தமிழ்நாடு சேலம் உருக்காலை தனியார்மயமாக்கப்படுவது (SAIL) குறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிபிஐ(எம்) எம்.பி. டி.கே. ரங்கராஜன் கடிதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் அவர்கள் “சேலம் உருக்காலை தனியாருக்கு தாரை வார்ப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி” இன்று (19.10.2016) பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்.


19.10.2016

தமிழ்நாடு சேலம் உருக்காலை தனியார்மயமாக்கப்படுவது (SAIL) குறித்து

இந்திய உருக்கு வாரியத்தினை (SAIL) சேர்ந்த உருக்காலையான சேலம் உருக்காலையின் பங்குகளை விற்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது.

முன்பே இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பொழுது அந்த ஆலையில் பணியாற்றும் ஊழியர்களின் போராட்டத்தாலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டியக்கத்தின் எதிர்ப்பாலும் அவைகள் முறியடிக்கப்பட்டன. தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை எதிர்கொள்ள இயலாமல் ஏற்கனவே கைவிடப்பட்ட அதே முன்மொழிவினை அரசாங்கம் மீண்டும் கையிலெடுத்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

இந்த நாட்டில் துருப்பிடிக்காத உருக்கினை உற்பத்தி செய்யும் ஒரே பொதுத்துறை நிறுவனம் சேலம் உருக்காலை ஒன்றுதான். இதில் உற்பத்தி செய்யப்படும் உருக்கு மிகவும் உயர்ந்த தரமானதாகும். விண்வெளிகலங்கள், அணுமின் நிலையங்கள் முதலியவற்றிற்கு தேவையான மிகவும் நுணுக்கமான கட்டமைப்புகளுக்கு அது பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த ஆலை 4000 ஏக்கர் பரந்த நிலப்பரப்பில், ஊழியர்களுக்கான 300 குடியிருப்புகள், மருத்துவமனை, பள்ளிக் கூடம் ஆகியவை உள்ளடக்கிய ஒரு நிலப் பகுதியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கருவூலத்திற்கு வரியாகவே சுமார் ரூ. 2700 கோடியினை இந்த ஆலை வழங்கியிருக்கிறது, ஏற்றுமதியின் மூலம் ரூ. 3000 கோடி அந்நிய செலாவணி என்ற வகையில் வருமானம் ஈட்டியிருக்கிறது. இவ்வளவு பெரிய நிறுவனத்தின் பங்குகளை விற்பதென்பது பொன் முட்டையிடும் வாத்து-ஐ கொல்வதற்கு ஒப்பாகும்.

உலகம் முழுமையும் உருக்கு தொழில் தேவைக்கான கோருதல் ஏதுமின்றி மந்த நிலையினை சந்தித்துக் கொண்டிருக்கிறது, நம்முடைய உருக்கு தொழிலும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்நிலையில் நம்முடைய உள்நாட்டு உருக்கு தொழில்துறையின் வளர்ச்சிக்கு உதவுவதற்கு பதிலாக, அரசாங்கம் அதை முடமாக்கும் விதத்தில் கண்மூடித்தனமான உருக்கு இறக்குமதிக்கு அனுமதித்துள்ளது. நமது ஏற்றுமதியின் அளவு 6.6 சதமே உயர்ந்திருக்கும் பொழுது, இறக்குமதியோ 57.5 சதம் உயர்ந்துள்ளது. ஜப்பானுடனும், (தென்)கொரியாவுடனும் நாம் கையெழுத்திட்டிருக்கிறது விரிவான பொருளாதார கூட்டு பங்காண்மை ஒப்பந்தங்களை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என உருக்குத்துறை அமைச்சரகத்தின் ஆலோசனைகள் அரசாங்கத்தின் முன் உள்ளது; ஏனெனில் இந்த நாடுகளிலிருந்து மிகப்பெரிய அளவில் உருக்கு இறக்குமதிக்கு அந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கின்றன.

மேலும் போட்டி சந்தைக்கு நல்ல தரமான உருக்கினை கொண்டு போக உற்பத்தி செய்வது, ஆராய்ச்சி மற்றும்  வளர்ச்சிக்கான அமைப்பினை வலுப்படுத்த வேண்டும். ஆனால் பொதுத்துறை ஆலைகளுக்கு அவைகளின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டில் மிகக்குறைவான அளவே பயன்படுத்தப்பட்டுள்ளது; உருக்கு மற்றும் நிலக்கரி அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலையாணைக்குழு அதன் 2015-16ம் ஆண்டுக்கான அறிக்கையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டினை முழுமையாக பயன்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் பொதுத்துறையில் உள்ள உருக்கு ஆலைகள் அதன் பணித் திறனை பல மடங்கு உயர்த்த முடியும், தேச கட்டுமானத்திற்கு அதன் சீரிய பங்கினை ஆற்ற முடியும். அப்பெரும் முயற்சியில், சேலம் உருக்காலை பின் தங்கியிருக்காது.

ஆகவே, அரசாங்கம் சேலம் உருக்காலையின் பங்குகளை விற்பனை செய்யும் முயற்சியினை மேற்கொள்ள வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்.

நன்றியுடன்,

– டி.கே. ரங்கராஜன் எம்.பி.,


19-10-2016

 

PRIVATISATION OF SALEM STEEL PLANT (SAIL) IN TAMIL NADU

The Government has planned to disinvest shares of Salem Steel plant which is a plant under SAIL.

The earlier moves to disinvest shares was thwarted by the agitation of the workers of the plant and by the joint action of all political parties in Tamil Nadu. It is unfortunate the present Govt has taken on hand the same proposal which the earlier Govt dropped unable to face the wrath of public in Tamil Nadu.

The Salem steel plant is the only plant in Public Sector producing stainless steel in the entire country. The stain steel is of very high quality and is being used in highly critical structures in space craft, atomic power station etc. Further, the plant is established in a sprawling 4000 acres land scape, with 900 staff quarters, besides hospital school etc. The plant has contributed to the exchequer by means of tax about Rs2,700 crores and have earned about Rs 3000 crores foreign exchange by means of exports. To disinvest such a mammoth organization means killing the duck which is laying golden eggs.

The steel industry throughout the world is suffering from lack of demand due to recession and our steel industries are no exception to this. Instead of helping indigenous steel industries, the Govt has crippled our industries by allowing indiscriminate import of steel. In 2014-15 while our exports grew by 6.6% only, our imports grew by 57.5%. There were suggestions from the Steel Ministry to review the Comprehensive Economic Partnership Agreement with Japan and Korea as this agreement has enabled for huge imports of steel from these countries.

Further to the above, for the purpose of producing quality steel and at competitive price, the R&D has to be strengthened. But there is low utilization of the funds allotted for R&D by the public sector plants and the Standing Committee on Steel and Coal in its 2015-16 report has suggested for taking stringent measures so that the funds allotted for R&D are fully utilized.

If the measures suggested above are implemented, our steel plants in Public sector will improve their performances by manifolds and will contribute for the nation building. In that endeavor the Salem Steel plant will not lag behind.

Hence I request the Govt not to proceed further with disinvestment of shares of Salem Steel Plant.

Thanking you,

Yours sincerely,

T.K.Rangarajan

Shri. Narendra Modi,

Prime Minister of India

PMO, South Block,

NEW DELHI – 110 001

பிரதமர் நரேந்திர மோடிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே. ரங்கராஜன் கடிதம்

Check Also

கடைசி தீர்வுக்கு அறிவுரை கூறும் பிரதமரே! முதல் தீர்வை முறையாக அமலாக்குங்கள்!

மொத்த தேசமும் அதிர்ந்து போயுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அறிவித்துள்ள தடுப்பூசி விலைகளைப் பார்த்துதான்… இரண்டாவது கோவிட் அலை ...