பாபர் மசூதி இடிப்பு வழக்கு; கயவர்களை குற்றமற்றவர்கள் என்றிருக்கிறது நீதித்துறை

லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பாபர்மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 32 பேர்களையும் விடுதலை செய்து அளித்துள்ள தீர்ப்பு, நீதியை கேலி செய்யும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை அளிப்பதற்காக 28 ஆண்டுகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. எனினும் கூட நீதி வழங்கப்படவில்லை.

மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் அங்கே நின்று அந்தக் கிரிமினல் நடவடிக்கைக்கு கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்த பாஜக-விஎச்பி-ஆர்எஸ்எஸ் இயக்கங்களின் உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் பாபர் மசூதி இடிப்புக்கு சதி செய்த குற்றச்சாட்டில் அப்பாவிகள் என்று நீதிமன்றம் கண்டிருக்கிறது.

சென்ற ஆண்டு நவம்பர் 8 அன்று அயோத்தி தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்திட்ட தீர்ப்பில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து மிக மோசமாக சட்டத்தை மீறிய செயல் என்று குறிப்பிட்டிருந்தது. இப்போது, லக்னோ நீதிமன்றம் இந்தக் குற்றத்தின் பிரதானக் கயவர்களை குற்றமற்றவர்கள் என்று கண்டிருக்கிறது.

இந்தத் தீர்ப்பு, இந்தியா என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தால் நிர்வகிக்கப்படும் மதச்சார்பற்ற – ஜனநாயக நாடு என்கிற சித்திரத்திற்குக் கறையை ஏற்படுத்திடும். மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) உடனடியாக இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு தாக்கல் செய்திட வேண்டும்.

அரசியல் தலைமைக்குழு

English Version: A Travesty of Justice

Check Also

கலவர நோக்கத்திற்காக நடத்தப்படும் பாஜகவின் ‘வேல் யாத்திரைக்கு’ தடை விதிக்க – சிபிஐ(எம்)வலியுறுத்தல்

தமிழகத்தில் ‘வேல் யாத்திரை’ என்கிற பெயரில் பாஜக கலவரத்திற்கு திட்டமிட்டிருக்கிறது. தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே ‘வேல் ...