தலித் மாணவனின் மேல்படிப்புக்காக உதவித்தொகை தடைகளை விலக்க தலையிடுமாறு தமிழக முதல்வருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் டி.கே.ரங்கராஜன் கோரிக்கை

சரவணன் என்ற தலித் மாணவன் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மேற்படிப்பு மேற்கொள்வதற்கான அனுமதி பெற்றிருந்தார். அவருக்கு மருந்து கண்டுபிடிப்புத்துறையில் பி.ஹெச்.டி படிப்புக்கான இடம் கிடைத்திருந்தது. ஆனால் அந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அந்த படிப்பை அவரால் தொடர முடியவில்லை. காரணம், அதேபோன்ற மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி பயிலுவதற்கான உதவித்தொகை வழங்கும் தமிழக அரசின் திட்டத்தின் கொடுக்கப்பட வேண்டிய உதவி, காலத்தே அவருக்கு கொடுக்கப்படவில்லை. 2009-ம் ஆண்டிலிருந்து அவர் இதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அந்த உதவி கிடைக்கவில்லை. இன்று, அந்த துறைக்கான படிப்பில் அவர் சேர்வது என்பது காலவரையின்றி தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சில தகவல்களை தமிழக முதல்வருக்கு தோழர் டி.கே.ரங்கராஜன் கொண்டு வந்திருக்கிறார். 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தது; அதில் திரு.சரவணனுக்கு மேற்கண்ட படிப்பை மேற்கொள்வதற்க கல்விக்கான கட்டணம், வாழ்க்கைப்படி, மற்றம் அவ்வப்போது ஏற்படும் தற்காலிக செலவுகள் உட்பட கல்விக்கான உதவித்தொகை வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. 2012 ஜனவரியில் தமிழக அரசிடமிருந்து அவருக்கான உதவித்தொகையினை கோரிப் பெறுவோம் என மான்செஸ்டர் பல்கலைக்கழகம் கொடுத்த ஆலோசனை கடிதத்தின் அடிப்படையில், சரவணன் சொந்தமாகவே பணம் திரட்டிக்கொண்டு மான்செஸ்டர் சென்று படிப்புத் தொடர தன் பெயரை பதிவு செய்து கொண்டார். ஆனால் தன்னுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொண்டு இந்தியாவுக்கு திரும்பி விட்டார். மான்செஸ்டர் பல்கலைக்கழகம் 2012, ஜனவரி 19ம் தேதியன்று கொடுத்த கடிதத்தின் படி அவருடைய மேலாளர் அவரின் வாழ்க்கைச் செலவுக்கு தேவையான தொகையினை பெறுவதற்காக இந்தியா திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு அரசுத்துறை, ஒரு மாணவனக்கு வெளிநாட்டில் படிப்பு தொடர உதவித்தொகை வழங்கப்படும் என வெளிநாட்டு பல்கலைக்கழகத்திற்கு எழுதிவிட்டு, அதை பிறகு விலக்கிக் கொள்வது என்பது நல்ல அறிகுறி அல்ல; அது வெளிநாட்டு நிறுவனங்களிடையே அரசின் நம்பகத்தன்மையினை மிகவும் பாதிக்கக்கூடியதாக இருக்கும். தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு மிகவும் கீழ்நிலையில் வாழும் சமூகத்திலிருந்து வரும் அந்த மாணவன் வெளிநாட்டு பல்கலைக்கழக படிப்பு தொடர போதுமான நிதியினை பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என தோழர் டி.கே.ரங்கராஜன் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.  

 

11th September 2012
 
The Honourable Chief Minister,
Govt of Tamil Nadu,
Fort St. George
Chennai.
 
Respected Madam Chief Minister
DALITH STUDENT THIRU SARAVANAN – SCHOLARSHIP FOR OVERSEAS STUDIES.
I bring to your kind attention the plight of a dalit student, Thiru . Saravanan, who secured admission in the University of Manchester,for a PhD course in Drug Discovery  but could not join the course in view of delay in funding from the Overseas Scholarship Scheme for such students from the Govt. of Tamil Nadu. He was struggling to join the course since 2009, as he could not secure the required funds and presently his joining has got postponed indefinitely. 
In this connection, I bring to your kind attention that The Adi Dravidar Welfare Department,by their letter dated 19-08-2010 (Copy enclosed for ready reference) advised the University of Manchester that Thiru. Saravanan would be provided Scholarship to cover Tuition fees, Maintenance allowance, contingency allowance etc. Finally, in January 2012, Saravanan based on an advisory form the University of Manchester that they will claim the scholarship amount from the Govt of Tamil Nadu, managed to travel to Manchester, using his own fund, registered with the University for pursuing his studies. However when he came to know that his application for scholarship has been rejected, he returned to India. In this connection I enclose the letter from the University of Manchester dated 19th January 2012 wherein he had the permission of his supervisor “to return to India in order to obtain funding to cover his living expenses “.  It would not augur well for a Govt Dept to advise a foreign University that the candidate will be provided with scholarship, and to cancel it subsequently as you are aware that this will affect the credibility of the Govt among the overseas institutions. 
Respected Madam Chief Minister, I seek your kind intervention to redress the grievance of a student from the down trodden community and to provide the necessary funding so that Thiru. Saravanan could pursue his overseas studies. 
Thanking you,
Yours sincerely,
T.K.Rangarajan MP,.
 

Check Also

சிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி

தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் ...

Leave a Reply