தமிழக மக்களுக்கு சிபிஎம் புத்தாண்டு வாழ்த்து

அரசியல்-சமூக-பொருளாதார மாற்றுக் கொள்கைகளுக்கான குரல்கள் வலுப்பெறட்டும்

முக்கியத் திருப்பங்களும் மறக்க முடியாத சோகங்களும் நிறைந்திருந்த 2012ம் ஆண்டிற்கு விடைகொடுத்து, புதிய நம்பிக்கைகளோடும் நியாயமான எதிர்பார்ப்புகளோடும் 2013ம் ஆண்டி னை வரவேற்கிற தமிழக மக்கள் அனை வருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநிலக் குழு தனது புத்தாண்டு நல்வாழ்த்து களை உரித்தாக்குகிறது.

உலக அளவில் முதலாளித்துவச் சந்தை வேட்டைகளுக்கும் அதனால் மக்கள் வாழ்வு சூறையாடப்படுவதற்கும் எதிரான போராட்ட அலைகள் எழுந்த தைக் கடந்த ஆண்டில் காண முடிந்தது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள் ளிட்ட மேற்குலக நாடுகளில் மாணவர் கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் அரசுகளின் தாக்குதல்க ளுக்கு எதிராகக் களம் இறங்கினார்கள்.

இந்தியாவில் மன்மோகன் சிங் அரசு ரத்தினக் கம்பளம் விரிக்கிற வால்மார்ட் நிறுவனத்தின் ஆக்டோபஸ்தனமான ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக, அதன் தலைமையகம் உள்ள அமெரிக்காவி லேயே போராட்டங்கள் நடைபெற்றன. வெனிசுலாவில் சாவேஸ் வெற்றி இடதுசாரிகளுக்கு உற்சாகம் அளித்தது. சீனாவின் பொருளாதார சாதனைகள் ஏகாதிபத்திய சக்திகளுக்குத் திகிலூட்டுவ தாக இருந்தது.அறிவியல் களத்தில், ‘ஹிக்ஸ் போஸான்’ அணுத்துகள் கண்டுபிடிப்பா னது, மூட நம்பிக்கைகளை விலக்கி, பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் நம் பிரபஞ்சத்தையும் உலகத்தையும் விளக் கிடுவோருக்குத் துணையாக வந்து சேர்ந்தது.

இந்தியாவில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு, உழைப்பாளிகளின் ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தை சூதாட்டப்பணமாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒரு அவச ரத்துடன் முடுக்கிவிட்டது. நாட்டு மக்க ளின் ஒப்புதலை விடவும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவன முதலாளிகளின் நற்சான்றிதழைப் பெறுவதில்தான் மன் மோகன் சிங் அரசு அக்கறை காட்டியது. இதையெல்லாம் நேர்மையான வழியில் அல்லாமல், பல்வேறு தில்லுமுல்லுகள், சில கட்சிகளுடன் ரகசிய பேரங்கள் என்ற அடிப்படையிலேயே நாடாளுமன் றத்தில் நிறைவேற்றிக் கொண்டது.

சில்லரை வணிகத்தில் அந்நிய கம்பெனிகளை அனுமதிக்கக்கூடாது என்ற தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லையென்றாலும், அந்நிய கம்பெனிகளை எதிர்த்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரிக்கட்சிகள் தொடர்ந்து போராடுவ தென்று முடிவெடுத்துள்ளன. இம்முடி வை தொடர்ந்து சென்னையில் வால் மார்ட் கம்பெனியை எதிர்த்து 26-12-2012 அன்று எழுச்சிமிக்க போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் தொடரும். மத்திய அரசு கடைப்பிடித்து வரும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை நகர்ப்புற, கிராமப்புற ஏழை, எளிய மக்களையும், நடுத்தர மக்களை யும் கடுமையாக பாதித்து வருகிறது. மக்களைக் காக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து போராடி வரு கின்றன. மாநிலத்தில் மின்வெட்டு, பருவ மழை பற்றாக்குறையாலும், பற் றாக்குறை காலத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தராததாலும், டெல்டா பிர தேசத்தில் சம்பா சாகுபடி கருகி விட் டது. இதனால் மனம் நொந்து 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற் கொலை செய்து கொண்டுள்ளனர். பருவமழை பற்றாக்குறையால் கிரா மப்புற மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

மின்வெட்டை போக்கிட, உடன டித்தீர்வு, நீண்டகாலத் தீர்வை முன் வைத்து மத்திய, மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தி வருகிறது. டெல்டா பிரதேச விவசாயிகள் மற்றும் மாநிலம் முழு வதுமுள்ள விவசாயிகளுக்கு, விவ சாயத் தொழிலாளர்களுக்கு நிவா ரணம் கோரி மத்திய, மாநில அரசு களை வலியுறுத்தி விவசாயிகள் சங் கமும், விவசாயத் தொழிலாளர் சங் கமும் வலுவாகக் குரலெழுப்பி வருகின்றன. தங்கள் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க போராடும் விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர் களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோள் கொடுத்து வருகிறது.

சமூகப் பண்பாட்டுக் களத்திலும் சரியான, அறிவியல் கண்ணோட் டத்துடனான செயல்பாடுகளை வளர்க்கத் தவறியதன் வெளிப் பாடாக தலைநகர் தில்லியிலேயே, ஓடும் பேருந்திலேயே ஒரு 23 வயது மாணவி, கயவர்களால் கொடூர மான முறையில் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டார், முன்னெப் போதும் காணாத கண்டன அலை கள் எழுந்ததைத் தொடர்ந்து அரசு அவரை சிங்கப்பூர் மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தது. ஆயி னும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இப்படிப்பட்ட பாலி யல் கொடுமைகளைத் தடுக்க திட்ட வட்டமான, கடுமையான சட்ட நடவ டிக்கைகளை மேற்கொள்ள வலியு றுத்துகிற இயக்கங்கள் தொடர் கின்றன.

அதே வேளையில், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களி லும் இந்த அளவுக்கு ஊடக வெளிச் சம் பாயாத பாலியல் குற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. சிறுமிகள் கூட பாலியல் வல்லுறவு வக்கிரத் தாக்குதல்களிலிருந்து தப் பிக்க முடியவில்லை. அதிலும் தலித் பெண்கள் மீதான தாக்குதல் சாதிய ஒடுக்குமுறை வன்மத்தோடும் இணைந்து தொடுக்கப்படுகிறது. பெண்கள் மீதான பாலியல் வன் கொடுமைகளை தடுத்திட மத்திய, மாநில அரசுகள் உறுதியான நட வடிக்கையை எடுத்திட வேண் டுமெனவும், மேலும் பாலியல் வன் கொடுமைகளில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை விரைவு நீதி மன்றத்தில் விசாரித்து உரிய தண் டனை வழங்கிட அரசுகள் நடவ டிக்கை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தி வருகிறது.

நாட்டு மக்கள் தொகையில் சரி பாதியாக உள்ள பெண்கள்பால் மறு பாதியாக உள்ள ஆண்களின் அணுகுமுறை, ஆண்-பெண் சமத்து வம் உள்ளிட்ட ஆரோக்கியமான தாக இருக்க வேண்டும். இத்தகைய பார்வையை உருவாக்கிட கல்வி மற் றும் பண்பாட்டு தளத்திலும் பொருத் தமான மாற்றம் உருவாக வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் தலித் மக் கள் குடியிருப்புகள் தாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டதன் பின்னணி யில் அவர்களது சிறு அளவு பொரு ளாதார – சமூக வளர்ச்சியையும் பொறுத்துக்கொள்ள முடியாத வன் மமும், அதன் பின்னணியில் வெறி யூட்டும் பிரச்சாரங்களும் இருக் கின்றன. இதைத் தொடர்ந்து தமிழ கத்தில் தலித் மக்களுக்கு எதிராக சாதிய ரீதியில் அணிதிரட்டல் முயற்சி கவலையளிப்பதாக உள் ளது. மேலும் காதல் திருமணம், கலப்புத்திருமணத்தை சிலர் எதிர்த்து பிரச்சாரம் செய்வது சாதிய மோத லுக்கே வழி வகுக்கும்.

சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக, சாதி மோதலை உருவாக்கும் போக்குக்கு எதிராக குரல் கொடுப்பதோடு தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட உழைப்பாளி களின் ஒற்றுமை காக்கவும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அயராது பாடுபட்டு வருகிறது.புதிய ஆண்டை வரவேற்கிற போது, இப்படிப்பட்ட அரசியல் – சமூக-பொருளாதார மாற்றுக் கொள் கைகளுக்கான குரல்கள் வலுப்பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி விரும்புகிறது. அத்த கைய இயக்கங்களின் வளர்ச்சியில் மாற்றங்கள் வேரூன்றட்டும், புதிய ஆண்டு அனைத்துப் பகுதி மக்க ளுக்கும் மகிழ்ச்சியூட்டும் ஆண்டாக மலரட்டும்.  

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply