பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வீழ்த்த முடியாதவை அல்ல. பஞ்சாபில் பாஜக 4வது இடத்திற்கு தள்ளப்பட்டது, மணிப்பூரிலும், கோவாவிலும் ஜனநாயகமற்ற வழிகளில்தான் ஆட்சியமைக்கிறது பாஜக.
உத்திரப் பிரதேசத்திலும் கூட 60 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் பாஜகவுக்கு எதிராகத்தான் வாக்களித்துள்ளனர். நாம் இந்த வெற்றி தொடரும் என்று நினைக்க வேண்டியதில்லை.
காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுடன் கைகோர்த்ததன் மூலம்தான் கோவாவிலும், மணிப்பூரிலும் பாஜக ஆட்சியமைக்கிறது. வரலாற்றின் நெடுகிலும், காங்கிரஸ் கட்சி வகுப்புவாதத்திற்கு எதிராக மிக மென்மையாக நடந்து கொண்ட சம்பவங்களைச் சொல்ல முடியும். தான் ஒரு மதச்சார்பற்ற கட்சி என்ற அடையாளத்தை காங்கிரஸ் இழந்துவிட்டது.
2014 ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது பாஜக நாடு முழுவதும் 31 சதவிகித வாக்குகள்தான் பெற்றது. மதவெறிக்கும், வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தால், நிச்சயம் இந்தியா வென்றுகாட்டும் என்று தோழர் பினராயி விஜயன் கூறினார்.