தோழர்கே.வரதராசன் மறைவுஅரசியல்தலைமைக்குழு அஞ்சலி

தோழர் கே.வரதராசன் மறைவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன் ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், தற்போது மத்தியக்குழுவின் சிறப்பு அழைப்பாளராகவும் இருந்துவரும் தோழர் கே.வரதராசன் மறைவுச் செய்தி கேட்டு, கட்சியின் அரசியல் தலைமைக்ழுழு ஆழ்ந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்திக் கொள்கிறது. அவர், சுவாச பிரச்சனை காரணமாக, இன்று (சனிக்கிழமை) மதியம் 2 மணியளவில் தமிழ்நாட்டில், கரூரில் மரணம் அடைந்துள்ளார். அவர் தன் மகனைக் காண்பதற்காக கரூர் சென்றிருந்தார். சமூக முடக்கத்தின் காரணமாக அங்கேயே தங்கியிருந்தார். அவருக்குத் தற்போது வயது 73.

மத்தியத்தரக் குடும்பத்தில் பிறந்த அவர், பட்டயப் பொறியாளரான தோழர் கே. வரதராசன், 1970இல் கட்சியில் சேர்ந்தார். 1978இல் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவில்6 உறுப்பினராக மாறினார். பின்னர் 1986இல் மாநில செயற்குழுவிற்கு உயர்ந்தார். 1998இல் கட்சியின் மத்தியக்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் 2002இல் மத்திய செயலகத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005இல் நடைபெற்ற கட்சியின் 18ஆவது அகில இந்திய மாநாட்டில் அரசியல் தலைமைக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தில்லியில் கட்சி மையத்திலிருந்து மத்திய செயலக உறுப்பினராகவும் பின்னர் 2005 முதல் 2015 வரையில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.   

1986இல் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவின் செயலாளராக இருந்த தோழர் கே. வரதராசன், 1998இல் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக மாறினார். தற்போது அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர்களில் ஒருவர்.  

தோழர் கே. வரதராசன் அவசரநிலைக் காலத்தில், ஈராண்டு காலம் கட்சியில் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தார். அப்போது கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

தோழர் கே.வரதராசன், எவரும் மிகவும் எளிதாக நெருங்கக்கூடிய ஒரு தோழர். மிகவும் எளிமையானவர். அவரின் தேவைகள் என்பவை மிகவும் சொற்பமாகும்.

அவரது  நினைவுக்கு அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த அஞ்சலியை செலுத்திக்கொள்கிறது. அது, தன்னுடைய இதயங்கனிந்த இரங்கல்களை அவருடைய மகள், மகன் மற்றும் குடும்பத்தாருக்குத் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Check Also

சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க!

பெறுநர்உயர்திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,தமிழ்நாடு காவல்துறை,மயிலாப்பூர்,சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம். பொருள்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ...