தலைக் கவசம் நியாயமான விலையில் கிடைத்திட உறுதிப்படுத்திடுக-சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தமிழக அரசே! தலைக் கவசம் நியாயமான விலையில் கிடைத்திட உறுதிப்படுத்திடுக! – சிபிஐ (எம்) வலியுறுத்தல்

தமிழகத்தில் இன்று முதல் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. தலைக் கவசம் அணிவது பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம். ஆனால் அதே சமயத்தில் குறுகிய காலத்திற்குள் இதை அமல்படுத்த வேண்டுமென்று நிர்ப்பந்திப்பது தரமற்ற தலைக்கவசங்களை கொள்ளை லாபத்திற்கு விற்று வாகன ஓட்டிகளை சிரமப்படுத்துவதற்கும், காவல்துறையினர் இதை பயன்படுத்தி அபராதமாகவும், வேறு வகையிலும் பயணிகளிடம் பணம் கறப்பதற்குமே உதவும். தமிழகத்தின் சில பகுதிகளில் இதையொட்டி சில எதிர்ப்பு நடவடிக்கைகளையும் பலர் நடத்தியிருக்கிறார்கள்.

தமிழக அரசு அனைவருக்கும் நியாயமான விலையில் தலைக் கவசம் கிடைக்க உத்தரவாதம் செய்ய வேண்டும். அது வரையிலும் தலைக்கவசம் அணியாமல் செல்வோரிடம் கெடுபிடி செய்வதையும், அபராதம் விதிப்பதையும் நிறுத்தி வைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...