திருப்பூர் மருத்துவ மாணவர் சரவணன் மரணம் / தீவிர விசாரணை நடத்திட மத்திய உள்துறை அமைச்சருக்கு சிபிஐ(எம்) எம்.பி. டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் அவர்கள் இன்று (23.9.2016), திருப்பூர் மருத்துவ மாணவர் சரவணன் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்.


23-09-2016

DEATH OF SARAVANAN  – AUTOPSY REPORT  SUGGESTS MURDER

I invite a reference to my letter dated 15-07-2016 ( copy enclosed for ready reference) seeking for high level investigation in the death of Saravanan, who secured 47th rank in the AIIMS Entrance Examination and qualified for joining General Medicine course. In reply to it by your letter dated 27-07-2016 (copy enclosed) you assured that “the matter is being examined for appropriate action”.

Now the autopsy report of Saravanan is available in the public domain (copy enclosed) and the report states” Poisoning by intravenous injection. The exact fixing of cannula on the right forearm, as found in this case, is not possible by the deceased himself and self-insertion is ruled out. Injection cannula could only be inserted by a person trained with this procedure, hence it requires a meticulous investigation about the person/persons involved “.

The above observation clearly establish it is a case of murder with a motive. However, I am worried that the initial claim of Delhi Police that it is a case of suicide might have jeopardized the investigating agency collecting evidence for presence of outside forces at the place of crime.

Dear Rajnath Singh Ji, the murdering of a youth who had come to Delhi just for pursuing higher education, raises many issues of concern. It would shake the confidence of younger generation scrambling for higher education where competition is so intense and may dissuade them from competing.

Saravanan’s father is a Tailor, and had lot of expectation from his studious son. The death of Saravanan had shattered all their dreams of coming out of their poverty.

 I request that this criminal action needs to be investigated with all seriousness and the culprits are punished at the earliest. This will alone ensure confidence in the minds of the younger generation and their parents who would like their wards to compete in entrance examination of such prestigious institution like AIIMS.

Thanking you,

Yours sincerely,

/Sd-

Shri. Rajnath Singh,

Home Minister,

NEW DELHI 110 001


23.9.2016

அன்புள்ள ராஜ்நாத் சிங் அவர்களே,

திருப்பூர் மருத்துவர் சரவணன் மரணம்

பிரேத பரிசோதனை அறிக்கை கொலை என குறிப்பிடுகிறது

15.7.2016 அன்று தங்களுக்கு நான் எழுதிய கடிதத்தை (நகல் இணைக்கப்பட்டிருக்கிறது) உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) நடத்திய தேர்வில் 47வது இடத்தினைப் பெற்று பொது மருத்துவ படிப்பிற்கான தகுதியினையும் பெற்ற சரவணன் என்ற மாணவரின் மரணம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டுமென நான் கோரியிருந்தேன்.

இப்பொழுது பிரேத பரிசோதனை அறிக்கை பொதுமக்கள் கவனத்திற்கு வந்துள்ளது. (அறிக்கையின் நகல் இணைக்கப்பட்டுள்ளது) “ஊசி மூலம் உடலில் விஷம் செலுத்தப்பட்டுள்ளது. வலது முன்கையில் கான்னுலாவினை இறந்த மாணவன் தானாகவே செலுத்தியிருக்கலாம் என்பது சாத்தியமானதல்ல; தானே ஊசியினை செலுத்திக் கொண்டார் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. கான்னுலா ஊசியினை சில நடைமுறைகளோடு நன்கு பயிற்சி பெற்ற ஒருவரால் தான் உடலில் செலுத்த முடியும். ஆகவே இது தொடர்பானவர்களிடம் மிகவும் துல்லியமான, ஆழமான விசாரணை தேவைப்படுகிறது.”

மேலே குறிப்பிடப்பட்ட அறிக்கையின் வாசகங்கள் இது ஒரு நோக்கத்தோடு செய்யப்பட்ட கொலை என்பதை உறுதி செய்கிறது. ஆனால், துவக்கத்திலேயே இது ஒரு தற்கொலை நிகழ்வு என தில்லி காவல்துறை அறிவித்தது இதை விசாரித்துக் கொண்டிருக்கும் அமைப்பு குற்றம் நடந்த இடத்தில் வேறு சில வெளியார் சக்திகள் இருந்தனவா, அதற்கான சாட்சிகள் உண்டா என நடத்திக் கொண்டிருக்கும் விசாரணையினை பாதித்திருக்கிறது என நான் கவலையுறுகிறேன்.

அன்பு ராஜ்நாத் சிங் அவர்களே, உயர்நிலை படிப்புக்காக தில்லி வந்த ஒரு மாணவன் கொலை செய்யப்படுவது நாம் கவலைப்பட வேண்டிய பல பிரச்சனைகளை எழுப்பியுள்ளது. உயர் கல்விக்கான தேர்வு மிகவும் கடுமையாக இருக்கும் சூழலில் அப்போட்டியில் பங்கு பெற விரும்பும் இளைஞர்களின் நம்பிக்கையினை சிதைக்கும் வகையில் இந்நிகழ்வு உள்ளது. இது அவர்களை போட்டியிலிருந்து விலகி விடுமாறு அழுத்தம் கொடுக்கும்.

அம்மாணவன் சரவணனின் தந்தை ஒரு தையல்காரர்; நன்கு படிப்பாற்றல் பெற்ற மகனிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தார். சரவணின் மரணத்தால் வறுமையிலிருந்து வெளியே அவரின் குடும்பம் கொண்டிருந்த கனவுகள் தூள்தூளாகிப் போய்விட்டன.

இக்குற்றச் செயல் தீவிரமாக விசாரிக்கப்பட்டு குற்றவாளி உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அது தான் இளைஞர் சமுதாயத்திற்கு நம்பிக்கை அளிக்கும் என்பதோடு, எய்ம்ஸ் போன்ற உயர் கல்வி நிறுவனத்தில் தங்களின் குழந்தைகள் போட்டியிட்டு உரிய இடத்தைப் பெற வேண்டும் என விரும்பும் பெற்றோர்களுக்கும் நம்பிக்கையினைக் கொடுக்கும்.

இப்படிக்கு.

(டி.கே ரங்கராஜன் எம்.பி.,)

 

Check Also

தடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...