தமிழகம் முழுவதும் உள்ள ரயில் இருப்புப்பாதையை இருவழிப் பாதையாக மாற்றி மின்மயமாக்கிடுக!

 தமிழகம் முழுவதும் இருப்புப்பாதையை இருவழிப்பாதையாக மாற்றி மின்மயமாக்கிடுக! மத்திய ரயில்வேத்துறை அமைச்சரிடம் மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தல்!! தமிழகத்தில் ரயில்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மற்றும் ரயில்வே திட்டங்களை அமல்படுத்துவது சம்பந்தமாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் தினேஷ் திரிவேதியை தமிழக எம்.பிக்கள் சந்தித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ரயில்வே அச்சரை சந்தித்து, தமிழகம் முழுவதும் ரயில்வே இருப்புப்பாதைகளை இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்றும்; இவை அனைத்தையும் மின்மயமாக்க வேண்டும் என்றும், மெயின் லைன் வழியாக பகலில் செல்லும் ரயில்கள் சோழன் விரைவு வண்டி தவிர வேறு எதுவும் இல்லை; அதாவது, எழும்பூரிலிருந்து கடலூர், சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம் வழியாக திருச்சிக்கு ஏற்கனவே பகலில் இரு ரயில்கள் இருந்தன. இவை இரண்டும் ரத்து செய்யப்பட்டு விட்டன. எனவே, தற்போது சென்னையிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து சென்னைக்கும் மெயின் லைனில் பகலில் ரயில்கள் விடப்படவேண்டும்- போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார். கடந்த சுமார் 60 ஆண்டுகளாக தெற்கு மாவட்ட ரயில் பயணிகளின் சேவை குறித்து பெரிய முன்னேற்றங்கள் நடைபெறாதது குறித்த தனது கவலையையும் தெரிவித்தார். மேலும், மேல்மருவத்தூருக்குக் கடந்த பத்தாண்டு காலமாக, 2010 வரை படிப்படியாக கூடுதல் சிறப்பு ரயில்கள் விடப்பட்டன.

தற்பொழுது அவை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.  இதுகாறும் எவ்வளவு சிறப்பு ரயில்கள் விடப்பட்டதோ அதே எண்ணிக்கையில் மீண்டும் ரயில்கள் விடப்பட வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு வந்து செல்வதால் இது அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார். சென்னை எழும்பூர் ரயில்நிலையம் தென்மாவட்ட ரயில் பயணிகளுக்கு சேவை செய்யும் பொருட்டு, தொடர்ந்து செயல்பட வேண்டுமெனவும்; தேவைப்பட்டால் வடக்கு/மேற்குப் பகுதியில் இருந்து வரும் ரயில்களுக்கு கூடுதல் டெர்மினலாக இராயபுரம் ரயில் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளையும் அவர் வலியுறுத்தினார். மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். 

Check Also

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலை சித்ரவதையால் வாலிபர் குமரேசன் மரணம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 8 தென்காசி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அனுப்புநர்: நவநீதகிருஷ்ணன் (வயது 55/2020) த/பெ. ஆதிமூலம் ...

Leave a Reply