நிராகரிக்க வேண்டிய குஜராத் மாடல்

நிராகரிக்க வேண்டிய "குஜராத் மாடல்"

தற்பெருமை பேச்சுகளை சுட்டெறிக்கும் உண்மைகள் :

பூதாகரமான வளர்ச்சியாக சித்தரிக்கப்படும் மோடி மாடல் வளர்ச்சி என்பது குஜராத் மாநிலத்தின் சாதனைகள் என்று விளம்பரப்படுத்தப்படும் அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த பூதாகரமான வளர்ச்சி வடிவம் எப்படி பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் குஜராத் முதல்வரின் பிரியத்திற்குகந்த சலுகை சார்ந்த முதலாளித்துவ குழுக்களின் தாராளஅத்தினால் உருவானது என்பதை எடுத்துக்காட்டும் ஏராளமான விவரங்கள் நம்முன் உள்ளன. நிலங்களை அவர்களுக்கு அள்ளிக் கொடுத்த மோடியின் தாராளத்தன்மையினை விளக்கி ஏற்கனவே வெளியிடப்பட்ட விவரங்கள் இந்த சிறிய புத்தகத்தின் இணைப்பாக கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த விவரங்களை ஒருங்கிணைத்து பரிசீலித்தால், மிகவும் குறைவான மதிப்பீட்டிலேயே அரசு கருவூலத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்பது புலனாகிறது. இது ஏதோ லஞ்ச ஊழல் தொடர்பான பிரச்சனை என்று சுருக்கி விட முடியாது. இது மிகவும் விளம்பரப்படுத்தப்படும் அந்த மாடலின் உள்ளார்ந்த அம்சமாகும். அவலச்சுவை நிறைந்த இந்த கதை இதோடு முடியவில்லை. மக்கள் மத்தியில் அப்பழுக்கில்லாத மனிதனாக தன்னை பிரகடனப்படுட்ததிக் கொண்டிருக்கும் மோடி தொழிலாளர்களைப் பற்றியோ, உழைக்கும் மக்களைப்பற்றியோ தவறிக்கூட வார்த்தைகள் எதனையும் சிந்தி விடவில்லை என்பதைக் கவனித்தீர்களா?

காரணம் இதோ, சொல்லப்படாத உண்மை ஒன்று உண்டு. மேலே குறிப்பிடப்படும் மோடி மாடல் மலிவான உழைப்பை அடிப்படையாகக் கொண்டது;  உழைக்கும் மககளின் வியர்வையாலும், ரத்தத்தாலும் கட்டப்பட்ட மிகக்கொடிய வடிவம்தான் இந்த மாடல். தம்பட்டமடித்து குஜராத் பறை சாற்றும் அதன் தொழில் மற்றும் வேளாண்துறை வளர்ச்சிகள் அனைத்தும் தொழிலாளிகளின் ஊதியத்தை தொடாதவைகளாகத்தான் உள்ளன. குறிப்பாக பெண் தொழிலாளர்கள் அதிகமான பாதிப்புக்கு உள்ளானவர்கள்

கல்விக்கும், மக்கள் சுகாதாரத்திற்கும் குஜராத் அரசு செலவிட்ட மிகக்குறைவான அரசு செலவினங்களின் மீது கட்டப்பட்டதுதான் இந்த மோடி மாடல். இது மிக மோசமான சமூக வளர்ச்சி குறியீடுகளை வெளிப்படுத்துகிறது. குஜராத்தில் உபரியாக நிறைய நிதி ஆதாரம் உண்டு, ஆனால் அது ஊட்டச்சத்தின்மை, நோய் மற்றும் கல்வியின்மை ஆகியவற்றை ஒழிக்க பயன்படுத்தப்படவில்லை. ஆகவேதான், முக்கியமான அம்சங்களில் மோசமான  சமூக நிலையினை சுட்டிக்காட்டுகின்றன. மக்களின் உழைக்கும் திறன் தன்னுடைய மாநிலத்தில் வளர்ச்சியடைந்திருப்பதாக மோடி சொல்கிறார்; ஆனால் குஜராத்தில் கல்வியறிவின்மை விகிதம் மற்ற பல மாநிலங்களைக் காட்டிலும் மிக மோசமான நிலையில்தான் உள்ளது.  ஏனெனில் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் விடுபடுபவர் விகிதம் குஜராத்தில் மிகவும் அதிகமாகும்.

வேறு வார்த்தைகளில் சொன்னால், உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டுவதன்மூலம் உபரியினை பெற்று அதை லாபஅதிகரிப்பிற்கு இட்டுச் செல்லும் வடிவம்தான் மோடி மாடல் என்பதாகும். வரிகள் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படவில்லை, கார்பபரேட் நிறுவனங்களின் லாபத்தினை உத்திரவாதம் செய்யும் சலுகைகள்/மானியங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. புள்ளிவிவரங்கள் அதை தெளிவுபடுத்துகின்றன.

குஜராம் மாநிலத்தின் வருவாய் அனைத்திந்திய சராசரியைக் காட்டிலும் குறைவு; அது மேலும் சரிந்து கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சியிலும், நகரமயமாதலிலும் நீண்ட வரலாற்றைக் கொண்ட குஜராத் மோடியின் கீழ் குறைவான வருவாய், குறைவான ஊதியம் கொண்ட மாநிலமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் மக்கள் மேற்கொள்ளும் செலவினங்களில் அது பிரதிபலிக்கிறது.

கிராமப்புறங்களில் 40 சதவிகிதம் மக்கள் ஒரு நாளைக்கு ரூ.40/-க்குள் தான் செலவு செய்கிறார்கள்; 90 சதவிகிதம் மக்கள் ரூ.75/-க்குள்தான் செலவிடுகிறார்கள்.

நகர்ப்புறங்களில் 30 சதவிகிதம் மக்கள் ரூ.55/-க்குக் கீழ்தான் செலவிடுகிறார்கள்; 60 சதவிகிதம்,  ரூ.80/-க்குத்தான் செலவிடுகிறார்கள்.

குஜராத்தில் மாதாந்திர தனிநபர் செலவினம் ரூ.2472/- இது அனைத்திந்திய சராசரியான ரூ.2477-க் காட்டிலும் சற்று குறைவு. செலவினங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 17 மாநிலங்கள் கொண்ட பட்டியலில், கிராமப்புற அளவில் குஜராத் 2000-ல் 4 வது இடத்தில் இருந்தது; 2012ல் அது 8-வது இடத்திற்கு இறங்கியது. அதேபோல் நகர்ப்புற அளவில் 7வது இடத்திலிருந்து 9வது இடத்திற்கு கீழிறங்கியது.

ஆலைத் தொழிலாளர்கள்

தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றாக குஜராத் இருந்த போதிலும், ஆலைத் தொழிலாளர்கள் ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைக் காட்டிலும் 30-40 சதவிகிதம் குறைவாகத்தான் ஊதியம் பெறுகின்றனர்.

நிலம், மின்சாரம், வரி விலக்குகள், எளிதில் வங்கிக்கடன் பெறும் வசதிகள் போன்று பெரிய அளவில் சலுகைகளை தொழில் அதிபர்களுக்கு கொடுத்த போதிலும், தொழிலாளர்களின் ஊதிய உயர்வில் அது பிரதிபலிக்கவில்லை. 2005-06ல் இருந்து 2010-11 வரை உள்ள கால கட்டத்தில் ஆலைத் தொழிலாளர்களின் ஊதியம் ஆண்டுக்கு சராசரியாக 9 சதவிகிதம் உயர்ந்தது; இது அனைத்திந்திய சராசரியன் அளவுதான்; ஆனால் அஸ்ஸாம் (13 சதவிகிதம்), கர்நாடகம்(12 சதவிகிதம்), ஆந்திரா(11 சதவிகிதம்) போன்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைவு. குஜராத்தில் உள்ள ஆலைத் தொழிலாளி அனைத்திந்திய சராசரியினைக் காட்டிலும் ரூ.23/- உயர்வினைத்தான் ஊதியத்தில் பெற முடியும்.

(Source: Annual Survey of Industries – 2010-2011)

குஜராத் மாநிலம் நாட்டிலேயே சிலவற்றில் மிகக்குறைவான ஊதிய அளவினைக் கொண்டது. நிரந்தர ஊழியர் அல்லது தற்காலிக ஊழியர், நகர்ப்புற அல்லது கிராமப்புற தொழிலாளி, ஆண் அல்லது பெண் தொழிலாளி என்று பல மாறுபட்ட உழைப்பு முறைகளில் – கிராமப்புற வேலை உறுதி சட்டத்தின் தாக்கத்திற்கு உட்பட்ட தற்காலிக கிராமப்புற பெண் தொழிலாளிகள் தவிர்த்து- உள்ள அனைத்து தொழிலாளிகளுக்கும் இது பொருந்தும்,

தொழிலாளிகளின் ஊதியம் குறித்து குஜராத்தின் சாதனை இதுதான்; ஐக்கிய முற்போக்கு அணி அரசின் கொள்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள தொழிலாளர்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள் மோடி தலைமையில் உள்ள இந்த அரசால் மேலும் பாதிக்கப்படுவர். நாட்டின் மீது மோடி திணிக்க முயலும் இந்த வளர்ச்சிக்கான மாடலை; இந்தியாவின் உழைக்கும் மக்கள் ஒருங்கிணைந்து தோற்கடிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி

இளைஞர்களுக்கான மந்திரக்கோல் தன்னிடம் இருப்பதாக மோடி பெருமை பேசிக்கொள்கிறார். குஜராத்தில் அவர்களுக்கான வேலை வாய்ப்பினை உருவாக்க அந்த மந்திரக்கோல் ஏன் பயன்படுத்தப்படவில்லை? உண்மையில், குஜராத்தின் வேலைவாய்ப்பு வளர்ச்சி வேகம் அனைத்திந்தியாவின் வேகத்தைக் காட்டிலும் குறைவு; பெண்களைப் பொறுத்தவரை, வேலை எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதுதான் மோடி மாடலின் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி.

2001-2011 கால இடைவெளியில் குஜராத்தில் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை படுமோசமாக 0,04 சதவிகிதம் உயர்வினைத்தான் பதிவு செய்தது; அதேசமயம் அனைத்திந்திய வளர்ச்சி அளவு 1.2 சதமாக இருந்தது. குஜராத்தில் பெண் தொழிலாளிகளின் எண்ணிக்கை 1 சதவிகிதம் குறைந்தது; ஆனால் தேசிய அளவில் அது 2.1 சதவிகிதம் அதிகரித்தது.

மக்கள் தொகை உயர்வோடு இணைத்துப்பார்த்தால் குஜராத்தின் தொழிலாளர்கள்/வேலை எண்ணிக்கை 2.8 சதசவிகிதம் குறைந்தது; தேசிய அளவில் அது 2.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

வேலை வாய்ப்புகள் உருவாவதைப் பொறுத்தவரை, மோடி மாடலால் குஜராத்தில் அவைகளை  உருவாக்க இயலாத நிலை என்பது ஐக்கிய முற்போக்கு அணி அரசின் நிலையினைக் காட்டிலும் மாறுபட்டதல்ல என்பதை வேலை வாய்ப்புகளுக்காக ஏங்கி காத்துக் கொண்டிருக்கும் தொழிலாளி வர்க்க இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். (Source: Census 2001 and 2011)

மாநில அரசின் நிதி எங்கே போனது?

கார்பபரேட் நிறுவனங்களுக்கு மிகவும் அதிகமான சலுகைகளை வழங்கிய குஜராத் அரசுக்கு அரசுத்துறை மூலம் மக்களுக்கு அளிக்க வேண்டிய கல்விக்கும், சுகாதாரத்துக்கும் செலவிட நிதி ஆதாரங்கள் இல்லை. இங்கே மன்மோகன் சிங் மாடல் தனியார் மயமாக்கலையும்,  முக்கியமான சமூக நல திட்டங்களுக்கான செலவினத்தை வெட்டுவதையும் மோடி செயல்படுத்தியுள்ளார். மிகவும் செலவு செய்ய வேண்டிய வணிக நோக்கோடு செயல்படும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளின் புகலிடமாக குஜராத் மாறியுள்ளது. கல்விக்காக செலவிடுவதில் 17 பெரிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் கீழே 14வது இடத்தில் உள்ளது.

கல்விக்கும் இல்லை

மோடி அரசு பொறுப்பில் இருந்த 10 ஆண்டு காலத்தில் கல்விக்கு அந்த மாநிலத்தின் மொத்த செலவினங்களில் சராசரியாக 13.2 சதவிகிதம்தான் செலவிடப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களின் சராசரியான 14.8 சதவிகிதத்திற்கும் இது குறைவானது.

முதல் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் படிப்பிலிருந்து 58 சதவிகிதம் பேர் விடுபடுகிறார்கள். இதில் அனைத்திற்கும் சராசரி 49 சதவிகிதமாகும்.

மோடி அறிவுசார் பொருளாதாரம் பற்றி வாய்ப்பந்தல் போடுகிறார். ஆனால் அவருடைய குஜராத்தில் உயர்கல்வியில் மொத்த நுழைவு விகிதம் 18 சதவிகிதம்தான்;  பழங்குடி மக்களைப் பொருத்தவரை இது மிகவும் மோசமானதாக உள்ளது; குஜராத்தில் அந்த விகிதம் 9.7 சதவிகிதம், அனைத்திந்திய விகிதம் 10.8 சதவிகிதமாகும். (Source : Selected Education Statistics-2010-2011 MHRD)

சுகாதாரத்துக்கும் இல்லை

சுகாதாரம் தொடர்பான குஜராத்தின் சாதனையும் மிகவும் மோசம்தான். சுகாதாரத்திற்கான செலவினம் குஜராத் மாநிலத்தின் மொத்த செலவினங்களில் 3.4 சதவிகிதம்தான். மற்ற மாநிலங்களின் சராசரி 4 சதவிகிதம். 17 பெரிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் 16வது இடத்தில் உள்ளது. (Source : RBI)

அதிகமான சிறார் மரண விகிதத்தில், பிறப்பு கால அன்னையர் மரண விகிதத்தில், மாநிலத்தில்பரவலாக உள்ள சத்துணவு போதாக்குறையிலும் இது தெளிவாகத் தெரிகிறது.

இந்தியாவுக்கு குஜராத் மாடல் தேவை இல்லை : இந்திய தொழிலாளி வர்க்கத்தால் குஜராத் மாடலை என்றென்றும் ஏற்றுக் கொள்ள இயலாது.

மோடியை, வளர்ச்சியினை நோக்கி செயல்பட்டு உறுதியாக நடவடிக்கைகளை எடுக்கும் தலைவர் என்ற கருததை உருவாக்க கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. ஆனால், அது ஒரு கேள்வியினை கேட்கப்படாமலேயே மறைத்து விடுகிறது. யாருக்கு வளர்ச்சி? யாருடைய நலன்களுக்காக உறுதியான நடவடிக்கைகள்?

இந்த சிறு புத்தகத்தில், கொடுக்கப்பட்ட விவரங்கள் ஒரு அடிப்படையான உண்மையினை தெளிவாக்குகிறது. பரவலாக பேசப்படுகிற இந்த குஜராத் மாடல் என்பது தொழிலாளர்களையும், கிராமப்புற, நகர்ப்புற ஆண்கள், பெண்கள் அத்தனை பேரையும் அப்பட்டமான சுரண்டலுக்கு உட்படுத்தி உருவாக்கப்பட்ட வடிவம் என்பதை தெளிவாக்குகிறது.

உழைக்கும் மக்களுக்கு எதிரான குஜராத் மாடல் நிராகரிக்கப்பட வேண்டும்; தோற்கடிக்கப்பட வேண்டும்.

பிஜேபி/ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு மாற்றாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) -க்கு வாக்களியுங்கள். இடதுசாரி சக்திகளை வலுப்படுத்துங்கள்.

—————————————————————————————————————————————————————————————————————————

நிலங்கள் கொடை பற்றிய இணைப்பு

முந்த்ரா துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் : அதானிக்கு உதவியதில் ரூ.10000 கோடி இழப்பு

2003-04ம் ஆண்டில் மிகவும் செல்வாக்கு மிக்க அதானி குழுமத்திற்கு முந்த்ரா துறைமுகம் மற்றும் முந்த்ரா சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு 6700 ஹெக்டேர் நிலம் வழங்கப்பட்டது. விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு மிகப்பரந்த நிலப்பரப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நில ஒதுக்கீடு மிகவும் அடிமாட்டு விலையில், 1 சதுர மீட்டருக்கு ரூ1 லிருந்து ரூ,32 என்ற விலை அளவில் கொடுக்கப்பட்டது; பெரும்பாலான நிலம் 1 சதுர மீட்டருக்கு ரூ.10/- என்ற விலைக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த குழுமம் சாலைகளை அமைத்த பிறகு அந்த  நிலத்தை மனையிடங்களாகப் பிரித்து பல பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களுக்கு மிகவும் திகைப்பூட்டும் வகையில் சதுர மீட்டர் பல ஆயிரம் ரூபாய் விலைக்கு விற்று விட்டனர். அதன் விளைவு? அரசு கருவூலத்திற்கு ரூ.10,000 கோடிக்கு மேல் இழப்பு என கணக்கிடப்பட்டிருக்கிறது.

அதானி பவர் லிமிடெட் : அதானிக்கு மீண்டும் ஒரு பரிசு :

குஜராத்தின் பிஜேபி ஆட்சி, அதானி குழுமத்திலிருந்து நடைமுறையினை மீறி, மக்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும் புறந்தள்ளி, அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியது. 2006ம் ஆண்டு குஜராத்திற்கு மின்சாரம் அதிகம் தேவைப்பட்ட பொழுது, குஜராத் உர்ஜவிகாஸ் நிகாம் லிமிடெட்(அரசு நிறுவனம்)  மாநிலத்திற்கு 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தனியார் நிறுவனங்களை கோரலாம் என முடிவு செய்தது. அது அதானி குழுமத்திடமிருந்து மின்சாரம் வாங்குவதற்கான இரண்டு ஒப்பந்தங்களில் (ஞடிறநச ஞரசஉயளந ஹபசநநஅநவே) ஒவ்வொன்றும் தனித்தனியே 1000 மெகாவாட் உற்பத்தி செய்ய வேண்டும் என்று) கையெழுத்திட்டது; ஒரு யூனிட் மின்சாரத்திற்கு முறையே ரூ.2.89, ரூ.2.35 என்ற விலையும் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அதானியுடன் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன், அந்த அரசு நிறுவனம் கோஸ்டல் குஜராத் பவர் பிராஜெக்ட் (Power Purchase Agreement) என்ற நிறுவனத்துடன் ஒரு யூனிட்டுக்கு ரூ.2.26 என்ற விலையில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அதாவது அந்த இரண்டு ஒப்பந்தங்களிடையே ஒரு யூனிட்டுக்கு 0.63 பைசா வித்தியாசம் இருந்தது. தோராயமாக போட்ட ஒரு கணக்கின்படி அந்த அரசு நிறுவனம் 2011ல் 7000 மில்லியன் யூனிட் மின்சாரம் வாங்கியதற்கும் 2012ல் 14393 யூனிட் வாங்கியதற்கும் முறையே ரூ.441 கோடி, ரூ.906 கோடி அதிகமாக அதானி பவர் லிமிடெம் நிறுவனத்திற்கு கொடுப்பதில் முடிந்தது. அதாவது அதானி குழுமத்திற்கு மொத்த லாபமாக ரூ.1347 கோடி கிடைத்தது. மறுமுனையில், மின்சாரம் நுகர்வும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தாங்கள் கொடுக்க வேண்டியதைக் காட்டிலும் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை பெற வேண்டி வந்தது.

கார்ப்பரேட்டுகளை மகிழ்விக்கும் ஒப்பந்தங்கள்

2ஜி அலைக்கற்றை ஊழலில் டாடா டெலி கம்யூனிகேஷனோடு இணைந்த செயல்பட்ட எஸ்ஸார் குழும நிறுவனங்களுக்கு மோடியிடமிருந்து பாசமிகு ஒப்பந்தம் கிடைத்தது. வனப்பகுதிகள் உள்ளிட்ட கரையோர கட்டுப்பாட்டு மண்டலத்தின் ஒரு பகுதியினையும் உள்ளடக்கிய 2,07,60,000 சதுர அடி நிலம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் இம்மண்டலங்களில் எந்த வளர்ச்சி நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாது என தடை விதித்திருக்கிறது. இந்த நிலத்தை   ஒதுக்கீடு செய்த போது வனப்பாதுகாப்புத்துறை அதிகாரி அதற்கு எதிராக, 1927-ம் ஆண்டு இந்திய வனங்கள் சட்டத்தின் படி தண்டனைக்குரிய வளர்ச்சிகளின் மீதான தாக்குதல் என்ற பிரிவில்  சு-11, சூடி2 டிக 2006-ன்படி  முறையீடு ஒன்றினை பதிவு செய்தார். அந்த சட்ட மீறல் குறித்து நான்கு வெவ்வேறு குற்றச்சாட்டுகளும்பதிவு செய்யப்பட்டிருந்தன; ஆனால் பிஜேபி அரசாங்கம் ரூ.20 லட்சம் அபராதம் விதித்து அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தது. சட்ட விரோதமாக அந்த இடத்தில் கட்டப்பட்டவைகளை நீக்கி அல்லது இடித்துத் தள்ளி, அந்த நிலங்களை வனத்துறையிடம் மீண்டும் கொடுத்து விட வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் அரசு நிர்வாகத்தால் நிறைவேற்றப்படவில்லை. எஸ்ஸார் நிறுவனம் அத்துமீறி கொடுக்கப்பட்ட நிலத்தை தங்கள் கைகளிலேயே தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. அந்த நிலத்தின் மதிப்பினை 1 சதுர மீட்டருக்கு ரூ.3000/-க்கு மேல் அதன் விலை என்பதிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும். இந்த விலை விகிதத்தில் அந்த நிலத்தின் மொத்தவிலை மதிப்பு ரூ.6228 கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது; இது அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழப்பாகும். இந்த இழப்பினை சுற்றுப்புற சூழலுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்போடு சேர்த்து பார்க்க வேண்டியுள்ளது.

மேற்கு வங்கத்திலிருந்து டாடாவை குஜராத்துக்கு கொண்டு வருவதற்கு மோடி ரூ.33000 கோடிக்கு சலுகைகள் கொடுத்தார். அதோடு கூட நாநோ தொழிற்சாலைக்காக நிலத்தடி நீர் ஆதாரங்களை உறிஞ்சி பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது; அதேசமயம் அருகில் உள்ள விவசாயிகளுக்கு அவர்களின் நிலங்களுக்கு பாசன வசதிக்கான தண்ணீர் கிடைக்கப்பெறாமல் போனது.

மற்றொன்றையும் நாம் குறிப்பிடலாம். 108 ஆண்டு பழமை வாய்ந்த நவசாரி விவசாய பல்கலை கழகத்திற்கு சொந்தமான சூரத் நகரின் பிரதானமான நிலப்பகுதியினை 7 நட்சத்திர விடுதி கட்டுவதற்கு சாட்ராலா இந்தியா குழுமத்திற்கு வழங்கப்பட்டது. இந்த நிலம் மிகக்குறைவாக 1 சதுர அடி ரூ.15000/- என்ற விலைக்கு விற்கப்பட்டது; அதனுடைய சந்தை விலை 1 சதுர அடிக்கு ரூ.1 லட்சம் என்பதாகும். உச்சநீதிமன்றத்துக்கு இது கொண்டு போனவுடன் குஜராத் அரசு விலையினை கொஞ்சமாக, 1 சதுர அடியின் விலை ரூ,35000/- என உயர்த்தியது. இந்த நிலவிற்பனை நடைமுறையில் அரசு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை இழந்திருக்கிறது.

சூரத், ஹஜிரா தொழில்துறை மண்டலத்தில் உள்ள பிரதான நிலத்தில் 8.00,000 சதுர மீட்டர் நிலம் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்திற்கு எந்த வகையிலான ஏல நடைமுறையின்றி 1 சதுர அடி ரூ.1 என்ற விலையில் வழங்கப்பட்டிருக்கிறது; உண்மையில் அந்த நிலத்தின் விலை 1 சதுர அடி ரூ.3500/- என்பதாகும். இங்கும் அரசு பேரிழப்பை சந்தித்திருக்கிறது.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி பெற்ற ஒரு தகவலின் அடிப்படையில் சுஜாலம் சுஃபலாம் யோஜனா (SSY) திட்டத்தின் கீழ் நடந்த ரூ.1700 கோடி ஊழல் வெளிவந்தது. வடக்கு குஜராத்தில் பாசன மற்றும் குடிநீர் வசதி அளிப்பதற்காக ரூ.6237.33 கோடி வழங்கப்படும் என மோடி அறிவித்தார். ரூ.2063 கோடிக்கான பணியினை டிசம்பர் 2005ல் முடிக்கப்பட வேண்டும் என நிர்ணயித்து அரசுக்கு சொந்தமான குஜராத் நீர் ஆதார வளர்ச்சி கழகத்திற்கு கொடுக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு வரை ரூ.1127.64 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. மாநில சட்ட சபையின் பொது கணக்குக்குழு (Public Accounts Committee) அரசு செலவினங்களை கண்காணித்து வெளியிட்ட அறிக்கையில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறையில் ரூ.500/- கோடிக்கு மேல் லஞ்சத்தில் மூழ்கியிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறது.

ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாக இந்த அறிக்கையினை சட்ட சபையின் முன் வைக்கப்படுவதை தடுத்து அதன் மிருக பலத்தை பிஜேபி அரசு வெளிப்படுத்தியது. எந்த தணிக்கை அதிகாரியின் (CAG) அறிக்கையிலிருந்து குறிப்புகளை பிஜேபி எடுத்துப் பேசுவதில் தயக்கம் காட்டுவதில்லையோ, அந்த அதிகாரிதான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட முறையில் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று விரிவாக குறிப்பிட்டிருக்கிறார்.

English Version:-

Check Also

‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ‘‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’’ புத்தகம் வியாழனன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் ...

Leave a Reply