பாஜக ஹெச். ராஜாவின் பேச்சுக்கு சிபிஐ(எம்) கண்டனம்

சென்னை ஐ.ஐ.டி.யில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் பாஜக தலைமையிலான மத்திய அரசின் சமூகப் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்ததற்காக இவ்வமைப்பின் அங்கீகாரத்தை சென்னை, ஐ.ஐ.டி. நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை பறிக்கக் கூடிய அடிப்படையில் சென்னை, ஐ.ஐ.டி. நிர்வாகம் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ததை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்களும், ஜனநாயக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடுமையாக கண்டன குரல் எழுப்பி வருகின்றன. சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களும் நிர்வாகத்தின் ஜனநாயக விரோதப் போக்கை எதிர்த்து கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.

மத்திய அரசினுடைய ஐ.ஐ.டி. நிர்வாகத்தினுடைய ஜனநாயக விரோதப் போக்கை எதிர்த்து தொடர்ச்சியாக இயக்கம் நடைபெற்று வருகிற போது, சென்னை, ஐ.ஐ.டி. நிர்வாகத்திற்கு எதிராக போராடியவர்களை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டுமென்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார். மாற்றுக் கருத்துக்களை சகித்துக் கொள்ள முடியாத சங்பரிவாரத்தினரின் ஜனநாயக விரோதப் போக்கையே இது காட்டுகிறது.

சென்னை, ஐ.ஐ.டி. நிர்வாகத்தின் ஜனநாயக விரோதப் போக்கை நியாயப்படுத்துவதோடு அதை எதிர்த்து போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென்ற பாஜக தேசிய செயலாளர் ராஜாவின் பேச்சை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

Check Also

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலை சித்ரவதையால் வாலிபர் குமரேசன் மரணம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 8 தென்காசி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அனுப்புநர்: நவநீதகிருஷ்ணன் (வயது 55/2020) த/பெ. ஆதிமூலம் ...