நீட் எனும் கொலைக் கருவி… நாடாளுமன்றத்தில் பூஜ்ஜியம் நேரத்தில் சு.வெங்கடேசன்.எம்.பி. பேச்சு…

அனிதா முதல் ஜோதி ஸ்ரீதுர்கா வரை பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் மரணத்தின் துயரத்திலிருந்து மீளாவேதனையுடன் கேட்கிறோம் எப்பொழுது நீட் எனும் தேசிய தகுதித் தேர்வினை எப்பொழுது கைவிடுவீர்கள்.

நீட் எனும் திரிசூலத்தில் மூன்று முனை இருக்கிறது. ஒரு முனை, மாநில அரசின் கல்வி முறையையும், மாநில உரிமையையும் குத்திக் கிழிக்கிறது, மற்றொரு முனை டீச்சிங்கை கொன்று, கோச்சிங்கை கொண்டாடுகிறது, மூன்றாவது முனை மாணவர்களின் உளவியலை சிதைத்து தற்கொலைக்குத் தள்ளுகிறது.

இந்தக் கொடிய கொலைக்கருவியை இன்னும் எத்தனை குழந்தைகளின் மரனத்துக்குப் பின் கீழே போடுவீர்கள்?

மருத்துவ மாணவர் சேர்க்கை சம்பந்தமாக தமிழக சட்டப்பேரவை ஏக மனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பினார்.

அரசமைப்புச் சட்டம் 201ன் படி மசோதாவை திருப்பி அனுப்பினால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். ஆனால் இன்றுவரை காரணம் தெரிவிக்கப்படவில்லை. இது பற்றி நீதித்துறை ஆளுமைகள் கேள்வி எழுப்புவதில்லை.

ஆனால் திரைக்கலைஞர் சூர்யா கருத்து கூறினால் உடனே எதிர்வினை புரிகிறார்கள்.

நீதியும், தேர்வும், மனுநீதியின் சாயலாகவும், சாரமாகவும் மாறிவிடக்கூடாது என்பதால் கேட்கிறோம். நீட்டினை கைவிடுங்கள். கைவிடுங்கள். கைவிடுங்கள்.

Check Also

கடைசி தீர்வுக்கு அறிவுரை கூறும் பிரதமரே! முதல் தீர்வை முறையாக அமலாக்குங்கள்!

மொத்த தேசமும் அதிர்ந்து போயுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அறிவித்துள்ள தடுப்பூசி விலைகளைப் பார்த்துதான்… இரண்டாவது கோவிட் அலை ...