மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள பத்திரிகைச் செய்தி;
திரிபுராவில் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் பாதல் சவுத்ரி, பாஜக அரசாங்கத்தின் வேட்டைக்கு இலக்காகி இருக்கிறார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை காவல்துறை கைது செய்திருக்கிறது.
அரசியல் உள்நோக்கம் கொண்ட, மனிதத் தன்மையற்ற இந்த கைது நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நேர்மையான கம்யூனிஸ்டுகளின் செயல்பாடு திரிபுரா மக்கள் நன்கு அறிவார்கள். பாஜகவின் சதி முயற்சிக்கு எதிராக சட்டப்படியும் அரசியல் வழிமுறைகளிலும் கட்சி போராடும்.