திருப்பரங்குன்றம் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் பொன்னுத்தாய் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் !

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 – திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி திருப்பரங்குன்றம் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் பொன்னுத்தாய் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்…

 1.  அரசு கல்லூரி அமைந்திட
 2. கிராமப்புற வேலைவாய்ப்பு சட்டத்தை 150 நாட்கள் ஆக உயர்த்தி கூலி 400 பெற்றிட…
 3. மதுரை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட
 4. திருப்பரங்குன்றம் முருகன் கோயில் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தி பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் முழுமையாக செய்திட
 5. திருப்பரங்குன்றத்தில் ரயில்வே சுரங்கப்பாதை, பேருந்து நிலையம் சர்வீஸ் ரோடு அமைத்திட, தென்கால் கண்மாய் பாதுகாத்து பாசன வசதிகளை மேம்படுத்திட..
 6. நிலையூர் கால்வாய் பணியை முழுமையாக நிறைவேற்றிட
 7. அரசுப்பேருந்து, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம் ஆகியவற்றில் உள் கட்டமைப்பை மேம்படுத்திட…
 8. விவசாய விலை பொருட்களான மல்லிகை பூ உள்ளிட்ட பொருட்களை பாதுகாக்க குளர்பதன கிடங்கு அமைத்திட… நறுமண திரவிய தொழிற்சாலை உருவாக்கிட
 9. வடபழஞ்சி ஐடி பார்க் முழுமையாக செயல்பட..
 10. புகழ்மிக்க கீழக்குயில்குடி சமணர் மலை, வரலாற்று சின்னங்களை பாதுகாத்திட…
 11. மாற்றுத்திறனாளி, முதியோர், விதவை உள்ளிட்டோருக்கான உதவித் தொகைகளை பெற்றுத்தர…
 12. விளையாட்டு மைதானங்கள் அமைத்திட…

வாக்களிப்பீர் !
சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்

Check Also

சிபிஐ(எம்) வேட்பாளர்களின் குற்ற பின்னணி விளம்பரம் !

சிபிஐ(எம்) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற பின்னணியின் விவரங்கள்! COMMUNISTPARTY-FORMATC-2-16×30-1Download Related