நாமக்கல் மாவட்டக்குழு மாநாடு!

குமாரபாளையம், டிச 17-

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நம்பியுள்ள ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கவும், காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்கவும் விரைந்து இடம் தேர்வுசெய்து பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட மாநாடுதீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட 6வது மாநாடு தோழர் என்.வரதராஜன் நினைவரங்கில் செவ்வாயன்று துவங்கியது. மாநாட்டிற்கு கே.தங்கமணி, எஸ்.நடராஜன் மற்றும் சம்பூரணம் ஆகியோர் தலைமை வகித்தனர். என்.சக்திவேல் கொடியேற்றினார். வரவேற்புக்குழு தலைவர் எஸ்.ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் எ.ரங்கசாமி வேலைஅறிக்கையை சமர்ப்பித்து பேசினார்.

முன்னதாக, குமாரபாளையம் ராஜம் தியேட்டரிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி துவங்கி பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது. பொதுக்கூட்டத்தில் மறைந்த முன்னாள் மாவட்ட செயலாளர் கே.கருணாகரன் நினைவாக கொண்டு வரப்பட்ட செங்கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்எல்ஏ பெற்றுக்கொண்டார். கொல்லிமலையிலிருந்து தோழர் சின்னமுத்து நினைவாக கொண்டு வரப்பட்ட ஜோதியை பெ.சண்முகம் பெற்றுக் கொண்டார்.

பள்ளிபாளையம், நாமக்கல், நாமகிரிப் பேட்டையிலிருந்து கொண்டு வரப்பட்ட கொடி மரம் மற்றும் தியாகிகள் ஜோதிகளை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து மாவட்டசெயலாளர் எ.ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தலைவர்கள் பேசினர்.

Check Also

கட்சியின் சொந்த பலத்தை பெருக்குவோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது அகில இந்திய மாநாடு 2018 ஏப்ரல் 18 முதல் 22 வரை தெலுங்கானா ...