தமிழ்நாடு உருவாக கம்யூனிஸ்ட்டுகளே காரணம்!

இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டும். அதற்கு ஒரு மொழி பொது மொழியாக ஆக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். ஒரே மொழியாக இருக்க வேண்டும் என்பதால் ஒரு நாடு துண்டு துண்டானது என்பதற்கு நமது அண்டை நாடான பாகிஸ்தான் உதாரணம். இந்த நாட்டில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று செல்வது போல பாகிஸ்தானிலும் மேற்கு வாழ்கிறது, கிழக்கு தேய்கிறது என்ற வாதம் இருந்தது. கிழக்கு பாகிஸ்தானான வங்காளத்தில் உருது மொழியை கட்டாயமாக்க முயன்றதால் அந்த மக்கள் கொந்தளித்தார்கள்.

நமது நாட்டின் அரசியல் சாசனம் 22 மொழிகளை அங்கீகரித்து உள்ளது. இந்த 22 மொழியையும் ஏன் ஆட்சி மொழியாக ஆக்க முடியவில்லை. உலகம் முழுவதும் சுற்றுகிற மோடி எல்லா நாடுகளிலும் இந்தியிலேயே பேசுகிறார். அவரோடு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியிலா பேசுகிறார்? பயோரியா பல்பொடி விற்கிற கம்பெனி கூட தனது பொருளை விற்பதற்காக அந்த பாக்கெட்டில் அனைத்து மொழிகளையும் அச்சடித்து வைத்துள்ளார்கள். நீதிமன்றத்தில் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் குற்றக் குறிப்பாணையைக் கூட தமிழில் தர வேண்டும் என்று கேட்கிறோம். குற்றக் குறிப்பாணையை தமிழில் தர முடியாது என்று ஆங்கிலத்தில் அச்சடித்து கொடுக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் 1952 முதல் 56 வரை சென்னை மாகாண சபையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் தெரிந்தவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். ஒரு குட்டி இந்தியாவாக அந்த மாகாண சபை இருந்தது. அந்த சபையில் தாய் மொழியான தமிழில்தான் பேசுவோம் என்று கம்யூனிஸ்ட்டுகள் குரல் கொடுத்தார்கள். ஒரு மணி நேரம் பி.ராமமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் தமிழில் பேசினார்கள். அது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சி.சுப்ரமணியம் போன்றவர்கள் பாராட்டினார்கள். அதேபோல கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வந்த கம்யூனிஸ்ட்டுகள் அவரவர் தாய்மொழியில் பேசினார்கள். அந்த மொழிப் பற்றுதான் மொழிவழி மாநிலம் உருவாக காரணமாக அமைந்தது. தமிழ்நாடு உருவாவதற்கும் கம்யூனிஸ்ட்டுகளே காரணமாக இருந்தார்கள்.

– அ.சவுந்தரராசன்

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...