் துறையை மீண்டும் விரிவடையச் செய்தல். இந்த ஐந்து கட்டங்களை நியூயார்க் டைம்ஸ் மூன்று கட்டங்களாகப் பிரிக்கிறது. 1) 1978 முதல் 1990 வரையில். இந்தக்காலகட்டத்தில் தனியார் துறையை சீர்திருத்தங்கள் கொண்டு வந்தன. 2) 1990 முதல் 2007 வரை. அரசுத்துறையைப் பெரும் அளவில் சீர்திருத்தங்கள் தகர்த்தன. 3) தற்போதுள்ள கட்டம். இதில் மேலே சொல்லப்பட்ட அனைத்தும் கைவிடப்படுகின்றன. 
 
(27) பத்தி 6.18 : அண்மையில் வளர்ச்சியுடன் கூடிய வறுமைக் குறைப்புத் திட்டமொன்றை (2011-2020) சீனாவின் கிராமப்புறங் களுக்காக சீனக்கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய அளவு உணவு மற்றும் உடையைத் தருவதற்கான இலக்கை அரசு நிர்ணயித்தது. அதே வேளையில், 2020 ஆம் ஆண்டுக்குள் அவர்களுக்கு கட்டாயக் கல்வி, அடிப்படையான மருத்துவ சேவைகள் மற்றும் குடியிருக்க வீடு ஆகியவற்றையும் உத்தரவாதப்படுத்தவும் முடிவு செய்தது. நகரம் மற்றும் கிராமப் புறத்திற்கிடை யிலான, பிராந்தியங்களுக்கிடையிலான மற்றும் பணக்காரர் – ஏழைகளுக் கிடையிலான  வருமான இடைவெளி அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. 2010 ஆம் ஆண்டில் நகர்ப்புற சீனர்களின் சராசரி தனிநபர் வருமானம், கிராமப்புறத்தில் உள்ளவர்களைவிட 3.23 மடங்கு அதிகமாக இருந்தது.
 
2007ஆம் ஆண்டில், கிராமப்புறங்களில் உள்ள அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் கிராமப்புற வாழ்வாதாரப் படி தருவதென்று சீன அரசு முடிவெடுத்தது. குறைந்தபட்ச வருமானம் என்று அரசு நிர்ணயித்திருப்பதைவிட குறைவான வருமானத்தை ஈட்டுகின்ற குடும்பங்கள் அனைத்திற்கும் இந்தப் படி வழங்கப்படும் என்று அறிவித்தனர். போதிய உணவு மற்றும் உடை குறித்த பிரச்சனையைத் தீர்க்கவே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. 2010 ஆம் ஆண்டின் இறுதியில், 2 கோடியே 52 லட்சத்து 87 ஆயிரம் கிராமப்புறக் குடும்பங்கள், அதாவது 5 கோடியே 21 லட்சத்து 4 ஆயிரம் பேர் இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைந்தனர். 2010 ஆம் ஆண்டில், 44.5 யுவான் (3சுமார் 3 ஆயிரத்து 823 கோடி ரூபாய்) கிராமப்புற வாழ்வாதாரப் படியாக வழங்கப்பட்டது. வேலை செய்ய முடியாதவர்கள் மற்றும் வேறு எந்தவித ஆதரவும் இல்லாதவர் களுக்கு ஐந்து வகையான(உணவு, உடை, வீடு, மருத்துவ சேவை மற்றும் உடல் அடக்க செலவுகள்) ஆதரவை அரசு உத்தரவாதப் படுத்துகிறது. கிராமப்புறங்களில் கட்டாயக்கல்வி பலப்படுத்தப்பட்டது. 
 
2010 ஆம் ஆண்டின் நிறைவில், பல முக்கியமான மாகாணங்களில் தேசிய வளர்ச்சியுடன் கூடிய வறுமைக்குறைப்புத் திட்டத்தின் மூலமாக 7 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளில் 97.7 விழுக்காட்டினர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். 2002 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, இளம் வயதினரின் எழுத்தறிவின்மை ஏழு விழுக்காடும், நடுத்தர வயதுடையவர்களின் எழுத்தறிவின்மை 5.4 விழுக்காடும் குறைந்தது. கூடுதலாக, அனைத்து கிராமப்புற மக்களுக்குமான கூட்டுறவு மருத்துவ சேவைத் திட்டம் என்ற புதிய திட்டமும் கொண்டு வரப்பட்டது. 2010 ஆம் ஆண்டின் நிறைவில், பல முக்கியமான மாகாணங்களில் தேசிய வளர்ச்சியுடன் கூடிய வறுமைக் குறைப்புத் திட்டத்தின் மூலமாக கிராமப்புறக் குடும்பங்களில் 93.3 விழுக்காட்டினர் இந்தப் புதிய கூட்டுறவு மருத்துவ சேவைத்திட்டத்தின் கீழ் வந்தனர். 91.4 விழுக்காடு கிராமப்புறத்தினர் சரியான நேரத்தில் மருத்துவ ஆலொசனையைப் பெற முடிந்தது. ஒவ்வொரு நகரத்திலும் ஒரு மருத்துவமனை மற்றும் பெரும்பாலான நிர்வாக கிராமங்களில் சிறிய மருத்துவ சேவை மையமும் அமைக்கப்பட்டது. 
 
(28) பத்தி 6.26 : வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறாவது மாநாட்டு அறிக்கை இவ்வாறு கூறுகிறது : சோசலிசப் புரட்சியில், நாட்டிற்காகப் புதிய பொருளாதாரத் தளங்களையும், சக்திகளையும் உருவாக்க பெரும் முயற்சிகள் ஒரு புறம் எடுக்க வேண்டும். மறு புறத்தில், ஏற்கனவே இருக்கக்கூடிய பொருளாதாரத் தளங்களையும், சக்திகளையும் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள பொருத்தமான வழிகள் மற்றும் நடவடிக்கைகள் தேவை. ஆனால், சோசலிச மாற்றத்திற்கான வேலைக்கு வழிகாட்டும் இந்தக் கருத்துக்கள், உறுதிமொழிகள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றை தெளி வாகவும், தொடர்ச்சியாகவும் நாம் இன்னும் தீர்மானிக்கவில்லை. சில சமயங்களில் அவசரத்தில் வேலைகளைச் செய்தோம் : சோசலிசம் அல்லாத பொருளாதாரத்துறையை வேகமாக அகற்றி விட்டு, தனியார் முதலாளித்துவ பொருளாதாரத் துறையை அதி வேகமாக அரசு நடத்தும் துறையாக மாற்றிவிட விரும்பினோம்.
 
மேலும் தொடர்கையில், நமது கருத்திலும், நடவடிக்கையிலும், பலதுறைப் பொருளாதார அமைப்பு கூடுதல் காலத்திற்கு நீடிக்கவே செய்யும் என்ற உண்மையை நாம் அங்கீகரிக்கவில்லை. உற்பத்தி உறவுகளின் தொடர்ச்சிக்கான விதியை, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சித்தன்மை மற்றும் மட்டத்திற்கு சரியாகப் பொருத்த வில்லை. அதை நாம் இன்னும் உள்வாங்கிக் கொள்ளவும் இல்லை. உழைப்புச் சக்தி, தொழில் நுட்பம், மூலதனம், வேலைகளை உருவாக்கும் திறன் என்று மக்களிடம் இத்தகைய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்ற மதிப்பீட்டிலிருந்து, இத்தனைக்கும் அது ஆங்காங்கே இருந்தாலும், நாட்டின் பொது மற்றும் கூட்டுப் பொருளாதாரத் துறைகளை இணைந்து வளர்த்தெடுப்பது, அரசின் ஆதாரங்களை குவியல்படுத்துவது மற்றும் வெளிநாடுகளிலிருந்து முதலீட்டைப் பெறுவது போன்றவை முக்கியமானது என்பதால், மற்ற பொருளாதாரத் துறைகளை சரியாகப் பயன்படுத்தவும், மாற்றவும் கொள்கைகள் இருக்க வேண்டும். மற்ற பொருளாதாரத் துறைகள் என்பது சிறிய பண்டங்கள் உற்பத்தி செய்யும் துறை(கைவினைஞர்கள், விவசாயிகள் மற்றும் தனியார் வர்த்தகம் மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள மக்கள்), தனியார் முதலாளித்துவப் பொருளாதாரம், பல வகையிலான அரசு-முதலாளித்துவப் பொருளாதாரம், பெரிய அளவிலான அரசு-தனியார் கூட்டு நிறுவனங்கள், மத்தியப்பகுதிகள் மற்றும் பிற மலைப்பகுதிகளில் சில சிறுபான்மையினரின் இயற்கையான மற்றும் வாழ்வாதார பொருளாதாரம் போன்றவையாகும். கடந்த பத்தாண்டுகளில், இரண்டு மாநாடுகளுக்குள் சோசலிச மாற்றத்தைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று இரண்டு மாநாடுகளில் தீர்மானங்கள் போடப்பட்டுவிட்டன. ஆனால் இந்தப் பணி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. உண்மையான நிலை நமக்கு கசப்பான பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது. புறநிலை விதிகளை எதிர்கொள்ளும்போது நாம் பொறுமையிழக்க வேண்டியதில்லை. பின்வருமாறு நாம் சரிசெய்து கொள்ள வேண்டும் : சோசலிசத்திற்கான மாற்றம் நடைபெறும் கால கட்டத்தில் அந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான பொருத்த மான வழிகள் மற்றும் நடவடிக்கைகளை நிரந்தரமாகவும், தொடர்ந்தும் மேற்கொள்ள  வேண்டும். உற்பத்தி உறவுகள் மற்றும் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சித்தன்மை மற்றும் அளவு மட்டங்கள் சமன் செய்யப்பட வேண்டும். இவையெல்லாம், உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினை  தொடர்ந்து ஊக்குவிக்கும்  சக்தியாக மாறும். வரும் ஆண்டுகளில், நிதானமாக சோசலிச மாற்றத்தைக் கொண்டு வர, பன்முகத்தன்மை கொண்ட பொருளாதார அமைப்பின் அனைத்து சாதகமான அம்சங்களையும் முழுமை யாகப் பயன்படுத்தி, மிக முக்கியமான நோக்கமான சோசலிசப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, வளர்க்க, முதலில் அரசுத் துறைக்கு முன்னணிப் பாத்திரம் வழங்கி, மற்றவற்றை அத்துறை கட்டுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். சோசலிசப் பொருளாதார அமைப்புக்கு சாதகமாக அரசு பொருளாதாரக் கொள்கைகளை(முதலீடு, வரிவிதிப்பு, கடன் போன்றவை தொடர்பான) அமல்படுத்துகிறது. இருந்தாலும், சட்டத்தின்படி சமத்துவக் கோட்பாடு அமலாக வேண்டும். வேலைக்கேற்ற ஊதியம் என்ற கொள்கை சரியான வகையில் அமலாக வேண்டும். அதற்கு, ஊதிய விகிதத்தில் தீவிரமான சீர்திருத்தம் தேவைப்படுகிறது. அது உழைப்பை மீண்டும் பயன்படுத்துதல், சமத்துவத்தைக் கைவிடுதல், ஊதிய விகிதத்தில் உள்ள மானியத்தைக் கொஞ்சம், கொஞ்சமாகக் நீக்கி விடுதல், ஊதியத்தை உழைப்பு மற்றும் பொருளாதாரத் திறனின் பலன்களோடு நெருக்கமான இணைத்தல் போன்றவற்றைக் கொண்ட தாக அமையும்.
 
தனது ஏழாவது மாநாட்டு அறிக்கையில் இவ்வாறு கூறுகிறது. கலப்புப் பொருளாதாரத்தின் அபரிமிதமான சாத்தியக்கூறுகளை வளர்த்தெடுக்க, அதிகாரவர்க்க மத்தியத்துவம் மற்றும் அரசு மானியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அமைப்பை நீக்கிவிட்டு, சட்டங்களின் அடிப்படையில் அரசு நிர்வாகத்தின்கீழ் சந்தை அமைப்புக்கு மாறுவது என்ற பணியைத் தொடர்வது அவசியமாகிறது…. பேரியல் பொருளாதாரக் கட்டுப்பாடுகளை உருவாக்கும் பணி, சந்தையினை முறைப்படுத்தல்,  எதிர்மறையான நிகழ்வுகளைத் தடுத்தல் மற்றும் சமாளித்தல்,  சாதாரண சூழலையும், உற்பத்தி-வணிக நடவடிக்கைகளுக்கான நிலைமையையும் உருவாக்குவது, பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும் சமூக வளர்ச்சி இடம் பெறுவதை உத்தரவாதப்படுத்துவது போன்ற வேலைகளில் அரசுக்கு முக்கியமான பாத்திரம் உள்ளது.
 
வளர்ந்த சந்தைப் பொருளாதாரம் என்பது உள்ளுர் மயம், இணைப்பில் சுணக்கம் மற்றும் தனிமைப்படுதல் ஆகியவற்றி லிருந்து வெளியேறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கும்… விரிவடையும் நோக்கத்தில், நமது சுதந்திரம், இறை யாண்மை, சமத்துவம் மற்றும் பரஸ்பர நலன் ஆகியவற்றை முன் னிறுத்தி பன்முகத்தன்மை கொண்ட அந்நிய பொருளாதார உறவுகளை கொண்டு செல்ல வேண்டும். நமது நாட்டின் வாய்ப்புகள் மற்றும் ஆதாரங்களை வளர்தெடுக்க அந்நிய ஆதாரங் களையும் ஈர்க்க வேண்டும். நம்மை, குறிப்பாக பொருளாதாரத்தில், புதுப்பித்துக் கொள்ள வேண்டிய தேவையில் நாம் உறுதியாக இருக்கிறோம். அதே வேளையில், அதன் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும். அதி காரவர்க்க மத்தியத்துவம் மற்றும் அரசு மானியங்கள் ஆகிய வற்றுடன் கூடிய உள்ளுர்மயப்படுத்தப்பட்ட மற்றும் சுயசார்புப் பொருளாதாரத்தை அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள சந்தைப் பொருளாதாரமாக மாற்றுவதென்பது மிகவும் சரியான மற்றும் தேவையான பணியாகும். 
 
சமூகத்தின் உற்பத்திச் சக்தியை பயன்படுத்தவும், வளர்க்கவும் இது உதவும். அதே வேளையில் சந்தைப் பொருளாதாரம் என்பது சர்வரோக நிவாரணி என்றும் கருதி விடக்கூடாது. உற்பத்தியை வளர்க்கத் தூண்டுவதாக இருந்தாலும், பல சமூக நோய்கள் உருவாகவும், பரவவும் உகந்த சூழலைச் சந்தைப் பொருளாதாரம் உருவாக்குகிறது. ஜனவரி 2011ல் நடந்த 11வது மாநாடு அறிக்கையில், 25 ஆண்டு கால(1986-2011) புதுப்பித்தல் பணியின் சாதனைகள் மற்றும் அனுபவங்களைக் கட்சி ஆய்வு செய்திருக்கிறது. நாட்டிற்குக் கூடுதல் பாதுகாப்பு மற்றும் பெரும் பலத்தை உருவாக்கியிருக்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை மேலும் சொல்கிறது. குறைவான தரம், திறன் மற்றும் போட்டி ஆகியவற்றோடு பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்துள்ளது. தொழில்மயம் மற்றும் நவீனமயம் நோக்கிய பயணம் மெதுவாகவே இருந்திருக் கிறது. விவேகமற்ற  விநியோக அமைப்பால், பணக்காரர் மற்றும் ஏழைகளுக்கிடையிலான இடைவெளி அதிகரிக்கிறது. கல்வி, பயிற்சி, அறிவியல், தொழில்நுட்பம், சமூக-கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் பலவீனங்களும், குறை பாடுகளும் நீடிக்கின்றன. அதிகார வர்க்கம், ஊழல், குற்றங்கள், சமூகத் தீமைகள், மற்றும் இழிவான நிலையில் ஒழுக்கம் மற்றும் வாழ்நிலை போன்றவை தடுக்கப்படவில்லை. பொருளாதார அமைப்புகள், மனிதவளத்தின் தரம் மற்றும் கட்டமைப்பு போன்றவை இன்னும் பலவீனமாகவே உள்ளன. இவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
 
வியட்நாம் பொருளாதாரத்தில் அந்நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 40 விழுக்காடு அந்நாட்டின் அரசுத்துறை நிறுவ னங்களின் பங்காக உள்ளது. மாற்றத்திற்கான காலகட்டம் பற்றிக் குறிப்பிடும் அறிக்கை, முதலாளித்துவத்திலிருந்து  சோசலிசத்திற்கு முன்னேற, ஒரு மாற்றத்திற்கான காலகட்டம் மிகவும் தேவையான தாகும். இது ஒரு ஆழ்ந்த, முழுமையான மற்றும் பூரணமான புரட்சிகர மாற்றங்களின் காலகட்டமாகும். உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் மற்றும் அபாரமான கட்டமைப்பு கொண்ட புதிய சமூக அமைப்பை உருவாக்குவதற்கான துவக்கமுமாகும். சோசலிசம் மற்றும் முதலாளித்துவம் என்கிற இரண்டு பாதை களுக்கிடையில் சிக்கலான வர்க்கப் போராட்டடம், அனைத்து வகையான பொது வாழ்க்கையிலும் நடக்கும் காலகட்டமாகும். எது வெல்லும் என்ற பிரச்சனையைத் தீர்ப்பதே இதன் நோக்கமாகும்.
 
(29) பத்தி 6.28 : அண்மையில் ரவுல் காஸ்ட்ரோ பேசியபோது, இன்றைக்கு, எப்போதும் இல்லாத அளவுக்கு, பிரதானமான பணியே பொருளாதாரப் போராட்டம். அத்துடன்,  ஊழியர்களின் தத்துவார்த்தப்பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நமது சமூக அமைப்பைத் தொடர்வதும், பாதுகாப்பதும் இதில்தான் அடங்கியுள்ளது. ஜனவரி 2011ல் நடந்த கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறாவது மாநாடு தனது அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டது : முன்வைக்கப்பட்டுள்ள பொருளாதாரக் கொள்கை வழிகாட்டுதல்களைப் பொறுத்தவரை, தற்போதுள்ள பொருளாதார நிலை மற்றும் எந்தெந்த அம்சங்களைக் கணக்கில் கொள்ள வேண்டுமோ அவை குறித்த மதிப்பீட்டை செய்ய வேண்டியுள்ளது. அதில், கடந்த மாநாட்டிற்குப்பிறகு நடந்த முக்கியமான சர்வதேச மற்றும் தேசிய நிகழ்வுகளை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். உலகம் முழுவதும், கட்டமைப்பு மற்றும் அமைப்பு ரீரியான நெருக்கடி என்று முன்னிறுத்தப்படுகிறது. அதேவேளையில் பொருளாதார, நிதி, சுற்றுச்சூழல், எரிபொருள் மற்றும் உணவு நெருக்கடிகளையும் இது உருவாக்குகிறது. இது வளர்ச்சியடையாத நாடுகளை அதிகம் பாதிக்கிறது. கியூபாவில் அந்நிய பொருளாதார உறவுகளை நம்பி திறந்த பொருளாதார அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதுமான நெருக்கடியிலிருந்து கியூபாவும் தப்பிக்க வில்லை. 
 
கியூப ஏற்றுமதிப் பொருட்களின் விலைகளில் நிலையற்ற தன்மை, கியூபா பண்டங்கள் மற்றும் சேவை ஏற்றுமதிக்கான கிராக்கி, அந்நியக் கடனைப் பெறுவதில் பெரும் கட்டுப்பாடுகள் என்று பாதிப்புகள் இருந்தன. 1997 முதல் 2009 வரையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஏற்பட்ட ஏற்பட்ட பாதிப்பால் 1997 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 10.9 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. சராசரியாக, கியூப ஏற்றுமதிப் பொருட்களின் வாங்கும் சக்தியில் 15 விழுக்காடு சரிவு ஏற்பட்டிருக்கிறது. அரசுத்துறை நிறுவனங்களுக்கு பெரிய அளவிலான சுய அதிகாரம் வழங்குவதும், மற்ற நிர்வாக வடிவங்களை மேம் படுத்துவதும் இந்தக் கோட்பாடுகளுக்கு ஒத்திசைந்ததாக அமைய வேண்டும். நாட்டின் பிரதான பொருளாதார அமைப்பு என்ற முறையில் இருக்கும் சோசலிச அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களைத் தாண்டி, பல்வேறு மாதிரிகளை கியூபா அங்கீ கரித்து, முன்னிலைப்படுத்தும். அதில் அந்நிய முதலீடு, கூட்டுறவு, சிறு பண்ணைகள்,  தனி உரிமைகள், நிபந்தனைகளுடன் கூடிய அடமானங்கள், சுய வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கக்கூடிய அனைத்தும் அடங்கும்…. பரிந்துரை செய்யப் பட்டுள்ள பொருளாதாரக் கொள்கை என்பது, சமத்துவம் என்பதற்கு மாறாக, அனைத்துக் குடிமக்களுக்கும் சோசலிசம் என்பது சம உரிமைகள் மற்றும் சம வாய்ப்புகள் என்பதுதான் என்ற அடிப்படையில்  உருவாக்கப்பட்டுள்ளது.
 
வேலை என்பது உரிமை மற்றும் கடமையாகும். அதேவேளையில் ஒவ்வொரு குடிமகனும் சுயமாக சாதித்துக் கொள்வதை ஊக்கப்படுத்துவதுமாகும். உழைப்பின் அளவு மற்றும் தரத்திற்கேற்றாற்போல் அதற்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும். ..அந்நிய முதலீடும் பல்வேறு தேவைகளை நிறைவேற்றக்கூடியதாக இருக்க வேண்டும். மேம்பட்ட தொழில்நுட்பம், கிடைத்தல், நிர்வாகத் திறமைகளைப் பெறுதல், ஏற்றுமதிச் சந்தைகளை பன்முகப்படுத்தி, விரிவாக்கம் செய்தல், இறக்குமதி மாற்று, உற்பத்தித் திட்டத்தைக் கட்டுவதற்காக குறு மற்றும் நீண்டகால முதலீடுகளை அளித்தல், இயங்குவதற்குத் தேவையான முதலீட்டை ஒதுக்குதல் மற்றும் புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்குதல் போன்றவை அதில் அடங்கும். 
 
(30) பத்தி 6.29 : பொருளாதார வளர்ச்சிக்கான கேந்திரமான இலக்கை திட்டம் நிர்ணயித்தது. கட்டமைப்பைக் கட்டுதல், விவசாயம் மற்றும் மின்சாரம், நிலக்கரி, எண்ணெய் மற்றும் உலொக நிறுவனங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தொழில்களை வளர்த்தல், பிரதேச வளர்ச்சி போன்றவற்றிற்கு குறிப்பான முக்கியத்துவம் அளிக்கப்படும். அந்நிய முதலீட்டைக் கொண்டு வந்த வடகொரியா தனது பொருளாதாரத்தில் ஒரு முறிப்பை ஏற்படுத்த உதவுவதற்காகவே இந்தப் பத்தாண்டு காலத்திட்டம் உருவாக்கப்படுகிறது. சீனாவின் ஒத்துழைப்புடன், கொரிய  சீன எல்லைப் பகுதியில் உள்ள யாலு ஆற்றங்கரைப் பகுதியில் கூட்டுப் பொருளாதார மண்டலம் என்ற புதிய மண்டலம் துவங்கியுள்ளது.. 
 
வடகொரியப் பொருளாதாரத்திற்குப் புதிய பாதையைப் போடுவதோடு, புதிய வளர்ச்சித் திட்டங்களை முடுக்கி விடுவதற்கும் இது உதவும். இரண்டு பொருளாதார மண்டலங்களை உருவாக்க வட கொரியாவும், சீனாவும் ஒப்பு கொண்டுள்ளன. வடகொரி யாவில் அமையும் இந்தப் பொருளாதார மண்டலங்கள், அரசு வழிகாட்டுதலில், நிறுவன நிர்வாக அடிப்படையில், சந்தையை மையமாகக் கொண்டு இயங்கும் என்று இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. மேலும், முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் தாராள வர்த்தகப் பகுதி மற்றும் வரிவிலக்கு மண்டலம் ஒன்றை உருவாக்கப் போகிறார்கள். தேசியமயமாதல் மற்றும் மீண்டும் நிறுவனத்தை தருமாறு கேட்டல் போன்ற பிரச்சனைகள் அந்நிய முதலீட்டாளர்களுக்கு இருக்காது என்று வடகொரியா உறுதிமொழி அளித்துள்ளது. தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களில், உரிய இழப்பீடு தரப்படும் என்று வடகொரியா உறுதிமொழி அளித்துள்ளது. அந்நிய முதலீட்டுக்கான வருமான வரி, வடகொரியாவின் மற்ற பகுதிகளை விட 11 விழுக்காடு குறைவானதாகும். பத்தாண்டுகளுக்கு மேல் வர்த்தகம் புரிய விரும்பும் நேரடி அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டத் துவங்கிய ஆண்டிலிருந்து மூன்றாண்டுகளுக்கு எந்தவித வரியும் இருக்காது. அதன் பின்னர்  இரண்டாண்டுகளுக்கு 50 விழுக்காடு வரிவிலக்கு அளிக்கப்படும்.
 
(31) பத்தி 7.5 : வெனிசுலாவின் பொருளாதார மற்றும் சமூகக் குறியீடுகள்
 
               பிரிவு                                         ஆண்டு        விழுக்காடு         ஆண்டு         விழுக்காடு
 
வறுமை (தனிநபர்கள்)                         1998                  52                        2008                31.5 
 
கடும் வறுமை                                         1998                  20.1                      2008                 9.5
 
கினிஅட்டவணை
0=முழுமையான சமத்துவம்,
1=முழுமையான அசமத்துவம்        1998                   .48                        2008                  .41
 
குழந்தைகள் இறப்பு/ஒரு லட்சம்    1998                   21.4                      2006                  14
 
சத்துகுறைவு 
மரணங்கள்/ஒரு லட்சம்                     1998                     4.9                       2007                 2.3
 
சுத்தமான குடிநீர் பெறும் வாய்ப்பு  1998                    80                         2007                 92
 
தூய்மைப்பணிக்கான வாய்ப்பு         1998                    62                         2007                 82
 
சமூகப் பாதுகாப்பு, மக்கள் தொகை
கேற்ப மருததுவ வசதிகள்                 1998                     1.7                      2008                 4.4
 
வேலையின்மை விகிதம்                    1998                  11.3                      2008                7.8
 
குறிப்பு : கடந்த ஆண்டோடு நிறைவு பெற்றதாகும். பெரும்பாலானவற்றில் 2007 அல்லது 2008 புள்ளி விவரங்களே உள்ளன.
 
இருந்தாலும், இன்றைக்கும் வெனிசுலா பொருளாதாரம் முதலாளித்துவத்தின் செல்வாக்கில்தான் உள்ளது. ஆனால் நிச்சயமாக நவீன-தாராளவாதப் பொருளாதாரம் அல்ல.  மூன்று வகையான உற்பத்தி மற்றும் சமூக உறவுகள் அங்கு உள்ளன. தனியார், அரசு மற்றும் சமூகப் பொருளாதாரத் துறைகளே அவையாகும். இவற்றில் தனியார் துறைதான் மிகவும் பெரியதாகும். இதன் பிரதான நோக்கமே லாபத்தை அடைவதுதான். இதன் கருவிகள், பணக்கட்டமைப்பு போன்றவை தனியாருக்குச் சொந்த மானவையாகவே இருந்தன. இந்த முதலாளித்துவத்துறை என்பது வெனிசுலா பொருளாதாரத்தில் மூன்றில் இரண்டு பங்காக உள்ளது. இது பல்வேறு நாடுகளில் உள்ள மூலதனத்தோடு இணைந்துள்ளது. 
 
நுகர்வு மற்றும் முதலீட்டுப் பண்டங்களை இறக்குமதி செய்வது மூலமோ, அல்லது பன்னாட்டு நிறுவனங்கள்  வெனிசுலாவில் துணை நிறுவனங்களைக் வைத்துக் கொள்வது மூலமோ இந்த இணைப்பு செயல்படுகிறது.  இரண்டாவது பெரிய துறை அரசுத்துறை. இதிலுள்ள நிறுவ னங்கள் அரசுக்குச் சொந்தமானவை. அவற்றின் ஊழியர்கள் அரசு ஊழியர்கள். பொதுத்துறையில் பி.டி.வி.எஸ்.ஏ. என்பது பெரிய எண்ணெய் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் வருமானத்தில் கணிசமான பகுதி சுகாதாரம் மற்றும் கல்வித்திட்டங்கள், குடியிருப்புகள் மற்றும் கட்டமைப்பு போன்றவற்றிற்காக நேரடி யாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதி செல்கிறது. ஊழியர்களுக்கு மத்தியில் உயர் பதவிகளில் அதிக ஊதியமும், கீழே வர வர குறைந்த  ஊதியமும் என்ற வகையில் ஏற்றத் தாழ்வு உள்ளது. ஆனால், இந்நிறுவனங்களில் ஊதியம் தேசிய சராசரியை விட பெருமளவு அதிகமாகும். பெரும்பாலான அரசுத்துறையில், தங்களைத் தாங்களே சுய நிர்வாகம் செய்து கொள்வது அரசுத் துறையில் இல்லை. வெனிசுலாவின் மொத்த வருமானத்தில் இது 30 விழுக்காடாகும். 
 
1998 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இதில் வளர்ச்சி எதுவும் இல்லை. மூன்றாவது துறை சமூகப் பொருளாதாரமாகும். சோசலிச நிறுவனங்ள் என்று சொல்லப்படும் பண்ணைகள் இதில் அடங்கும். அவை அரசுக்குச் சொந்தமானவை. ஆனால், சுய நிர்வாக உரிமை கொண்டவை. இதில் கூட்டுறவு அமைப்புகளும் அடங்கும். தொழி லாளர்கள் மற்றும் அரசும் கூட்டாகவும், தனியாகவும இந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை மொத்தப் பொரு ளாதாரத்தில் இரண்டு விழுக்காடு மட்டுமே. ஸ32 பத்தி 7.6 : அமெரிக்காவுக்கான பொலிவாரிய மாற்று அல்பா (ஹடுக்ஷஹ) என்பது  கரீபிய, லத்தீன் அமெரிக்க அரசியல், பொருளாதார, சமூக இணைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது; இப்பகுதியில் உள்ள வளர்ச்சி குன்றிய நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளில் உள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைச்  சரி செய்வதை பிரதான நோக்கமாகக் கொண்டது. அல்பா அமைப்பை வழிநடத்தும் கொள்கைகள்:
 
1. நவீன தாராயவாத இணைப்பு என்பது வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய வற்றிற்கு முன்னுரிமை தருவது. ஆனால், அல்பா இணைப்பு வறுமை மற்றும் சமூக விலக்கத்தற்கு எதிரான போராட் டத்தினை அடிப்டையாக கொண்டது.  
 
2. அல்பாவிற்கான முன்மொழிவு, மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், பெண்ணுரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பௌதீக ஒருமைப்பாட்டினைப் பாதுகாப்பதற்கும் பெரும் முக்கியத்துவம் தந்துள்ளது.  
 
3. வளர்ந்த நாடுகள் வழங்கும் அழிவை ஏற்படுத்தும் மானியங்கள் மற்றும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் கொள்கைகள் ஆகியவற்றிற்கு எதிராக அல்பா போராடுகிறது. அந்தப் போராட்டம் ஏழை நாடுகளில் உள்ள விவசாயிகள் மற்றும் விளைபொருள்களைப் பாதுகாப்பதாகவும் அமைகிறது.
 
4. எந்த நாடுகள் எல்லாம் விவசாய நடவடிக்கையை அடிப் படையானதாகக் கொண்டிருக்கிறதோ, அங்கு லட்சக்கணக்கான விவசாயிகளும், உள்ளுர்க்காரர்களும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட விவசாயப் பொருட்கள் உள்நாட்டுச் சந்தையைப் பாதித்ததுள்ளன. எங்கெல்லாம் மானி யங்கள் இல்லையோ அங்கு பாதிப்பு மேலும் கடுமையாக இருக்கும்.
 
5. தொழிற்துறை உற்பத்தியை விட எந்த நாடுகளில் எல்லாம் விவசாய உற்பத்தி அதிகமாக இருக்கிறேதோ, அதுதான் கலாச் சாரத்தைப் பாதுகாப்பதற்கான தளமாகும். நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்வதறக்கான தளமுமாகும். இயற்கையோடுடனான உறவை நிர்ணயிப்பதாகவும், நேரடியாக பாதுகாப்போடு தொடர்புடைய தாகும். சுயசார்பை வளர்ப்பதுமாகும். இந்த நாடுகளில் விவசாயம் என்பது வாழும் முறையாகும். மற்ற எந்த பொருளாதார நட வடிக்கையோடும்  இதை ஒப்பிட முடியாது. 
 
6.  ஒன்றிணைவதற்காக வேர்களிலிருந்து எழும் தடைகளை அல்பா தாக்க வேண்டும். 
 
(a) பெரும்பான்மை மக்களின் வறுமை. 
 
(b) நாடுகளுக்கிடையில் கடுமையான ஏற்றத்தாழ்வு மற்றும் அசமத்துவ நிலை.
 
(c) சர்வதேச விவகாரங்களில் சமச்சீரற்ற நிலை மற்றும் நிர்ப்பந்தங்கள்.
 
(d) எவருமே கட்டமுடியாத கடனின்சுமை அதிகரிப்பு. 
 
(e) சமூக மற்றும் பொருளாதார ஆதரவு தளங்களை பலவீனப் படுத்துகின்ற, கட்டமைப்பு மாற்றங்கள் என்ற பெயரில் ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கி  போன்றவற்றின் கொள்கைகள்  மற்றும் உட்டோ (உலகவர்த்தக அமைப்பு) வின் கடுமையான விதிகள். 
 
(f) அறிவுசார் சொத்துரிமையால் தகவல் சேகரிப்பு, அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை அணுகும் வாய்ப்புகளுக்கான தடைகள்.
 
(g) உண்மையான ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பணியில், சமூக, வெகுஜன ஊடகங்கள் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் குறித்த கவனம். 
 
7. அரசின் சீர்திருத்தங்கள் என்ற அறைகூவல், நேர்மையற்ற நடைமுறைகளான கட்டுப்பாடுகளை தளர்த்துதல், அரசு நிர்வாகத்தின் திறன்களைக் குலைப்பது ஆகியவற்றிற்குதான் இட்டுச் சென்றது. அதை எதிர்த்த போராட்டம் தேவை.
 
8. நவீன-தாராளவாத மேலாதிக்கத்தின் பத்தாண்டுகளில் அரசமைப்பு மிருகத்தனமாக சீர்குலைக்கப்பட்டது. இதற்குப் பதிலாக அரசையும், ஆட்சிகளையும் வலுப்படுத்தும் பணி தற்போது நடக்கிறது. இதில், பொது விவகாரங்களில் குடிமக்களின் பங்கேற்பு உறுதிப்படுத்தப் படுகிறது.  
 
9. சுதந்திரச் சந்தையும், வர்த்தகமும்தான் பெரும் அளவிலான வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும் என்றும், அனைவரும் நலமுடன் வாழ வைக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டவைகளை கேள்விக்குள்ளாக்க வேண்டும். 
 
10. நாடுகளுக்கிடையிலான ஏற்றத்தாழ்வைக் குறைக்க அரசின் தெளிவான தலையீடு இல்லாமல், சமமற்ற நாடுகளுக்கிடையில் தாராளமான போட்டி நடந்தால் பலவீனமான நாடுகளே பெரிய அளவில் பாதிக்கப்படும்.
 
11. லத்தீன் அமெரிக்க ஒருங்கிணைப்பை வலுப்படுத்த இறை யாண்மை கொண்ட நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு பொரு ளாதாரத் திட்டம் தேவைப்படுகிறது. சர்வதேச அமைப்புகள் தரும் அச்சுறுத்தும் செல்வாக்கிலிருந்து விடுபட்டதாக இது இருக்க வேண்டும்.
பொலிவாரிய மக்கள் காங்கிரஸ் அமைப்புச் செயலாளர் கூறுகிறார் : விடுதலைக்கான அரசியல் கருவியாக அல்பா இருக்க வேண்டும். மாறி வரும் சூழல்களில் பிற கருவிகளைப் போன்று இது திறமையுடையதாகவும், நெளிவு சுழிவு கொண்டதாகவும் இருக்க வேண்டும். இதை ஏன் நாம் சுட்டிக்காட்டுகிறோம்? நம்மீது செல்வாக்கு செலுத்த புதிய உத்திகளைக் கடைப்பிடிக்கும் ஏகாதிபத்தியம் ஏகாத்திபத்தியத்தைத் தடுத்து நிறுத்தும் சுவராக அல்பா இருக்கும். எடுத்துக்காட்டாக, தாராள வர்த்தக ஒப்பந்தங்களை திணிப்பதற்கான முயற்சி தோல்வி தோல்வியடைந்த நிலையில், எத்ததனை சிறிய ஒப்பந்தங்கள் போடப்பட்டன என்பதைப் பர்த்தோம். இவையெல்லாம், இந்த வர்த்தக முன்மொழிவினை இந்தப் பிரதேசம்  ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்ட  நிர்ப்பந்தம் தானே? ஒரு சிறிய பலவீனத்தை லத்தீன் அமெரிக்கர்கள் மற்றும் கரீபிய மக்கள் காட்டினால் அமெரிகக அரசு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள தயாராயிருக்கிறது. நமக்குள் ஏதாவது பிளவு என்றால், நாடுகளை ஒன்றோடொன்று மோதவிட்டு, பின்னர் நம்மைத் தோற்கடித்து விடுவார்கள்.
 
அல்பா மக்களாகிய நாம், அமெரிக்காவின் மக்களாகிய நாம், முற்போக்கான அரசுகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் ஆதரவுடன் புதிய காலனிய திணிப்பான சிறிய தாராள வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ள மறுக்க வேண்டும். மாறாக, நமது அல்பா மற்றும் சிறிய அல்பாக்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். அல்பா என்ற கட்டமைப்புக்குள் எழுதப்படும் அனைத்து ஒப்பந்தங்களும் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய குடியரசுகளின் கூட்டமைப்பு கட்டியமைக்கும் வலுவான செங்கல் போன்று அமையும். ஒருங்கிணைப்புக்கான அனைத்து மக்கள் சக்திகளுக்கும் தற்போதைய பொறுப்பு இதுவேயாகும். 
 
(33) பத்தி 7.7 : இந்த விஷயத்தில், ஏகாதிபத்தியம் முதலாளித் துவத்தின் உச்சக்கட்டம் என்ற நூலில் லெனின் விடுத்த எச்சரிக் கையினை நினைவில் கொள்ள வேண்டும். ஏகாதிபத்தியத்தின் அரசியல் அம்சத்தை அதாவது, அரசியல் ஆதிக்க கட்டுப் பாட்டினை குறைத்து மதிப்பிடக்கூடாது என எச்சரிக்கிறார். அடக்குமுறை தலைவிரித்தாடிய காலத்தில் இந்த நூல் எழுதப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். கொடுக்க வேண்டிய அரசியல் அழுத்தத்தை இலைமறை, காய்மறையாகத் தான் கூற வேண்டியிருந்தது. அவைகளை எல்லாம் நுணுகிப் பார்க்கும் ஜார் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் இருந்து – லெனின் துச்சமாகவே மதித்த அந்த நடவடிக்கைகளில் இருந்து – தப்பிக்க அப்படி எழுத வேண்டியிருந்தது. இந்தக் குறிப்பிட்ட நிகழ்வு அதைச் சரியென்று நிரூபித்திருக்கிறது.
 
(34) பத்தி 7.9 : தென் ஆப்பிரிக்காவில், வரிக்குறைப்பு மற்றும் பரிவர்த்தனைக் கட்டுப்பாடுகளைக் கைவிடுதல் போன்றவை மூலம் தாராளமயம் மற்றும் திறந்து விடுதல் நடவடிக்கைகள்தான் பொருளாதாரக் கொள்கைகளின் அம்சங்களான இருந்தன. தேசிய தொழிற் கொள்கையை உருவாக்குவதை விட அந்நிய முதலீட்டாளர் களைத் திருப்திப்படுத்துவதுதான் முக்கியமானதாக இருந்தது. பொருளாதாரக் கொள்கைகளை வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் மறுபங்கீட்டுக்கான உத்தி என்றெல்லாம் குறிப்பிட்டுக் கொண்டாலும், முறையான வேலைவாய்ப்பு சரிந்தே வந்துள்ளது. நாட்டின் செல்வம் இனரீதியில் சமமற்ற முறையில் விநியோகம் செய்யப் பட்டதாகவே உள்ளது. நிதிக்கான இலக்கில் கடுமையான முறையில் கவனம் செலுத்தி, பொருளாதார வளர்ச்சியை மேம்படச் செய் திருந்தாலும், வேலைகளை உருவாக்குதன் மூலம் வளர்ச்சி அடைதல், மக்கள் தேவையை நிறைவேற்றுதல், வறுமைக் குறைப்பு மற்றும் செல்வத்தை சமமாகப் பங்கீடு செய்தல் போன்ற இலக்குகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துள்ளனர்.
 
மக்களைத் திரட்டுவது மற்றும் அவர்களை இணைத்துக் கொள்வது என்றில்லாமல், சந்தைதான் மாற்றத்திற்கான புதிய இயக்கும் சக்திகளாக உருவாகின. லட்சக்கணக்கான கண்ணுக்குத் தெரியாத விரும்பி விற்பவர்கள் – விரும்பி வாங்குபவர்கனின் கரங்கள் மாற்றத்தைக் கொண்டு வரும் என்று நம்பப்பட்டது. 1996 திட்டம் என்று அழைக்கப்பட்ட இது, விடுதலை சாசனத்திலிருந்து அடிப்படையிலேயே வேறுபடும் பொருளாதாரக் கொள்கைகளை பேரழிவு கொண்டவை என்று தென் ஆப்பிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி அழைக்கிறது. உலக மற்றும் உள்நாட்டு மூலதனத்தின் சில பிரிவினர், அரசில் உள்ள சில குறிப்பிட்ட ஊழியர்கள், இவர்க ளோடு வளர்ந்து வரும் கருப்பு முதலாளிகளின் ஒருபிரிவினர் ஆகியோரின் வர்க்கக் கூட்டணியால் தான் இந்த முடிவு ஏற்பட்டது என்கிறார்கள். அடித்தளத்தில் இயங்கிய அரசியல் ஊழியர்களுக்கு மாற்றாக, உயர் வகுப்பைச் சேர்ந்த புதிய தொழில்நுட்ப வல்லுநர்களால் முதலாளித்துவ பொருளாதாரம் நிர்வகிக்கப்பட்டது. அவர்கள்தான் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னணி ஊழியர்களாக மாறினர். முக்கியமான கூட்டணி என்பது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், தென் ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, தென் ஆப்பிரிக்கத் தொழிற்சங்கக் காங்கிரஸ் ஆகியவற்றிற்கு இடையிலானது அல்ல. வெள்ளை மூலதனம் மற்றும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுடன் இணைந்து செயல்படும் கருப்பு முதலாளித்துவம் ஆகிய இரண்டும் இணைந்ததுதான் முக்கியமான கூட்டணியாக இருக்கிறது.  தனது நோக்கங்களை நிறைவேற்ற ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் அரசு மீதான கட்டுப்பாட்டைத்தான் இந்தத் திட்டம் பெரிதும் நம்பியிருந்தது. இந்த நோக்கத்தை நிறைவேற்ற, கூட்டணியில் உள்ளவர்களை ஒதுக்கி வைக்க 1996 திட்டம் முயன்றது. சில சமயங்களில், முக்கியமான முடிவுகளை அரசு எடுக்கும்போது ஆப்பிரிக்க தேசிய காங்கிரசையும் ஒதுக்கி வைக்க முயன்றார்கள்.
இது காலனியாதிக்கத்திற்குப் பிறகு தங்கள் மேலாண்மையை நிலைநாட்டவும், தங்களுக்குச் சாதகமான கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும் முதலாளித்துவ வர்க்கம் மேற்கொண்ட முயற்சியாகும். இந்தத்திட்டத்தை நடைமுறைப்படுதத அரசு மற்றும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் வேலைமுறையில் கணிசமான மாற்றங்கள் தேவை. ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் பாரம்பரிய ஜனநாயக முறைக்கு மாறாக, தனிப்பட்ட முறையில், மூடிய கதவுகளுக்குள் பணியாற்றும் தன்மை தேவைப்பட்டது. விடுதலை சாசனத்தின் மீது நம்பிக்கை வைத்துப் பணியாற்றும் அனைத்துப் பிரிவினருக்குமான விரிவான தளம் என்பதிலிருந்து, ஆப்பிரிக்க தேசிய காங்கிரசை ஆளுங்கட்சியாக மாற்ற வேண்டியிருந்தது. அதேபோல், மக்களின் பிரச்சனைகளுக்காக அணிதிரட்டும் மற்றும் இயக்கங்களை நடத்தும் திறனையும் மழுங்கடிக்கச் செய்ய வேண்டிய அவசியமும் இருந்தது. இவையெல்லாம் அணிதிரட்டப் படாத அமைப்பாக, செயலற்ற கூட்டணியாக, அமைப்புக்குள் கடுமையான வேறுபாடுகளைக் கொண்டதாக, ஊழல், மோசடிகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் இல்லாமல், டெண்டர்களுக்காக சண்டை போடும் கோஷ்டி மோதல்கள் ஆகியவற்றில் திளைக்கும் இயக்கமாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரசை மாற்றியது. 
 
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் அரசின் ஒரு பகுதியினரால் நடைமுறைப் படுத்தப்பட்ட இந்தத் திட்டம், மக்கள் மற்றும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் அதிருப் தியை எற்படுத்தியது. நம்பிக்கையான கூட்டணிக் கட்சிகளான தென் ஆப்பிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தென் ஆப்பிரிக்கத் தொழிற் சங்க காங்கிரஸ் ஆகியவற்றிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்பதைச் சொல்ல வேண்டியதேயில்லை. தேசிய ஜனநாயகப் புரட்சிக்கு கடுமையான அடி என்று விமர்சித்து, இந்த முயற்சி களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றைத் தடுக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டனர். எங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடி யுமோ அங்கு, அதாவது கூட்டணியின் உள்ளுர் மற்றும் வெகுஜன அமைப்புகளில் கொள்கை ரீதியாகவும், வெகுஜன ரீதியாகவும் உழைக்கும் வர்க்கம் தாக்குதல் தொடுத்தது. அதேவேளையில், தனது சுதந்திரத்தையும், சொந்தமான பிரச்சாரங்களையும் கைவிட்டுவிடவில்லை. இவையெல்லாம் 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தேசிய பொதுக்குழுக் கூட்டத்தில் அதிருப்தியைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து போலொக்வானே மாநாட்டிலும் அந்த அதிருப்தி தொடர்ந்தது.
 
போலொக்வானேயில் 1996 திட்டத்திற்கு எதிராக ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் அடித்தள உறுப்பினர்கள் மத்தியில் கலகமே ஏற்பட்டது. டிசம்பர் 2007ல் தனது 52வது மாநாட்டை ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் நடத்தியது. இந்த போலொக்வானே மாநாட்டில் நடந்த அமைப்புத் தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி தாபோ பெகியை ஜேக்கப் சுமா தோற்கடித்தார். பல வழிகளில் இந்த மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருந்தது. ஆப்பிரிக்க தேசிய காங் கிரசின் ஜனநாயகப் பாரம்பரியத்தை அற்புதமாக இந்த மாநாடு நடைமுறைப்படுத்தியது. தலைமையில் தீவிர மாற்றம் மட்டுமின்றி, தனது 2007 மாநாடு பரிந்துரைத்த முற்போக்கான கொள்கைகள் பலவற்றையும் மாநாடு ஏற்றுக் கொண்டது.  1996 திட்டத்திற்கு, முழுமையான தோல்வி இல்லையெனினும் போலொக்வனே மாநாட்டில் அது பெரும் சரிவினைச் சந்ததித்தது. 
 
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், தென் ஆப்பிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தென் ஆப்பிரிக்கத் தொழிற்சங்கக் காங்கிரஸ் ஆகியவை கொண்ட கூட்டணியை உடைக்க வேண்டும், தேசிய ஜனநாயகப் புரட்சியின் பாதையிலிருந்தும், விடுதலை சாசனத்தில் அளிக்கப்பட்ட உறுதி மொழிகளில் இருந்தும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசை விலக்கி அழைத்துச் செல்லுதல் என்ற முதலாளித்துவ வர்க்கத்தின் முயற்சி தோல்வியடைந்ததும் இந்த மாநாட்டில் நடந்தது. சொல்லப் போனால், தனது முற்போக்கான தேசிய ஜனநாயகப் புரட்சியை பலப்படுத்த மற்றும் தீவிரப்படுத்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுக்கு ஒரு போலொக்வானே தேவைப்பட்டது என்ற கருத்து வந்தது.
 
(35) பத்தி 10.10 : கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனலின் இரண்டாவது காங்கிரசில் பேசியபோது லெனின் இவ்வாறு குறிப்பிட்டார் : நாடாளுமன்றப் போராட்டத்தில் பங்கேற்பது நேரத்தை வீணடிப் பது என்று இங்கு கூறப்பட்டது. நாடாளுமன்றத்தில் இருப்பது போன்று அனைத்து வர்க்கங்களும் ஆர்வம் காட்டும் வேறு ஏதாவது அமைப்பை நாம் கருதிக் கொள்ள முடியுமா? இதை செயற்கையாக நாம் உருவாக்க முடியாது. அனைத்து வர்க்கங்களும் நாடாளுமன்றப் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டால், அங்கு வர்க்க நலன்களும், மோதல்களும் பிரதிபலிக்கிறது என்பதுதான் காரண மாகும். அனைத்து இடங்களிலும் உடனடியாக ஒரு பொது வேலை நிறுத்தம் செய்து ஒரே அடியில் முதலாளித்துவத்தைத் தூக்கி எறிந்துவிட முடியும் என்றால், பல நாடுகளில் புரட்சி ஏற்கனவே நடந்து முடிந்திருக்கும். ஆனால் நாம் உண்மையான விவரங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும், வர்க்கப் போராட்டத் திற்கான ஒரு களமாக நாடாளுமன்றம் இருக்கிறது(தொகுப்பு நூல்கள் தொகுதி 31)
 
முதலாளித்துவ நாடாளுமன்றத்தை எவ்வளவு காலம் நம்மால் கலைக்க முடியவில்லையோ, அதுவரையில் அதற்கு எதிராக அதற்குள்ளும், வெளியிலும் இருந்து பணியாற்ற வேண்டும். கணிசமான அளவு உழைக்கும் மக்கள்(உழைப்பாளிகள் மட்டுமல்ல, அரைப் பாட்டாளிகள்,  மற்றும் சிறு விவசாயிகள்) அவர்களை ஏமாற்றுவதற்காக முதலாளித்துவத்தால் பயன்படுத்தப்படும் முதலாளித்துவ-ஜனநாயகக்கருவிகள் மீது எவ்வளவு காலத்திற்கு நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ, எந்த மேடையை மிகவும் முக்கியமானது மற்றும் உரிமை பெற்றதாக உழைக்கும் மக்களில் பின்தங்கிய மக்கள், குறிப்பாக உழைக்கும் மக்களில் தொழி லாளர்கள் அல்லாதவர்கள் நினைக்கிறார்களோ அதே மேடையில் இருந்து அந்த ஏமாற்று வேலையை நாம் அம்பலப்படுத்த வேண்டும். (தொகுதி 31, பக்கங்கள் 268-269)
 
எனினும், லெனின் எச்சரிக்கை செய்வதோடு, அழுத்தமாகவும் குறிப்பிடுகிறார்:
 
மக்களை விழிப்புணர்வு அடையச் செய்வதற்காக முத லாளித்துவ நாடாளுமன்றங்களில் புரட்சிகரத் தொழிலாளர்களின் கட்சி பங்கேற்க வேண்டும். இது தேர்தல் நேரத்திலும், நாடாளு மன்றத்தில் கட்சிகளுக்கிடையிலான சண்டையின்போதும் இதைச் செய்யலாம். ஆனால் நாடாளுமன்றப் போராட்டத்தையே வர்க்கப் போராட்டம் என்று குறுக்கிக் கொள்வது அல்லது மற்ற அனைத்துப் போராட்ட வழிகளும் கீழானது,  நாடாளுமன்றப் போராட்டமே  மிகவும் உயர்வானது, அதுவே தீர்மானகரமான வழி என்று பார்ப்பது, தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராக முத லாளித்துவத்தின் பக்கம் சாய்ந்து விடுவதாகும். (தொகுதி 30, பக்.272)
 
ஜெர்மனியைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகளுக்கு நாடாளுமன்ற வாதம் என்பது அரசியல்ரீதியாக காலாவதி ஆனதாகத்தான் இருந்தது. ஆனால், இதுதான் முழுமையானது என்று கருதி, நமக்கு காலாவதியாகிவிட்ட ஒன்று என்பதால் ஒரு வர்க்கத்திற்கு அல்லது வெகு மக்களுக்கும் அது காலாவதியான ஒன்றுதான் என்ற முடிவுக்கு வரக்கூடாது. மீண்டும் இங்கு இடதுசாரிகள் கார ணத்தை எவ்வாறு விளக்குவது என்பதை அறியாமல், வர்க்கக் கட்சியாக எப்படி நடந்து கொள்வது என்பதை அறியாமல், வெகு மக்களின் கட்சியாக எப்படி நடந்து கொள்வது என்பதை அறி யாமல் இருப்பதைப் பார்க்கிறோம். வெகுமக்களின் மட்டத்திற்கோ அல்லது வர்க்கத்தின் பிற்பட்ட பகுதியினரின் மட்டத்திற்கோ நீங்கள் இறங்கிவிடக்கூடாது. அது சந்தேகத்திற்கிடமில்லாதது. அவர்களுக்கு கசப்பான உண்மையை நீங்கள் சொல்லியே ஆக வேண்டும். அவர்களின் முதலாளித்துவ-ஜனநாயக மற்றும் நாடாளு மன்ற தப்பெண்ணங்களை – தப்பெண்ணங்கள் என்று சுட்டிக் காட்டுவது உங்கள் கடமையாகும். ஆனால் அதேவேளையில் வர்க்க உணர்வு மற்றும் ஒட்டுமொத்த வர்க்கத்தின், அனைத்து உழைக்கும் மக்களின்(முன்னேறிய பிரிவினருடையது மட்டுமல்ல) தயார் நிலை ஆகியவற்றின் உண்மை நிலை(கம்யூனிடுஸ்கள் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதில்லை) ஆகியவற்றை நிதானமாகக் கவனிக்க வேண்டும்.(தொகுதி 31, பக்கங்கள் 58-59).
 
(36) பத்தி 10.11 : இந்த சூழலில் லெனினை நாம் நினைவு கூரலாம் : இந்தக் கொள்கையை நோக்கி ஈர்க்கப்படுவது தவிர்க்க முடியாதது. அனைத்து நாடுகளின் சோசலிஸ்டுகளையும் இது ஈர்ப்பதற்கு, உச்சபட்ச அறிவியல் ரீதியாகவும், (சமூக விஞ்ஞானத்தில் உச்ச பட்ச வார்த்தை)    புரட்சிகரமாகவும் இருப்பது ஆகிய இரண்டையும் இணைத்ததே காரணமாகும். இந்த இணைப்பு தற்செயலானதல்ல. இந்தக் கருத்தை உருவாக்கியவரின் குணாம்சம் விஞ்ஞானி மற்றும் புரட்சியாளர் ஆகிய இரண்டையும் கொண்டிருப்பதால் இதை இணைத்துக் கொள்வதில்லை. இந்த இணைப்பு இயற்கையாகவும், பிரிக்க முடியாததாகவும் அமைந்திருக்கிறது.
 
(37) பத்தி 10.16 : நியூ செஞ்சுரி  என்ற தனது புத்தகத்தில் எரிக் ஹாப்ஸ்வாம் இவ்வாறு குறிப்பிடுகிறார் : தேசியம் பற்றிய கற்பனை மக்களின் உண்மையான அனுபவங்களிலிருந்து திடீரென்று எழுவதில்லை. பிறரிடமிருந்து, புத்தங்களிலிருந்து,  திரைப்படங் களிலிருந்து, தொலைக்காட்சிகளிலிருந்து என்று மக்கள் இதைப் பெற்றுக் கொள்கிறார்கள். அவைகள்  பெரும்பாலும் வரலாற்று நினைவுகளிலொ அல்லது வாழும் பாரம்பரியத்திலொ அங்கமாக இருப்பதில்லை. விதிவிலக்குகளாக சில இருக்கலாம். ஆனால் அவையும் தேசிய கற்பனையாக மாறுவதோடு, ஒரு மதம் உரு வாக்கியதாகவும் மாறி விடுகிறது. யூதர்களைப் பற்றியது இப்படித் தான். இஸ்ரேல் என்ற மண்ணிலிருந்து அவர்கள் வெளியேற்றப் பட்டதாக உள்ள கருத்து, அதற்கு உறுதியாகத் திரும்ப வேண்டும் என்ற அம்சம் ஆகியவை மத வழக்கமாகவும், இலக்கியத்தின் ஒரு பகுதியாகவும் மாறின. செர்பியர்களைப் பொறுத்தவரையும் இது உண்மைதான். மத்தியக் காலத்தில் செர்பிய நாட்டை இழந்தது, பழமைவாத மத சேவையின் ஒரு அங்கமாக மாறியது. அந்த ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ மத நம்பிக்கையின் அடையாளங்களாக செர்பிய இளவரசர்கள் மாறினார்கள். இது தனிப்பட்ட விவகாரம். ஆனால் இங்கு மறுபடியும், மக்கள் தொடர்ந்து இதை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கேள்வியல்ல, யாராவது ஒருவர் அவர்களுக்குத் தொடர்ந்து நினைகூட்டிக் கொண்டிருக்கி றார்கள், என்பதால்தான நினைவில் வைத்திருக்கி றார்கள். (அழுத்தம் நம்முடையது).
 
(38) பத்தி  10.20 : இந்திய நிலைமைகளில் சுரண்டப்படும் வர்க்கங் களின் ஒற்றுமையைக் குலைப்பதற்கான அத்தகைய முயற்சிகள் நடக்கின்றன என்பதை சிபிஐ(எம்) தெரிந்து வைத்துள்ளது. தொடர்ந்து நடந்துவரும் மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட அறிக்கைகளில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, 14வது மாநாட்டிலிருந்து தங்களின் உரிமைகள் மற்றும் சுயாட்சிக் கவுன்சில்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் பழங்குடி மக்களின் ஆர்வம் எழுச்சி பெற்றுள்ளதைக் குறிப்பிட்டுள்ளது. 15வது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல்-ஸ்தாபன அறிக்கையில், தனிப்பட்ட அடையாளத்திற்கான இயக்கங்கள் மீதான அணுகுமுறை என்ற தனிப்பட்ட பிரிவில், பிற்போக்கு சக்திகள் சாதி, பிராந்திய, இன அடையாளங்களை உழைக்கும் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதற்காகப் பயன்படுத்துவது பற்றி நமது நிலைப்பாட்டை விரிவாக விளக்கியுள்ளோம். 15வது காங்கிரஸ் அரசியல்-ஸ்தாபன அறிக்கை இவ்வாறு கூறுகிறது : இந்த நிகழ்வின் ஒரு அம்சம் என்னவென்றால், சமூக ஒடுக்குமுறையிலிருந்து வெளியில் வரவும் மற்றும் சாதி நிறைந் துள்ள சமூகத்தில் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளவும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வளர்ந்து வரும் உணர்வுகள் மற்றும் உந்துதல் ஆகியவையாகும். 
 
சமூக நீதி இயக்கங்களின் முழக்கம் வலுவானதாக இருக்கிறது. கிராமப்புறங்களில் தலித் மற்றும் நலிவடைந்த பிரிவினரில் பெரும் பகுதியினரைத் திரட்டுவதில் இது வெற்றியைத் தருகிறது. உயர் சாதியினரின் ஒடுக்குமுறையா அல்லது வேலைகளில் இடஒதுக்கீட்டிற்கான கோரிக்கையா என்று எந்தக் கேள்வி எழுந்தாலும் பழைய படி நிலைக்கு சவால் விடுக்க இவர்கள் முன்வருகிறார்கள். சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட இந்தப் பிரிவினரின் எழுச்சியில் அவர்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கும் ஒரு ஜனநாயக உள்ளடக்கம் உள்ளது. அதே நேரத்தில், வெறும் சாதி ரீதியிலான அழைப்பை விடுத்து வாக்கு வங்கிகளாக ஒருங்கிணைக்கும் குறுகிய நோக்கத் திற்காக சாதிப் பிரிவினையை நிலைத்திருக்கச் செய்யவும், இந்த நலிவடைந்த பிரிவினரை பொதுவான ஜனநாயக இயக்கத்திலிருந்து பிரித்து வைக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. சாதி ரீதியாகத் திரளுவதை குறுகிய அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்த பல சாதித்தலைவர்கள் முயல்கிறார்கள். அவர்கள் அனைத்து சாதி யிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பொதுவான இயக் கத்தை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இவ்வாறு, எந்த சாதி அல்லது சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்துப் பிரிவினரின் ஒற்றுமைக்காகப் போராடும் அதே வேளையில், அத்தகைய சாதிய அரசியலை நமது கட்சி எதிர்த்து நிற்க வேண்டும். சாதிய வன் கொடுமைகள் மற்றும் சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராக முன்னணிப் பாத்திரம் வகிக்கும் நேரத்தில், கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த மட்டில், சமூக நீதி என்ற முழக்கம் வெறும் இட ஒதுக்கீடுகள் மற்றும் வாக்குகள் சேகரிப்பு என்று மட்டும் குறுகிவிட முடியாது. வர்க்க உள்ளடக்கமான நிலச்சீர்திருத்தங்கள், விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி மற்றும் நிலப்பிரபுத்துவம் என்கிற அதிகாரத்தின் கீழ் நடக்கும் சமூக-பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஆகியவையும் அடங்கியிருக்க வேண்டும். அத்தகைய புரிதல் அனைத்து அடையாளங்களுக்கும் உண்மை யிலேயே பொருந்தும். அதேவேளையில், ஒவ்வொரு சமூகத்தின் தன்மையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 
 
(39) பத்தி 10.25 : ஒரு கடுமையான மார்க்சிய ஆய்வுக்குப்பிறகு தேசியம் என்ற கேள்விக்கு ஸ்டாலின் இவ்வாறு விளக்கமளித்தார்.  பொதுவான மொழி, பகுதி, பொருளாதார வாழ்க்கை மற்றும் பொதுவான கலாச்சாரத்தில் வெளிப்படும் உளப்பாங்கு, என்ற அடிப்படையில் வரலாற்று ரீதியாக கட்டமைக்கப்பட்ட நிலையான மக்கள் சமூகமே, தேசமாகும்,  பிற்போக்கு சக்திகள் தேசியத்தின் இந்த அம்சத்தை எப்போதுமே தவறாகப் பயன்படுத்துகின்றன. அதாவது, தங்கள் வர்க்க ஆட்சியை தாங்கிப்பிடிக்க இயக்கம் நடத்தவும், உணர்வுகளைத் தூண்டிவிடவும், பொதுவான கலாச்சாரத்தில் வெளிப்படும் உளப்பாங்கினைபயன்படுத்திக் கொள்கிறார்கள். ஸ்டாலின் சொல்கிறார் : அனைத்து வகை களிலும் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட(வேறு இனம் அல்லது மற்ற ஏதாவது ஒரு அடையாளம் கொண்ட பிற்போக்கு சக்திகளால்) தேசத்தின் முதலாளித்துவவாதிகள் இயல்பாகவே இயக்கத்தைத் துவக்குகிறார்கள். தனது சொந்த நாட்டினருக்கு அழைப்பு விடுத்து, தந்தை தேசம் பற்றி உரக்கப்  பேசுகிறார்கள். தங்கள் நலனே ஒட்டுமொத்த தேசத்தின் நலனாக முன்வைக்கிறார்கள். தந்தை தேசத்தின் நலன் காக்க சொந்த நாட்டினர் மத்தியிலிருந்து ஒரு படையை உருவாக்குகிறார்கள். நாட்டு மக்களும் இவர்களின் அழைப்புகளுக்கு செவிசாய்க்காமல் இருந்து விடுவதில்லை. இவர்களோடு திரளவும் செய்கிறார்கள். உயர்மட்டத்திலிருந்து மேற்கொள்ளப்படும் அடக்குமுறையால் அவர்களும் பாதிக்கப் படவே செய்கிறார்கள். இது அவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இப்படித்தான் தேசிய இயக்கம் துவங்குகிறது.
 
ஸ்டாலின் மேலும் சொல்கிறார்: இந்த முதலாளித்துவ தேசியவாதத்தின் கீழ் உழைக்கும் வர்க்கம் அணி திரண்டு வருகிறதா இல்லையா என்பது, எந்த அளவிற்கு வர்க்க பகைமைகள்  வளர்ந் துள்ளன, எந்த அளவுக்கு வர்க்க உணர்வு ஏற்பட்டுள்ளது மற்றும் எந்த அளவுக்கு உழைக்கும் வர்க்கத்தின் அமைப்பு வளர்ந்திருக்கிறது என்பதைப் பொறுத்துதான் அமையும். வர்க்க உணர்வுள்ள உழைக்கும் வர்க்கத்திற்கு, அதற்கு பயன்பட்டிருக்கும் சொந்தக் கொடி உள்ளது. அதற்கு முதலாளித்துவ வாதிகளின் கீழ் அணிதிரள வேண்டிய அவசியமில்லை.  
**********
 

 

Check Also

சிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி

தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் ...

Leave a Reply