திண்டுக்கல்-ஜி.நடுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில்‍ முறைகேடு‍

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஜி. நடுப்பட்டி ஊராட்சியில் வார்டு எண் 1, வார்டு எண் 4 ஆகியவை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த ஊராட்சியில் பெண்கள் ஒதுக்கீட்டை அமலாக்காமல் 6 வார்டுகளிலும் ஆண்கள் போட்டியிட அனுமதிக்கப்பட்டு போட்டியிட்டுள்ளனர்.

தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பெண்களுக்கான வார்டுகள் 1 மற்றும் 4 என அறிந்த தேர்தல் அலுவலர்கள் அந்த வார்டுகளின் தேர்தலில் வெற்றி பெற்ற ஆண் உறுப்பினர்களை வரவழைத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட வெற்றிக்கான சான்றிதழ்களை வாங்கிக் கொண்டு, தேர்தல் நடத்தாமலேயே போட்டியிடாத அவர்களுக்கு மனைவிகளின் பெயரில் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கியுள்ளனர். இது முறைகேடான ஒன்று. சட்டத்தையே கேலிக்கூத்தாக்கும் செயல்.

எனவே உடனடியாக மாநில தேர்தல் ஆணையம் இது குறித்து விசாரணை நடத்தி ஒதுக்கீடு இன்றி தேர்தல் நடத்தி தவறை மூடி மறைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கிய தேர்தல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், அந்த இரண்டு வார்டுகளுக்கு தேர்தலை ரத்து செய்து, ஒதுக்கீட்டின் அடிப்படையில் மறு தேர்தல் நடத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

 

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply