தேவை தலைவர் அல்ல… கொள்கை – திரிபுரா இடது முன்னணி பிரச்சார துவக்கத்தில் சீத்தாராம் யெச்சூரி

ஞாயிறன்று அகர்தலாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடிய பிரம்மாண்டமான பேரணியில் துவக்கியது. விவேகானந்தா மைதானத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் பேரணி – பொதுக் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அவரின் உரை பின்வருமாறு;

இராமாயணத்தை கவனமாக படியுங்கள். ஒட்டுமொத்த நாட்டையும் கைப்பற்றும் கனவுகளோடு ராமர் என்ற அந்த மன்னன் புறப்பட்டார். ஆனால் தனது கனவை நிறைவேற்ற முடியாத வகையில், லவா, குசா என்ற இரண்டு சின்னஞ்சிறிய சகோதரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். நரேந்திர மோடியின் கனவுகளை, சுத்தியலும், அரிவாளும் தடுத்து நிறுத்தும். மோடியின் ஆட்சியில் இந்த நாட்டிற்கு இரண்டு முகங்கள் உருவாகியிருக்கிறது. ஒரு முகம் ஒளிர்கிறது; மற்றொரு முகம் இருண்டு கிடக்கிறது. ஒளிர்கிற முகத்தை கொண்டவர்கள் வெறும் ஒரு சதவீத மக்களே. அவர்கள் கைகளில் இந்த நாட்டின் மொத்த செல்வத்தில் 60 சதவீதம் குவிந்து கிடக்கிறது. 99 சதவீத மக்களின் முகங்கள் வறுமையாலும் துயரத்தாலும் இருண்டு கிடக்கின்றன. இந்த நாட்டின் செல்வத்தில் வெறும் 40 சதவீதத்தை மட்டும்தான் மேற்கண்ட 99 சதவீத மக்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் நீடிக்கிறது.

This slideshow requires JavaScript.

இந்த நாட்டிற்கு தேவையான முகங்கள் இருண்டு கிடக்கிற ஏழை, எளிய மக்களுக்கு ஆதரவான கொள்கைகள்தானே தவிர, பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவான மோடி என்ற நபரின் தனிமனித சாம்ராஜ்யம் அல்ல.

பெருவாரியான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இது ஏதோ வெறுமனே வேலையின்மை பிரச்சனை என்பதல்ல; நாடு மிகப் பெரும் நெருக்கடிக்குள் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதன் பொருளாகும்.

மோடியின் குஜராத் மாடல் என்பது நாட்டு மக்களுக்கு எந்த பலனையும் தராத – திவாலாகி போன ஒரு தோல்வி மாடல். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத்தில் போதிய எண்ணிக்கையில் இடங்கள் பெறவில்லை என்றாலும், எப்படியாவது ஆட்சி அமைப்பது என்ற ஜனநாயகப் படுகொலையை மோடியும், அமித்ஷாவும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அருணாச்சலப் பிரதேசத்திலும், மணிப்பூரிலும் இப்படித்தான் செய்தார்கள். ஆனால் திரிபுராவில் மோடி – அமித்ஷாவின் மாயாஜாலம் எடுபடாது. பாஜகவின் கனவுகளுக்கு திரிபுரா பலத்த அடிகொடுக்கும். பொதுக் கூட்டத்தில் திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் து.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பிஜன்தர், இடது முன்னணி தலைவர் காகேன்தாஸ் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.

Check Also

வடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்

வட கிழக்கு தில்லியில் பிப்ரவரியில் நடைபெற்ற கலவரங்களின்போது இறந்தவர்கள் எண்ணிக்கை 54 என்றும், தில்லிக் காவல்துறையினர் இதனை 53 என்று ...