நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் ஏப்ரல் 3 அன்று 5 ஆயிரம் கையெழுத்துக்கள்

மத்தியில் உள்ள  மோடி அரசு, அவசர சட்டத்தின் மூலம்  விவசாயிகளின் நலன்களுக்கு   விரோதமான நிலம் கையகப்படுத்தும் மசோதவை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர்.
விவசாயிகளுக்கு விரோதமான நிலம் கையகப்படுத்தும் மசோதவை கண்டித்து தமிழகம் முழுவதும், அனைத்து விவசாயிகள் சங்கமும் இணைந்து  5 கோடி கையெழுத்து வாங்க திட்டமிட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் வெள்ளியன்று கையெழுத்து இயக்கம் துவங்கியது. இதில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு மாவட்டச் செயலாளர் அ.விஜயமுருகன் தலைமையேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழுத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் முதல் கையெழுத்திட்டார். மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் வாழ்த்துரை வழங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்துவேல், நகர்செயலாளர் எல்.முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் பொறுப்பாளர் சக்திவேல், விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் பெரியகாந்தி, வட்டத் தலைவர் மங்கையற்கரசி, பெரியமுத்தையா ஆகியேர் உட்பட பலர் பங்கேற்றனர்.
இராஜபாளையத்தில் வட்ட செயலாளர் டி.நீராத்திலிங்கம் தலைமையில் மாவட்டத் தலைவர் ஏ.குருசாமி துவக்கி வைத்தார். வட்டக்குழு உறுப்பினர் பால்ச்சாமி, தொழிற் சக்ஙத் தலைவர்கள் பி.மாரியப்பன், சுப்பிரமணியன், அந்தோணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்சுழியில் ஒன்றிய செயலாளர் வி.பூமிநாதன் தலைமையில் மாவட்ட தணைத் தலைவர் வி.முருகன் துவக்கி வைத்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பி.அன்புச்செல்வன், மார்க்கண்டன், குமரன், மாயக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிவகாசியில் மாவட்ட துணைத்தலைவர் சி.மணிக்குமார் தலைமையில், தொழிற் சங்கத் தலைவர்கள் ஜே.லாசர், என்.முத்துராஜ், கே.முருகன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மகாலிங்கம்,  மல்லையாபுரம், ஏ.சி.அய்யனார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அருப்புக்கோட்டையில் வட்ட செயலாளர் அண்ணாத்துரை தலைமையில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.சந்திரமோகன் துவக்கி வைத்தார். கணேசன், ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Check Also

தனியார் சிப்ஸ் ஆலையை அகற்றக் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

விருதுநகர், ஆக.10: விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் கோவில் தெருவில் தனியார் சிப்ஸ் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை ...