தமிழும் கன்னடமும் பயிற்று மொழியாக தொடரும் – பினராயி விஜயன்

கேரளத்தில் வாழும் தமிழ் மற்றும் கன்னட மக்களின் பிரச்சனைகளை ஆராய கேரள அரசு உறுதி தெரிவித்துள்ளது.

மொழிவழி சிறுபான்மையினரின் நலன்களை பாதிக்காத வகையிலேயே மலையாள மொழிச் சட்டம் அமலாக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மலையாளம் தாய் மொழியாக இல்லாத குழந்தைகளுக்கு, மலையாள மொழிப் பாடம் கூடுதலான ஒன்றாகவே இருக்கும். மொழிவழி சிறுபான்மையோர் வசிக்கும் பகுதிகளில் தமிழ் அல்லது கன்னடம் பயிற்று மொழியாக இருக்கும்.

இடுக்கியிலும், பாலக்காட்டிலும் தமிழ் பேசும் மக்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.

காசர்கோட்டில் கன்னடர்கள் வாழ்கின்றனர். மொழிவாரி சிறுபான்மை குடும்பக் குழந்தைகள் தங்கள் +2 வரையிலான தேர்வுகளை தங்கள் மொழியில் எழுத அனுமதிக்கப்படுவார்கள் என கேரள அரசு கூறியுள்ளது.

Check Also

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், விபத்திற்கு காரணமான பங்களா உரிமையாளர் மற்றும் கடமை தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இடிந்து விழுந்த கருங்கல் சுவரின் மீதமுள்ள பகுதியை முழுமையாக அகற்றிட வேண்டுமெனவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.