நம்பிக்கை இல்லாத் தீர்மானம்: பாஜக அரசுக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் வாக்களிக்க வேண்டும்

நம்பிக்கை இல்லாத் தீர்மானம்:

தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக அரசுக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள்  வாக்களிக்க வேண்டும் சிபிஐ(எம்) வலியுறுத்தல்

பாஜக தலைமையிலான மத்திய அரசிற்கு எதிராக தெலுங்குதேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தீர்மானத்தை முழுமையாக ஆதரிக்கிறது.

மத்தியில் அதிகாரக் குவிப்பு,  மாநில உரிமைகளை நசுக்குவது, பாராளுமன்ற ஜனநாயகத்தை தனது வசதிக்கேற்ப வளைப்பது என எதேச்சதிகாரப் போக்கில் நடந்துகொண்டுவரும் பாஜக அரசுக்கு – வலுவான எதிர்ப்பினை இதன் மூலம் காட்ட வேண்டும்.

தமிழகத்திலும், காவிரி மேலாண்மை வாரியம் ஏற்படுத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் வலியுறுத்தி வருகிறோம். 6 வார கால அவகாசத்திற்குள் மேலாண்மை வாரியம் ஏற்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் இவ்விசயத்தில் மத்திய அரசு நாடகமாடிவருகிறது. தமிழக கட்சிகளை சந்திப்பதைக் கூட பிரதமர் மோடி தவிர்த்து வருகிறார்.

எனவே, தமிழக மக்களின் எதிர்ப்பைக் காட்டும் வகையில், தமிழக எம்.பிக்கள் அனைவரும் ஒரே குரலில், பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. குறிப்பாக தமிழகத்தில் அதிக எம்.பி.க்களைக் கொண்டுள்ள அதிமுக, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்காவிட்டால் அது தமிழக மக்களுக்குச் செய்கிற துரோகமாகவே அமைந்திடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக் காட்டுகிறது.

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...