நீலகிரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்து வெள்ளம், நிலச்சரிவு, போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் பொதுமக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 20க்கும் மேற்பட்ட நிவாரண மையங்களில், ஏராளமான குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். விவசாய சாகுபடிகள் பெரிதும் அழிந்துள்ளன.

தமிழக அரசு உடனடியாக இம்மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிடவும், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் பயிர்கள், சேதமடைந்த வீடுகள், மரங்கள் உள்ளிட்டவைகளை கணக்கெடுத்து உரிய நட்ட ஈடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்:

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வைகள், துணிமணிகள், வீட்டு பொருட்கள் உள்ளிட்டவைகளை சேகரித்து நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென கட்சியின் மாவட்டக்குழுக்களை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டுமென கட்சி தோழர்களை கேட்டுக் கொள்கிறோம்.

Check Also

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், விபத்திற்கு காரணமான பங்களா உரிமையாளர் மற்றும் கடமை தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இடிந்து விழுந்த கருங்கல் சுவரின் மீதமுள்ள பகுதியை முழுமையாக அகற்றிட வேண்டுமெனவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.