“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”

தாய் மொழியை பாதுகாத்திடவும், இந்தி திணிப்பை எதிர்த்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் “தாய்மொழி பாதுகாப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு” 2019 நவம்பர் 5 அன்று, மாலை 5.00 மணியளவில், சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
இம்மாநாட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையேற்கிறார். கேரள இடது ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் ஏ. விஜயராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திரப் பிரதேச மாநிலச் செயலாளர் தோழர் பி. மது, தெலுங்கானா மாநிலச் செயலாளர் தோழர் டி. வீரபத்ரம், கர்நாடக மாநிலச் செயலாளர் தோழர் யு. பசவராஜ் மற்றும் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திருமிகு. மா. ராசேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே. பாலபாரதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். தோழர்
சு. வெங்கடேசன் எம்.பி., மாநாட்டு தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றுகிறார். பேராசிரியர் தோழர் அருணன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார். கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் அ. பாக்கியம், வடசென்னை மாவட்டச் செயலாளர்
எல். சுந்தரராஜன் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றனர். 
இந்நிகழ்ச்சிக்கு தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சியின் சார்பில் நிருபர் / புகைப்பட / வீடியோ பட நிபுணரை அனுப்பி வைத்து செய்தி சேகரித்து பிரசுரிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Check Also

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், விபத்திற்கு காரணமான பங்களா உரிமையாளர் மற்றும் கடமை தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இடிந்து விழுந்த கருங்கல் சுவரின் மீதமுள்ள பகுதியை முழுமையாக அகற்றிட வேண்டுமெனவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.