நவம்பர் புரட்சி தின விழா!

மாற்று அணி அமைக்கும் முயற்சிக்கு ஜனநாயக சக்திகள் ஆதரவளிக்க வேண்டும் என ஜனநாயக சக்திகளுக்கு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெருந் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் என்.சங்கரய்யா கேட்டுக் கொண்டார்.

96வது நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழா வியாழனன்று (நவ.7) சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. செங்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய சங்கரய்யா கூறியது வருமாறு:1917ம் ஆண்டு நவம்பர் 7 அன்று நடைபெற்ற ரஷ்யப்புரட்சி உலகத்தின் அடிப்படையையே மாற்றி அமைத்தது. இன்னும் 4 ஆண்டுகளில் நவம்பர் புரட்சி தினத்தின் நூற்றாண்டு விழா தொடங்க உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்களின் சாராம்சம் சோசலிச லட்சியம்தான். மக்கள் சீனம், வடகொரியா, வியட்நாம், கியூபா போன்ற நாடுகளில் கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. தென்அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சோசலிசத்தை அடிப்படையாக கொண்ட அரசுகள் தோன்றி வருகின்றன.

ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் சேர்ந்து ஷாங்காய் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான நேட்டோ கூட்டுக்கு எதிராக பல நாடுகள் அணி திரண்டு வருகின்றன. காலனி நாடுகளாக இருந்து விடுதலை பெற்ற நாடுகளில் ஜனநாயகம் எழுச்சி பெற்றது. 1848ல் ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்ற மார்க்ஸ் கொடுத்த முழக்கம் நிறைவேறி வருகிறது.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் பிற்போக்கான பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும், பாஜகவின் இந்து மதவெறி எதிராகவும் மார்க்சிஸ்ட் கட்சி இருமுனைப் போராட்டம் நடத்தி வருகிறது. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளைக் கொண்டு மாற்று அணியை அமைக்கும் முயற்சியில் மார்க்சிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அந்தப் போராட்டத்தில் அனைவரும் இணைய வேண்டும்.தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும் அதன் வெகுஜன அமைப்புகளும் வளர்ந்து கொண்டு இருக்கின்றன.

கட்சி உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினரையும், குழந்தைகளையும், இளைஞர்களையும், மாண வர்களையும், பெண்களையும் பெரு மளவில் கொண்டு வந்து கட்சி அமைப் புகளை விரிவுபடுத்தவதே நவம்பர் புரட்சி தினத்திற்கான உண்மையான வீரவணக்கமாக இருக்கும்.இவ்வாறு சங்கரய்யா கூறினார்.

இந்நிகழ்வில் மாநிலச் செயற் குழு உறுப்பினர் க.கனகராஜ், தென் சென்னை மாவட்டச் செயலாளர் அ. பாக்கியம், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுக நயினார், அலுவலச் செய லாளர் எஸ்.ரமணி, அலுவலக ஊழியர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply