தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதை கைவிடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த காடுவெட்டி குருவும், அவரது இயக்கத்தைச் சார்ந்த தலைவர்களும் தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது, சாதி மோதல்களை உருவாக்குவது, வன்முறையை தூண்டுவது, அரசியல் தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது தவறானது மட்டுமின்றி தமிழகத்தில் கலவரம் ஏற்படக் கூடிய, மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடிய நடவடிக்கை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஒரு போதும் தமிழக மக்கள் இரையாகி விடக் கூடாது என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தின் பொது அமைதியையும், மக்கள் ஒற்றுமையையும் பாதுகாத்திட மாநில அரசு சட்டவரம்புக்குட்பட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அதேநேரத்தில் நீதிமன்ற விசாரணையின்றி தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்தி யார் ஒருவரையும் கைது செய்து சிறையிலடைப்பது ஜனநாயக அணுகுமுறையாகாது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான நிலைபாடாகும்.

தற்பொழுது பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த காடுவெட்டி குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தியிருக்கும் தமிழக அரசினுடைய நடவடிக்கை சரியான அணுகுமுறையல்ல என்பதை சுட்டிக்காட்டுவதோடு, இந்நடவடிக்கையை கைவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மாநில அரசை வலியுறுத்துகிறது.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply