பத்மஸ்ரீ விருதுபெற்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு சிபிஐ(எம்) வாழ்த்து

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம ஸ்ரீ விருது  2016-ம் ஆண்டுக்கான விருதினை தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவிற்கு இன்று குடியரசுத்தலைவர் வழங்கினார்.

பத்மஸ்ரீ வீருதுபெற்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

மாரியப்பன் தங்கவேல் மென்மேலும் பல சாதனைகளையும், வெற்றிகளையும் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...