தோழர் L.G. கீதானந்தன் மறைவு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி

தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான  தோழர் L.G. கீதானந்தன் இன்று காலை கோவையில் மரணமடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாருக்கு வயது 72.

தோழர் L.G. கீதானந்தன் தனது 19வது வயதில் 1958ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக  சேர்ந்தார். 1964-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது, அதில் தன்னை இணைத்துக் கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நகரச் செயலாளராக சில ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ்நாட்டில் நடைபெற்ற நில மீட்சிப் போராட்டத்தில் பங்கேற்று ஒன்றரை மாதம் சிறைத்தண்டனை அனுபவித்தார்.  இந்திய- சீன எல்லை பிரச்சனையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டு காலம் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.  பிற்காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1982 முதல் 1992 வரை அக்கட்சியின் கோவை மாவட்டச் செயலாளராகவும், தேசிய கவுன்சில் உறுப்பினராகவும் செயல்பட்டார். 

என்சிபிஹெச் – இயக்குநராகவும் பல ஆண்டுகள் செயல்பட்டுள்ளார். 1980-ல் தத்துவார்த்த பயிற்சிக்காக சோவியத் நாடு சென்றிருந்தார்.   தோழர் கீதானந்தன் பல மார்க்சிய நூல்கள் எழுதியுள்ளார். மேலும் பல்வேறு மார்க்சிய நூல்களை மொழியாக்கம் செய்தும் வெளியிட்டுள்ளார். 2007ல் மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 53 ஆண்டு காலம் உழைக்கும் மக்களுக்காகவும், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காகவும் தன்னை முழுமையாக  அர்ப்பணித்துக் கொண்டவர் தோழர் எல்.ஜி. கீதானந்தன்.

தோழர் கீதானந்தன் அவர்கள் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. தோழர். கீதானந்தனை இழந்து வாடும் அவரது  குடும்பத்தாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.


 

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

Leave a Reply