தலித் மக்களைச் சந்திக்கச் சென்ற மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்! தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!!

மதுரை, தும்மக்குண்டு தலித் மக்களைச் சந்திக்கச் சென்ற மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்! தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!!

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட தும்மக்குண்டு என்ற கிராமத்தில் திருவிழாவையொட்டி தலித் மக்கள் ஊருணியில் முளைப்பாரி கரைப்பது சம்பந்தமாக பிரச்சனை எழுந்துள்ளது. வருவாய்த்துறையினர் தலையிட்டு ஊருணி அரசுக்குச் சொந்தமானது. எனவே தலித் மக்கள் பயன்படுத்துவது தடுக்க முடியாதென தீர்ப்பளித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சிலர் தலித் மக்களை தாக்குவதும், அவமானப்படுத்துவதும் நிகழ்ந்திருக்கிறது. இது குறித்து கொடுக்கப்பட்ட புகார்களின் பேரில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் தலித் மக்களைச் சந்திக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி. ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எம். தங்கராசு உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் சென்றுள்ளனர். கிராமத்திலிருந்து திரும்பும் போது சாதி ஆதிக்க கும்பல் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களை தாக்கவும், வாகனத்தை சேதப்படுத்தவும் முயற்சித்துள்ளது.

இத்தகைய வன்முறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைத் தாக்கிய வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும், உரிய முறையில் புகாரளித்தும், உயரதிகாரிகளிடம் முறையிட்ட பிறகும், தலித் மக்கள் அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலை சித்ரவதையால் வாலிபர் குமரேசன் மரணம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 8 தென்காசி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அனுப்புநர்: நவநீதகிருஷ்ணன் (வயது 55/2020) த/பெ. ஆதிமூலம் ...

Leave a Reply