திமுக எம்எல்ஏ ஜே. அன்பழகன் மறைவு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜே. அன்பழகன் மறைவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திமுக-வின் மாவட்டச் செயலாளராக நெடுங்காலம் திறம்பட பணியாற்றிய ஜே.அன்பழகன், மூன்று முறை சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டு, மக்கள் பணியாற்றியவர். சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனைகளில் உரத்துக் குரல் கொடுக்கக் கூடிய ஆற்றல் மிக்கவர். சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது, மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றியவர்.

கொரோனா தொற்று காரணமாக சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரணப் பணிகளில் சுற்றிச் சுழன்று பணியாற்றியவர். இதன் காரணமாகவே, அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பது என்பது ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், திமுகவினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கே.பாலகிருஷ்ணன்

மாநிலச்செயலாளர்

Check Also

மருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி ...