தமிழக மீனவர் பிரச்சனை குறித்த சிபிஐ(எம்) தலைமைக்குழு‍ அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு இன்று புதுதில்லியிலிருந்து பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை:-

தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதும், சிறையில் அடைப்பதும் தொடர்வது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. தற்பொழுது 210 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களது 70 படகுகள் இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டுள்ளன. மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்திடல் வேண்டும்.

இருநாடுகளின் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், கடல் எல்லைக் கோடுகள் தாண்டப்படுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்க்கப்பட வேண்டும். இதற்கு இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் மற்றும் இரு நாட்டு அரசுகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய அரசு இந்தத் திசைவழியில் நடவடிக்கை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது.


English Version of the Statement:-

New Delhi, December 25: The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:-

The Polit Bureau expresses its deep concern at the continuing arrests and detention in Sri Lanka of fishermen from Tamilnadu. At present there are 210 fishermen and their 70 boats in Sri Lankan custody. The Central Government should immediately intervene to secure the release of the fishermen.

The problems faced by the fishermen of both countries and the crossing of maritime boundaries have to be discussed and settled. This requires a concerted effort by holding talks between representatives of fishermen of both countries and the two governments. The Polit Bureau urges the Central Government to take steps in this direction.
 

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

Leave a Reply