தோழர் பிடல் காஸ்ட்ரோவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்…

1926 இதே நாள், கியூப நாட்டின் பிரான் பகுதியில் பிடல் காஸ்ட்ரோ பிறந்தார். லத்தின் அமெரிக்காவின் மிகப்பெரிய புரட்சியாளராக வாழ்ந்தார், அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரியான படிஸ்டாவின் ஆட்சியை அகற்றி கியூபாவில் புரட்சி அரசமைத்தார்.

சோசலிசம் தோற்றுவிட்டதாக அவர்கள் பேசுகிறார்கள். ஆனால், முதலாளித்துவத்தின் வெற்றி எங்கே? ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும், லத்தின் அமெரிக்காவிலும் காட்ட முடியுமா?

– பிடல் காஸ்ட்ரோ

இளம் வழக்கறிஞராக தன் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், மன்கடா பர்ராக்ஸ் பகுதியைத் தாக்க சில 100 பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தினார். பாடிஸ்டா சர்வாதிகார அரசுக்கு எதிரான அந்த தாக்குதல் தோல்வியுற்றது, பிடலும் அவரின் சகோதரர் ராலும் கைது செய்யப்பட்டுள்ளனர். வரலாறு என்னை விடுதலை செய்யும் என்ற புகழ்பெற்ற 4 மணி நேர உரையை, இந்த வழக்கு விசாரணையின்போது ஆற்றினார். அவரின் விடுதலைக்கு பின் மெக்சிகோவுக்கு சென்று அங்கே தன் உற்ற தோழரான சே குவேராவை சந்தித்தார். மெக்சிகோவில் மீண்டும் திரண்ட புரட்சியாளர்கள் கிரான்மா படகில் கிளம்பி மீண்டும் தாக்குதலை தொடுத்தனர். மற்றவை வரலாறு.

Born: 13 August 1926, Birán, Cuba
Died: 25 November 2016, Havana, Cuba

‘ஒருமைப்பாட்டுக்கான உலக நாயகன்’ என்று ஐ.நா., சபையால் புகழாரம் பெற்ற ஒரே மனிதர் காஸ்ட்ரோ. அவரின் தலைமையில் கியூபா 158 நாடுகளுக்கும் மருத்துவர்களை அனுப்பும் நாடானது. அவர்கள் பல நாடுகளிலும் தாயிடமிருந்து குழந்தைக்கு ஹெச்ஐவி (HIV) பரவுதலை தடுத்தனர். 99% கல்வியறிவு, அனைவருக்கும் மருத்துவ வசதி வழங்கியது கியூபா. மெனிஞிட்டி பி தடுப்பு மருந்து, ஹபடைடிஸ் பி மற்றும் டெங்கு தடுக்கு மருந்துகளை கண்டறிந்தனர்.

தீவுக்கு வெளியே அமைந்த பல நாடுகளிலும் புரட்சிகர இயக்கங்களுக்கு பிடல் காஸ்ட்ரோ ஆதரவு கொடுத்தார். தென் ஆப்ரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும், பொலிவியா, நிகரகுவா மற்றும் அங்கோலா நாடுகள், கியூப துருப்புகளையும், மருத்துவர்களையும், ஆசிரியர்களையும் அனுப்பி உதவிபெற்ற சில நாடுகள்.

இன்றும் உலகின் அன்பைப் பெற்ற மனிதராக பிடல் இருக்கிறார். அவரின் மரணத்திற்கு உலகம் அதிர்ச்சியுற்றது. அவருடைய வாழ்க்கையை நினைவுகூர்ந்து உலகெங்கும் பல நிகழ்வுகளும் நடைபெற்றன.

வீரவணக்கம், தோழரே.

Check Also

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...