தந்திரியின் சொத்து அல்ல சபரிமலை! – தோழர் பினராயி விஜயன்

பத்தனம்திட்டாவில் நடந்த இடது ஜனநாயக முன்னணி அரசியல் கொள்கை விளக்க கூட்டத்தில் பங்கேற்ற கேரள முதல்வரும், சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் பினராயி விஜயன் பேசியதாவது;

சபரிமலையில் தந்திரிகளுக்கல்ல, தேவசம் போர்டுக்கே அதிகாரம் உள்ளது. தங்களது இடுப்பில் கட்டியிருக்கும் சாவியின் மேல் அதிகாரம் முழுவதும் உள்ளதாக தப்புக்கணக்கு போட வேண்டாம். சபரிமலை நடை அடைப்பதும் திறப்பதும் தந்திரிகளின் உரிமையல்ல. சபரிமலை தந்திரியின் சொத்தல்ல. சபரிமலை உள்ளிட்ட இதுபோன்ற கோயில்கள் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் சொத்துக்களாகும். இதையெல்லாம் தந்திரி புரிந்து கொண்டால் நல்லது.

ஆந்திர மாநிலத்திலிருந்து குடியேறிய பார்ப்பன குடும்பமே தாழமண் குடும்பம். எனவே, தந்திரிக்கு முன்பாகவே சபரிமலையில் வழிபாடு நடந்துள்ளது. பிரம்மச்சாரியான பல கடவுள்கள், நம்பிக்கையாளர்களுக்கு இடையே உள்ளனர்.

பெரும்பாலும் வட இந்தியாவில்தான் அதெல்லாம். அத்தகைய கடவுள்கள் உள்ள இடங்களில் பூசாரியும் பிரம்மாச்சாரியாக இருப்பர். ஆனால் இங்குள்ள தந்திரியின் பிரம்மச்சாரியம் குறித்து நமக்கு தெரிந்ததே.

இங்குள்ள தந்திரி குடும்பத்தைக் கடந்து, பாலியல் வக்கிரங்களில் ஈடுபட்ட சம்பவத்தை நாம் மறந்துவிடக் கூடாது. நம்பிக்கையாளர்களுக்கு சபரிமலை செல்ல உரிமையுண்டு. அந்த உரிமை தொடர வேண்டும். அதற்கான பாதுகாப்பை அரசு வழங்கும்.

அமைதியான சூழலைக் கொண்டது சபரிமலை. அதை தகர்க்க முயற்சி செய்வோரிடம் எவ்வித சமரசமும் இல்லை. சபரிமலையின் புனிதம் நிலைநாட்டப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது. மதச்சார்பின்மையை தகர்க்க முயற்சி செய்வோரிடமும் சமரசம் இல்லை.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...