திருமுருகன் காந்தி கைதுக்கு கண்டனம்

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜெனீவாவில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய போது அரசுக்கு எதிராக பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டி விமான நிலையத்திலேயே கைது செய்துள்ளனர். சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்த பின்னணியில், தற்போது அனுமதியின்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தது தொடர்பான மற்றொரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக அரசின் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மத்திய, மாநில அரசுகளைப் பற்றி விமர்சித்து பேசுபவர்களை தேச துரோக வழக்குகள், அவதூறு வழக்குகள் புனையப்படடு கைது செய்து சிறையில் அடைத்து வருவதை ஆட்சியாளர்கள் வாடிக்கையாக செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியே திருமுருகன் காந்தியின் கைது சம்பவம்.

இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும், கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் ...