திருமதி. பிரேமலதா விஜயகாந்த் தங்கியிருந்த ஓட்டலுக்குள் புகுந்து அதிமுகவினர் அராஜகம் சிபிஐ(எம்) கண்டனம்

3.4.2016

சேலத்தில் தேமுதிகவின் முன்னணி தலைவரும், திரு. விஜயகாந்த் அவர்களின் துணைவியாருமான திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குள் புகுந்து அஇஅதிமுகவினர் இன்று (3.4.2016) அராஜகமான முறையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தின் மாநகரங்களில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் நேற்று (2.4.2016) தாதகாப்பட்டி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அஇஅதிமுக, திமுக ஆட்சி காலத்து செயல்பாடுகளை விமர்சித்து பேசியுள்ளார். இதனை சகித்துக் கொள்ள முடியாமல் பொறுமை இழந்த அஇஅதிமுகவினர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குள் புகுந்து அராஜகம் புரிந்துள்ளனர். இது ஜனநாயக அரசியலுக்கும், தேர்தல் நடைமுறை விதிகளுக்கும் எதிரானதாகும். எதிர்கட்சிகளின் பிரச்சாரத்தை தடுக்க முனையும் வன்முறை செயலாகும். தலைவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் இத்தகைய இழிசெயலில் ஈடுபட்ட வன்முறையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக தேர்தல் ஆணையத்தையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.

இதுபோன்ற வன்முறை நிகழ்வுகளை தடுத்த நிறுத்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...