தீண்டாமை கடைப்பிடிக்காமைக்காக விருதுபெற்ற திருவிளையாட்டம் ஊராட்சி மக்களுக்கு சிபிஐ(எம்) பாராட்டு

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட திருவிளையாட்டம் கிராம ஊராட்சி மக்களுக்கு தீண்டாமைக் கடைப்பிடிக்காமைக்கான 2013-2014ம் ஆண்டிற்கான விருதை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது. இதற்கான பரிசுத் தொகை ரூ.10 லட்சத்தை திருவிளையாட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் பி.சீனிவாசனிடம், மாவட்ட ஆட்சியர்  வழங்கி, பாராட்டியுள்ளார்.

1996 ஆம் ஆண்டில் பொதுத் தொகுதியாக இருந்த திருவிளையாட்டம் ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சீனிவாசனை சாதி வேற்றுமை பாராமல் தேர்ந்தெடுத்த மக்கள், 2011 ஆம் ஆண்டு தனித் தொகுதியான பின்னரும், மார்க்சிஸ்ட் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அவரை பேராதரவுடன் தேர்ந்தெடுத்தனர்.

உள்ளூர் தலித் மற்றும் பழங்குடியினர் இக்கிராமத்தில் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் நடத்தப்படுகின்றனர். பொதுக் கோவில், குடிநீர்க் கிணறு, கடைகள், ஹோட்டல்கள் ஆகியவற்றை சமத்துவமாக அனுபவிக்கும் கிராமமாகவும்  இக்கிராமம் உள்ளது. அனைத்து சாதிக்கும் பொது சுடுகாடும் இக்கிராமத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தீண்டாமையை எவ்விதத்திலும் கடைப்பிடிக்காத  மக்கள் உள்ள கிராமமாக திருவிளையாட்டம் தேர்வாகியுள்ளது.  1996-97- ஆம் ஆண்டிலும் மக்கள் மத நல்லிணக்கத்துடன் வாழும் – தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமமாக இக்கிராமம் தேர்வு செய்யப்பட்டு பரிசு பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. திருவிளையாட்டம் கிராம மக்களுக்கும், இக்கிராம நிர்வாகத்துக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

 

Check Also

சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க!

பெறுநர்உயர்திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,தமிழ்நாடு காவல்துறை,மயிலாப்பூர்,சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம். பொருள்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ...