பாரதீய ஜனதா கட்சியை தோற்கடிப்போம் – இந்திய தேசத்தைக் காப்போம்

ஹிட்லர் பிரச்சாரத்தின் பலத்தை அறிந்தவர்.  நாசி அரசாங்கத்தில் பிரச்சார மந்திரியாக இருந்தவர் ஜோசப் கோபிள். அவர்தான் நாசி பிரச்சாரத்தின் அபகீர்த்தியுள்ள ”மகா பெரிய பொய்” என்ற மந்திரத்தின் கர்த்தா ஆவார்.  நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்றால், அந்தப் பொய் பிரம்மாண்டமானதாக இருக்க வேண்டும்.  நூறு தடவை அதனை திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டும்.  மக்கள் அப்போது அதனை நம்பிவிடுவார்கள் என்பதுதான் அந்த மந்திரம்.  ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையில் ஏற்கனவே ஹிட்லரின் தாக்கம் இருப்பது நாம் அறிந்ததே.  எனவே, பாரதீய ஜனதா கட்சியும், அதன் முன்னணியில் உள்ள பிற கட்சிகளும்இந்த பிரச்சார மந்திரத்தை முற்றிலும் சந்தேகமேயில்லாமல் பின்பற்றி வருகின்றனர்.  வருகின்ற தேர்தலில் அவர்களுடைய சார்பில் பிரதம மந்திரிக்காக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் நரேந்திர மோடியின் பிரச்சாரமும் இந்த ”பெரிய பொய்” போன்றதேயாகும்.

ஆர்.எஸ்.எஸ் அவரை பிரதம மந்திரிக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது.  அநேகமாக இது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கான விஷயமல்ல.  ஆர்.எஸ்.எஸ் அதற்கு எதிரான பல வழக்குகளிலிருந்து விடுபடவும், இந்துத்துவா தீவிரவாதத் தாக்குதல்களில் அதற்கிருக்கும் பங்குபாத்திரம் வெளியில் தெரியாமல் தப்பிக்கவும் மோடியைத் தவிர யாரை அது நம்பிவிட முடியும் என்ற கேள்வி இருக்கிறது.

பொதுமக்களை குறிவைத்து தொடர்ந்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளின் பிரதான முதன்மை குற்றவாளியான அசீம் ஆனந்த் காரவன் பத்திரிக்கைக்கு பிப்ரவரி 2014ம் ஆண்டு கொடுத்த பேட்டியில் வெளியான வெடிகுண்டு தகவல் ஆர்.எஸ்.எஸ். சின் உயர்மட்ட தலைமைக்கும் இந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்புள்ளது என்பது தான்.  இந்த தகவலின் முக்கியத்துவம் எழுப்பிய பல்வேறு கேள்விகள்தான் மேலும் தீவிரமான புலன் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்தியது. 

அசீம் ஆனந்தைப் பொறுத்த வரையில் 82 நபர்களைக் கொன்ற மூனறு முக்கியமான தீவிரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவன். மேலும் பல தீவிரவாதத் தாக்குதல்களின் ஆழ்ந்த புலன் விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளவன்.  அவனைப் பொறுத்த வரையில் குஜராத்தின் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள வன்வாசி கல்யாண் சங்கம் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக பணியாற்றியவன்.  அந்த பேட்டியின் படி ,

  • 2005ம் ஆண்டு ஜுலை மாதம் சூரத்தில் நடைபெற்ற ஒரு ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்குப் பிறகு, அசீம் ஆனந்த் வசிக்கும் டாங்க்சில் உள்ள ஒரு கோவிலுக்கு ஆர்.எஸ்.எஸ்.சின் தற்போதைய தலைவர் மோகன் பகவத் மற்றும் இந்திரேஷ் குமார் ஆகியோர் சென்று அசீம் ஆனந்தை சந்தித்துள்ளனர்.  அங்கு வைத்துத் தான் இந்தியாவிற்குள் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் பல குண்டு வெடிப்புகளுக்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 
  • அப்போது பகவத் ”நாங்கள் இதில் ஈடுபடுத்தப்படவோ அல்லத சிக்கவைக்கப்படவோ மாட்டோம்.  ஆனால் இதை நீ செய்வதாக இருந்தால், நாங்கள் உன்னுடன் இருப்பதாக நீ நினைத்துக் கொள்ளலாம்………….நீ இதை செய்யும்போது நாங்கள் கவலையில் இருந்து விடுபட்டவர்களாவோம்………….. ஏனென்றால் இது கொள்கையுடன் சம்பந்தப்பட்டது.  இது இந்துக்களுக்கு மிக முக்கியமானது.  தயவுசெய்து செய்வாயாக.  உனக்கு எங்கள் ஆசிர்வாதங்கள் உண்டு.”

என்று மோகன் பகவத்தும், இந்திரேஷ் குமாரும் அசீம் ஆனந்திடம் சொன்னதாகத் தெரிகிறது. 

இந்த பேட்டி அசீம் ஆனந்தின் சட்டரீதியான பிரதிநிதி ஒருவரால் மறுக்கப்பட்டாலும்., காரவல் பத்திரிக்கை இந்த பேட்டி பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதற்கான பதிவுகள் இருக்கின்றன என்றும் கூறியுள்ளது. 

மோடி இந்த விவகாரங்களில் மிகவும் அமைதியாக இருக்கிறார்.  காரணம் என்ன? இந்திய நாட்டின் தலைமைப் பொறுப்பிற்கு வருவதில் விருப்பமுள்ள ஒருவருக்கு குறைந்தபட்சம் இது சம்பந்தமாக விசாரணைண நடத்தப்பட வேண்டும் என்று கோர வேண்டிய கடமை உள்ளது என்பது தெரியவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

தவறான பிரச்சாரம்

பாரதீய ஜனதாக கட்சி மோடிக்கு ’‘வளர்ச்சி அடையும் மனிதன் – விகாஸ் புருஷ்’‘ என்ற முகமூடியை தயாரித்து அணிவித்துள்ளது.  அதனை குஜராத்தின் வளர்ச்சியை மையமாக மாதிரியாகக் கொண்டு தயாரித்துள்ளது.  இந்த தவறான பிரச்சாரம் என்பது இரண்டு மகா பெரிய பொய்களை அடிப்படையாகக் கொண்டு, கட்டப்பட்டு செய்யப்படுகிறது.  முதலாவதாக, குஜராத்தில் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி இருந்திருக்கிறது, இந்த வளர்ச்சி முஸ்லிம்களுக்கும் பயனளித்துள்ளது என்ற மகா பெரிய பொய்.  இரண்டாவது மகா பெரிய பொய் – 2002ம் ஆண்டு நடந்த நிகழ்வுகளைத் தவிர குஜராத்தில் வேறு வகுப்புக் கலவரங்களோ வன்முறைகளோ நிகழவில்லை என்பது.  அதை விட, வளர்ச்சியை எட்டுவதற்காக, வகுப்புக் கலவரங்கள் மற்றும் மத ஒற்றுமையின்மையை விட்டு வெளியில் வந்துள்ள ஒரு வளர்ச்சி பெற்ற மாநில மாதிரியின் பிரதிநிதியாக நரேந்திர மோடி இருக்கிறார் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது.  2004ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ”இந்தியா ஒளிர்கிறது’‘ என்று ஒரு தவறான பிரச்சாரம் செய்தது தவறு என்று நிரூபணம் ஆகியது போல, தற்போதைய குஜராத்தின் வளர்ச்சியை பற்றிய இந்த தவறான பிரச்சாரங்களும் தவறு என்று தற்போது நிரூபணம் ஆகியுள்ளது.  குஜராத் வகுப்புக் கலவரங்கள் இல்லாத மாநிலமாக தற்போது உள்ளது என்பது எத்தனை பொய்யானது என்பதை தற்போது பார்ப்போம்.

குஜராத்தில் மோடியின் ஆட்சியின் கீழ் பதிவான வகுப்புக் கலவரங்களும் வன்முறைகளும்

மோடி என்னவோ குஜராம் கலவரங்களே இல்லாத மாநிலம் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.  முதலாவதாக கீழே காட்டியுள்ளது போல, இது ஒரு பச்சைப் பொய்.  குஜராத் வன்முறையற்ற மாநிலம் அல்ல.  மோடி இப்படி கூறுவதன் மூலம், அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாடு முழுவதும் நடக்கும் ஒவ்வொரு வகுப்புக் கலவரத்தின் பின்னும், ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துத்துவா அஜெண்டாவினை அமலாக்கிக் கொண்டிருக்கும் சங் பரிவார் தான் உள்ளது என்பதை மறைக்கிறார்.  அதிலும் குறிப்பாக, கடந்த வருடம் தேர்தலுக்கெனவே மதவாத வெறுப்புணர்வுகள் வேண்டுமென்றே தூண்டப்பட்டன என்பது கவனிக்கத்தக்கது.

2013ம் ஆண்டு வெட்கப்படத்தக்க பதிவாக பதிவாகியுள்ள மதக்கலவரங்களின் எண்ணிக்கையை பொறுத்த வரையில், நாட்டிலேயே முதல் 5 மாநிலங்களில் ஒன்றாக குஜராத் மாநிலம் பதிவாகியுள்ளது என்பது நாம் கவனிக்கத்தக்கது.  குஜத்தில் மட்டும் 66 வகுப்புக் கவரங்கள் வன்முறைச் சம்பவங்கள் நிக்ழந்துள்ளதாக அந்த ஆண்டு பதிவாகியுள்ளது.

ஆனால், 2013ம் ஆண்டு என்பது குஜராத்தில் மதக்கலவரங்கள் நடக்காத ஆண்டாக சொல்லப்படுகிறது.  உண்மையில் பதிவுகளை படமாக்கினால் அந்த வரைபடத்தில் வகுப்புவாத வன்முறைகள் உயர்ந்து கொண்டே செல்வதை காணலாம்.  2012ம் ஆண்டில் குஜராத்தில் இது போன்ற நிகழ்வுகள் 57 நடந்துள்ளன என்பதும் அதில் 5 பேர் மரணமடைந்துள்ளனர் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.  நமோ-நதேமப பிரச்சாரத் தினை சங் பரிவாரும் மீடியாக்களும் செய்யும்போது சொல்வதற்கு மாறாக, உண்மை என்னவென்றால், 2002ம் ஆண்டிற்குப் பிறகும் குஜராத் மாநிலம் என்பது வகுப்புக் கலவரங்களில் குஜராத் தான் முதல் 4 முதல் 6 இடங்களில் இருந்துள்ளது என்பது தான்.  2012ம் ஆண்டு மக்களவையின் புள்ளிவிவரத்தின் படி, 2009க்கும் மார்ச் 2012க்கும் இடையில் 344 இறப்புகள் வகுப்புக் கலவரங்களில் பதிவாகியுள்ளன என்பது தான்.  இதில் 10 சதமானம் அதாவது 32 இறப்புகள் குஜராத்தில் நிகழ்ந்துள்ளன என்பது தான்.  இதே காலக்கட்டத்தில், மொத்தத்தில் நடைபெற்றுள்ள 2300 வகுப்புக் கலவரங்களில் 181 வகுப்புக் கலவரங்கள் குஜராத்தில் மட்டும் நடைபெற்றுள்ளன.

2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற திட்டமிடப்பட்ட படுகொலையில் நரேந்திர மோடிக்கு இருக்கும் பொறுப்பிலிருந்து அவரை காப்பாற்றுவது, குஜராத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும வகுப்புக் கலவரங்களைப் பற்றிய உண்மை மறைக்கப்படுவது,  மோடியை ”வளர்ச்சி நாயகன்” என்று வர்ணிப்பது என அனைத்துமே பொய்யான பிரச்சாரத்தின் பகுதிகளேயாகும்.  இந்த பொய்யான பிரச்சாரம் ஏன் செய்யப்படுகிறதென்றால் நரேந்திர மோடியின் குற்றங்களை மறைக்கவும், அவரை ”ஏற்கத் தகுந்த” பிரதம மந்திரி வேட்பாளராக்கவுமே ஆகும்.

பிற மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சியின் சாதனைகள்

மேலும், பாஜக ஆட்சி செய்யும் பிற மாநிலங்களிலும் வகுப்புக் கலவரங்கள் மற்றும் வன்முறைகளைப் பொறுத்த வரையில் இதே நிலைதான என்பதை நாம் கவனிக்க வேண்டியது அவசியமாகும்.  2013ம் ஆண்டில், மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்கள் மொத்தம் 84 ஆகும்.  இது மகாராஷ்டிராவின் எண்ணிக்கையான 88ல் இருந்து சிறிதுதான் குறைவு.  இது சந்தேகத்திற்கிடமின்றி அந்த மாநிலத்தில் நீண்டநாளாக தொடர்ச்சியாக இது போன்ற வகுப்புக் கலவரங்கள் நடந்து வருகின்றன என்பதையே காட்டுகிறது.  2012ம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ள 92 வகுப்புக் கலவரங்களில் 9 பேர் இறந்து போயுள்ளனர்.  2009க்கும் 2012க்கும் இடையில் 313 வகுப்புக் கலவரங்களில் 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  தென்னிந்தியாவில் முதல் முறையாக, பாஜகவின் எடியூரப்பா ஆட்சிக் காலத்தில் தான் மதக் கலவரங்கள் அரசின் ஆதரவுடன் மிகப் பெரிய அளிவ்ல நடந்தேறியது.  735 வகுப்புக் கலவரங்களில் 54 பேர் கொல்லப்பட்டனர் என்கிற பதிவுடன் கர்நாடகாவின் முதல் பாஜக அரசாங்கம் மதக்கலவரங்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்தது.  சங்பரிவாரின் பின்புலத்துடன் கந்தமாலில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெளிப்படையாக நடத்தப்பட்ட மதக்கலவரங்களின் காரணமாக 2008ம் ஆண்டு ஒரிசாவில் வகுப்புக் கலவரங்கள் திடீரென வெடித்துக் கிளம்பின. 

எனவே, இங்கே நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் அந்த மாநில அரசாங்கங்கள் கண்டிப்பாக நிச்சயமாக மதக்கலவரங்களிலும், மதரீதியான உணர்வுகளை தூண்டிவிட்டு மக்களை மதரீதியாக அணிதிரட்டுவதிலும் தொடர்புடையவையாக இருக்கும் என்பது தான்.

2014ம் ஆண்டு தேர்தல்கள் நடைபெற இருக்கும் பின்னணியில் மதரீதியான உணர்வுகளை தூண்டிவிட்டு மக்களை மதரீதியாக அணிதிரட்டுவது

பாரதீய ஜனதா கட்சி தற்போது இந்த பரிசோதனையை தேசிய அளவில் நடத்த முனைகிறது.  ஆர்.எஸ்.எஸ்.ம் பாஜகவும் இணைந்து மதரீதியான உணர்வுகளை தூண்டிவிட்டு மக்களை மதரீதியாக அணிதிரட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மிகக் கடுமையாக செய்வதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முனைகின்றன.  உள்துறை அமைச்சகத்தின் தகவலின் படி, 2012ம் ஆண்டு 668ஆக இருந்த மதக்கலவரங்களின் எண்ணிக்கை 30 சதமானம் உயர்ந்து 2013ம் ஆண்டில் 823ஆக உயர்ந்துள்ளது.  இந்த புள்ளிவிவரம் என்ன சொல்கிறதென்றால் இப்படி தேர்தல் நேரத்தில் வகுப்புக் கலவரங்களின் எண்ணிக்கை உயர்வது என்பதொன்றும் புதிய விஷயமல்ல என்றும், 2004ம் ஆண்டு தேர்தலின் போதும், 2009ம் ஆண்டு தேர்தலின் போதும் இது போன்று நிகழ்ந்தது என்றும் கூறுகிறது.  எனவே, மதவாத சக்திகள் தேர்தல் காலங்களில் அணிதிரள்கின்றன என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

சமீபத்திய மதக்கலவரங்களை எடுத்துப் பார்த்தால், உத்திரப்பிரதேசத்தில் 2013ம் ஆண்டில் உயர்ந்துள்ள வகுப்புக் கலவரங்களின் எண்ணிக்கை உயர்வு என்பது மிக முக்கியமானதும் குறிப்பிடத்தக்கதுமாகும்.  இதில் கடந்த ஆண்டு முசாபர் நகரில் நடந்த மிக பயங்கரமான நிகழ்வுகளும் அடங்கும்.  உத்திரப்பிரதேசத்தில் 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நடைபெற்ற 95 கொலைகளில் 60 கொலைகள் முசாபர் நகரில் மட்டும் அரங்கேறியுள்ளன.  இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், உத்திரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் முதல் முறையாக கிராமப்புற பகுதிகளில் மதக்கலவரங்கள் பரவியுள்ளன என்பதும், 40ஆயிரம் மக்கள் அவர்களுடைய குடியிருப்புகளை விட்டு நகர்ந்து முகாம்களிலோ அல்லது வேறு எங்காவதோ அடைக்கலம் தேட வேண்டியவர்களோகவோ ஆகியுள்ளனர் என்பது தான்.  முசாபர் நகரில் மதக்கலவரங்கள் வெடிப்பதற்கு வேண்டிய ஆயுதங்கள் அமைப்பு ரீதியான ஆதரவுகள், உணவு மற்றும் ஆள்பலம் உட்பட அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவால் அளிக்கப்பட்டன என்பதும் கவனிக்கத்தக்கது.  இந்த கலவரங்களில் இந்துத்துவா சக்திகளின் பங்கு எந்த அளவிற்கு இருந்ததோ அதிலிருந்து சற்றும் குறைத்து மதிப்பிட முடியாத அளவிற்கு, இந்த கலவரங்களை அடக்க வேண்டிய தடுக்க வேண்டிய அந்த மாநில அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மிக மோசமானதாக அபத்தமானதாக கண்ணியமற்றதாக உபயோகமற்ற முறையில் இருந்தது.  முசாபர் நகர் கலவரத்தில் பாஜக எம்எல்ஏக்கள் 4 பேர் அவர்களுடைய செயல்களுக்காக கைதுசெய்யப்பட்டபோது, பாஜகவோ இப்படி மதரீதியாக உணர்வுகளை கிளப்பிவிட்டதன் மூலம் தன்னுடைய அரசியல் ஆதாயத்திலேயே குறியாக இருந்தது.  ஆக்ராவில் நரேந்திர மோடிக்காக நடத்தப்பட்ட ஊர்வலத்தின் போது அந்த மேடையில் இந்த எம்எல்ஏக்கள் பாராட்டப்பட்டனர் என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.  அத மட்டுமல்ல இந்த கலவரங்களில் குற்றம் சாட்டப்பட்டிருந்தத இரண்டு பாஜக தலைவர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாஜக சார்பில் இந்தத் தேர்தலில் நிற்க அனுமதியளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  கைரானா பகதியில் ஹுக்கும் சிங்கும், முசாபர் நகரில் சஞ்சீவ் பலியானும் ஆகிய இருவரும் ஆவர்.

இது தான் முசாபர் நகரில் அவர்கள் செய்ததற்கான பரிசு.

வாரணாசியில் இருந்து மோடி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.  அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், ”பக்தி மிகுந்த வாரணாசி” பற்றியும், ”கங்கைத் தாய் மற்றும் காசி விஸ்வநாதரின் ஆசிர்வாதங்கள்” பற்றியுமே பேச பாட நினைத்தார்.  டிசம்பர் மாதம் ”வெற்றிக்கான உறுதியேற்பு ஊர்வலம்” நடத்தியபோது வைக்கப்பட்ட கோஷம் ” ஹர் ஹர் மோடி” என்பதாகும்.  அவருடைய புகைப்படமானது சிவனுடைய மிகப் பெரிய புகைப்படத்திற்கருகில் வைக்கப்பட்டிருந்தது.  அதன் மூலம் கொடுக்கப்பட்ட செய்தி தெளிவானதாக இல்லை.  பாபர் மசூதியை இடித்து முடித்த பிறகு அயாத்தியாவில் கூடிய சங் பரிவார் கொடுத்த கோஷம் அடுத்து காசி என்பதாகும் என்பதை நாம் நினைவிற்குக் கொண்டு வர வேண்டியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் இரத்தம் வடியும் மிகப் பயங்கரமாக மதவாதத்தை ஊடுருவச் செய்வதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட பாஜக முனைந்தது போல், உத்திரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் மோடியை வேட்பாளராக நிறுத்தியதை கங்கா மற்றும் காசி விஸ்வநாத்துடன் தொடர்பு படுத்தி அரசியல் ஆதாயம் தேட முனைகின்றனர்.  ஃபைசாபாத்தில் சங்பரிவார் உபயத்தில் நடத்த கலவரங்கள் மற்றும் அயோத்தியாவின் 84-கோசி பரிக்ரமாக்களுடன், பாஜக முன்பு மதவாதத்தை அயத்தியாவில் ஊடுருவச் செய்ய முயற்சித்தது.  ஆனால், இதில் பெருமளவு வெற்றி பெற முடியவில்லை.

சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சம்

குஜராத் மாநிலம் கலவரமற்ற பூமி என்பது எப்படி பொய்யானதோ அதே போல குஜராத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் முன்னேற்றமடைந்துள்ளனர் என்பதும் பொய்யானதே.  ஆனால் மோடியால் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா?

மோடி சிறுபான்மை இன மக்கள் மீது பாரபட்சம் காட்டாதவர் என்பது உண்மையானால், அவர் தேர்தலில் எத்தனை முஸ்லிம்களை நிறுத்தியிருந்தார்? அவருடைய அமைச்சரவையில் எத்தனை முஸ்லிம்கள் இருந்தனர்?

மோடியின் 12 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அவருடைய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இருந்தது கிடையாது.  அப்புறம் எப்படி அவர் சிறுபான்மையினர் மீது பாரபட்சம் காட்டாதவராக இருக்க முடியும்? குஜராத்தில் மூன்று தேர்தல்களிலும் அவருடைய தலைமையின் கீழ் போட்டியிட்ட போது ஒரு முஸ்லம் பிரதிநதி கூட நிறுத்தப்படவில்லை.   குஜராத் மக்களில் 9.1 சதமானம் பேர் முஸ்லிம்களாக இருந்த பிறகும், மோடியின் அரசாங்கத்திலோ அல்லது மாநில சட்டசபை கட்சியிலோ அவர்களின் பங்களிப்பு இருந்ததில்லை.

அப்புறம் எப்படி பாரபட்சமற்றவராக இருக்க முடியும்-

சிறுபான்மையினர் முன்னேறியதாக பொய்யான பிரச்சாரங்கள்

சச்சர்ர் கமிட்டியின் முன்னாள் செயலாளர், திரு அபு சலே ஷாரிஃப் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு மற்றும் தேசிய பொருளாதார ஆய்வு அமைப்பின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பீடு செய்து கூறியுள்ளார்.  குஜராத்தில் பிற இன மக்களுடன் ஒப்பிடும் போது முஸ்லிம் இன மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளதை காட்டியுள்ளார்.  நகர்ப்புறங்களில் வசிக்கும் உயர்ஜாதி இந்துக்களை விட 8 மடங்கு அதிகமான வறுமையில் முஸ்லிம் இன மக்கள் வாடி வருகின்றனர் என்பதையும் இந்துக்களில் பிற்படுத்தப்பட்ட சாதியினரை விட 50 சதம் அதிகமான வறுமையில் இருப்பதையும், பொதுவாகவே ஒடுக்கப்பட்டு இந்த சமூகத்தில் வாழ்ந்து வரும் எஸ்.சி மற்றும் எஸ்.டி. இன மக்களை விடவும் மிக மோசமான நிலையிலும் உள்ளனர் என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.  குஜராத்தின் மொத்த முஸ்லிம் இன மக்களில் 60 சதத்திற்கும் அதிகமானோர் நகர்ப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர்.  அவர்கள் குஜராத்தின் சமூகத்தில் உள்ள மிக சமூகக் குழுக்களில் மிகவும் பின்தங்கியுள்ளனர்.  கிராமப்புறங்களில் உள்ள முஸ்லிம் இன மக்களின் வறுமை என்பது 200 மடங்கு அதிகம்.  குஜராத்தில் முஸ்லிம் இன மக்கள் அவர்களது மக்கள் தொகைக்கேற்றபடி வங்கிகளில் கணக்குளை வைத்துள்ள போதிலும், வங்கிக் கடன்களை பெறுவதிலும் சரி நுண் கடன் வசதிகளை பெறுவதிலும் சரி அவர்களுக்கு போதுமான வசதி வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை என்பதனை இதைப் பற்றிய புள்ளிவிவரங்களே நிரூபித்து விடுகின்றன.  இதிலிருந்தே முஸ்லிம்களுக்கெதிராக நிறுவனப்படுத்தப்பட்ட பாரபட்சமான போக்கினையும் தப்பபிப்ராயத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.  அதே போல நிதி உள்ளடக்கத்தில் வங்கிகளில் கொடுக்கப்பட்டுள்ள மொத்த கடன்களில், வெறுமனே 2.6 சத பயனாளிகள் மட்டுமே முஸ்லிம் இன மக்களாக உள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குறித்த மதிப்பீட்டினை செய்வதற்கு சரியான வழி என்பது என்னவென்றால், ஒரு தனி நபருக்கும் அனைவருக்குமான வாழ்க்கைத் தரத்தை ஒப்பிடுவது, சமூக ஒருங்கிணைப்பின் ஆழத்தை மதிப்பிடுவது, எல்லோரும் கலந்து வாழும் அண்டை அருகாமை சுற்றுப்புறச் சூழல், அதே போன்று வகுப்பறை போன்றவை தான் சரியான வழியாக இருக்க முடியும்.  நகர்ப்புற குஜராத்தில் உள்ள பள்ளிகளில் குறிப்பாக பெரும்பான்மையின மக்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இந்த சிறுபான்மை இன மக்களின் குழந்தைக்கு பள்ளியில் சேர்ப்பதற்கான அனுமதி பெரும்பாலும் இருப்பதில்லை.  சேரி போன்ற தனியிட இருப்புகள் என்பது தான் உண்மை.  நகர்ப்புற குஜராத்தின் பெரும்பகுதிகளில் ”பார்டர்கள்” என்ற சொல்லாடல் அண்டை அருகாமையை பிரித்துக் காட்ட பயன்படுத்தப்படுகிறது.

இன்றைக்கும் கூட, குஜராத் அரசாங்கம் உச்ச நீதி மன்றத்தில் இரண்டு வழக்குகளில் அதி பயங்கரமாக வாதாடிக் கொண்டிருக்கிறது என்பது ஆச்சரியத்திற்குரியதல்ல.  முதல் வழக்கு எதைப் பற்றியது என்றால் சிறுபான்மை இன மாணவர்களுக்கு மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் ப்ரீ-மெட்ரிகுலேஷன் ஸ்காலர்ஷிப்புகளை மோடி அரசாங்கம் இது பாகுபடுத்திப் பார்க்கும் ஏற்பாடு மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்ற பெயரில் நிறுத்தி வைத்ததற்கான வழக்கு.  குஜராத் உயர் நீதி மன்றம் இந்த விவாதத்தை நிராகரித்து இந்த ஸ்காலர்ஷிப்புகளை வழங்க வேண்டும் என்று குஜராத் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுவிட்டது.  மோடி அரசாங்கம் இதனை எதிர்த்து உச்ச நீதி மன்றத்திற்கு சென்றுள்ளது.  இரண்டாவது வழக்கு 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது சிறுபான்மை இன மக்களுக்கான மதம் சம்பந்தமான கட்டிடங்களை திரும்பக் கட்டி முடிப்பதற்கான உதவியை அளிப்பது குறித்தது  இதிலும், பொது முதலீட்டினை இது மாதிரியான காரியங்களுக்கு பயன்படுத்துவது என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்ற முறையில் மோடி அரசாங்கம் உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து எதிர்த்து உச்ச நீதி மன்றம் சென்றுள்ளது. 

2002ற்குப் பிறகு நீதியை அழித்தல்

குஜராத் கலவரமற்ற பூமி என்பது துரோகம் இல்லையா? பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் என்னவாயிற்று? அவர்களுக்கான நியாயம் என்ன? 2002ம் ஆண்டில் இருந்து மோடியின் அட்சியின் க்ழ உள்ள அரசாங்கங்கள் 5000 குடும்பங்கள் உள்நாட்டிலேயே இடம்பெயரச் செய்யப்பட்டதால் உருவான 70 காலனிகளை புனரமைப்பதில் மிக மிகக் குறைவான கவனத்தையும் அக்கறையையும் தலையீட்டையுமே செய்திருக்கின்றன.  ஒரு சில அமைப்புகள் மற்றும் டிரஸ்ட்டுகள் மிகக் கடினமான பிரயாசைகளுக்குப் பிறகுதான் வசதிகளையும் பயன்களையும் மாநில அரசாங்கங்களின் வெறுப்புகளுக்கிடையில் செய் முடிந்துள்ளது.  அரசாங்கத்தால் நடத்தப்பட்ட மிகச் சொற்பமான அகதிகள் முகாம்கள் கூட ”குழந்தைகள் உற்பத்தி பண்ணும் தொழிற்சாலைகளாக” நடத்தப்பட முடியாது என்ற காரணத்தைக் கூறி சீக்கிரமே மூடப்பட்டுவிட்டன.  இது முஸ்லிம்களின் மனதை புண்படுத்தக்கூடிய அவமானப்படுத்தக்கூடிய வகையில் சொல்லப்படுவதான ”முஸ்லிம்கள் அதிகமான குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள்” என்பதை மறைமுகமாகச் சொல்லாமல் சொன்ன ஏற்பாடு.  மேலும் ”இப்படி அவர்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்வது என்பது இந்து தேசத்தை உருவாக்குவதற்கு ஒரு அச்சுறுத்தலாக அமையும்’‘ என்பதற்காக மறைமுகமாக சொல்லப்பட்ட காரணம். 

2002ம் ஆண்டிற்கப் பிறகுதான் இப்படி நீதி என்பது மிகவும் வெட்கக் கேடான முறையில் அழிக்கப்பட்டது.  மோடி அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை வழக்குகளை விசாரிக்காமல் அழித்தது ஒரு புறம்.  மறு புறம் மதவாத படுகொலைகளை ஆதரிக்கக்கூடியவர்களாக உள்ள வழக்கறிஞர்களை அரசு தரப்பு வக்கீல்களாக போடுவது போன்ற முறையில் நீதியை அழித்தது.  உச்ச நீதி மன்றம் மட்டும் தான் ஒரேயடியாக நீதி அழிக்கப்பட்டுவிடாமல் தடுப்பதற்காக தலையிட்டது.  ஆனால், அப்படி தலையிட்டது என்பது குற்றங்களின் வீச்சை பார்க்கும் போது போதாது என்பது தான் உண்மை.

மோடி அரசாங்கத்தால் குஜராத்தில் சிறுபாமையின மக்களுக்கெதிராக நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கான 4000 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.  உச்ச நீதி மன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு தான் இவற்றில் பாதி வழக்குகளாவது காவல் துறையால் மீண்டும் விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.  அதிர்ச்சியூட்டும் வகையில் பெஸ்ட் பேக்கரியில் தஞ்சம் புகுந்திருந்த 14 பேர் ஒரு கொலைக்கும்பலால் சூழப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட  வழக்கில் மோடி அரசாங்கம் சாட்சிகளை அவர்களுடைய வாக்குமூலங்களை மாற்றிக் கூறும்படி வற்புறுத்தியது.  மேலும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அத்தனை பேரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.  உச்ச நீதி மன்றம் தான் மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டு தலைமை நீதிபதி தனக்கு குஜராத் அரசாங்கத்தின் மீது ”நம்பிக்கையில்லை” என்று கூறி தலையிட்டது.  இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளில் சிலர் தண்டனைக்குள்ளாக்கப்பட்டனர்.  விசாரணையில் வேண்டுமென்றே விடப்பட்ட சில இடைவெளிகள் மற்றும் ஓட்டைகளின் காரணமாக மிற்றவர்கள் தப்பித்துக் கொண்டனர். 

மோடி ஆதரவாளர்கள் கூறுவது போல, குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் முதலமைச்சர் உட்பட அனைவரும் தண்டிக்கப்படாமல் யாராலும் 2002ம் ஆண்டு நிகழ்வுகளை விட்டுவிட முடியாது.  

மன்னிப்பு கேட்பதற்குப் பதில் குற்றமற்றவர் என்று கர்வமாக நடமாடுவது

சிறப்பு புலன் விசாரணைக் குழு கொடுத்ததாகக் கூறப்படும் குற்றமற்றவர் என்ற சீட்டினை கையில் வைத்துக் கொண்டு மோடியும் பாஜகவும் கர்வமாகத் திரிகின்றனர்.  அதன் பிறகு குஜராத்தில் உள்ள கீழ்மட்ட நீதிமன்றத்தினால் 2002ம் ஆண்டு மதக்கலவரங்களின் போது நடைபெற்ற படுகொலைகளில் மோடி நேரடியாக ஈடுபட்டார் என்பதற்கான ஆதாரங்கள் குற்றம்சுமத்தப்படக்கூடிய வகையில் இல்லை என்று கூறிவிட்டது.  கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் தலவர் ஏசன் ஜஃபாரியின் தைரியசாலியான கணவனை இழந்த பெண் ஜாக்கியா ஜ1பாரி, குஜராத்தின் கீழ் கோர்ட்டின் தீர்ப்பிற்கு எதிராக குஜராத் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.  நீதிமன்றத்தின் வழக்கமான முறைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.  நீதி மன்றம் இந்த வழக்கில் மட்டுமல்லாது, தேசிய மனித உரிமைகள் கமிஷன் மோடி அரசாங்கம் மோடி அரசாங்கம் இந்த மனிதப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்குவதிலும் மிக மோசமாக கண்டுகொள்ளாமல் இருந்தததற்காக சுமத்தியிருந்த பல குற்றச்சாட்டுகளில் இருந்து மோடியை குற்றமற்றவர் என்று நீக்கிவிடும்.  2002ம் ஆண்டு படுகொலைக்காக மோடி மன்னிப்புக் கூட கேட்கவில்லை என்பதோடு மட்டுமல்ல வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்பது தான் உண்மை.  இதற்கு மாறாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மோசமான நிலையை பரிகாசம் செய்யும் வகையில் அவருடைய மிக மோசமான அறிக்கையை இவ்வாறு வெளியிட்டுள்ளார்.  அவர் ”ஒரு நாய் அடிபட்டால் கூட வருத்தப்படுவேன்” என்று அறிக்கை விடுத்துள்ளார்.  இன்றைக்கும் கூட அவர் இந்த மனிதப் படுகொலைகளில் ஈடுபட்ட மந்திரிகளை தன்னுடைய நெருங்கிய இரகசிய உதவியாட்களாகக் கொண்டு ஜம்பமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்.  அவருடைய மிக நெருக்கமான இரகசிய உதவியாளும் மூனானள் மந்திரியுமான மாயா கொடானிக்கு இந்த மனிதப் படுகொலைகள் முடிந்தவுடன், நரோடா பாட்டியாவில் நடைபெற்ற இந்த படுகொலைகளுக்கு பரிசளிப்பது போன்று ஒரு அமைச்சர் பதவியை கொடுத்துள்ளார்.  ஆனால் நீதிமன்றம் தான் தலையிட்டு அவருக்கு அவரது குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதித்து நீதியை நிலைநாட்டியது.

இந்துத்துவா என்ற பெயரில் தீவிரவாதம்

தீவிரவாதிகளும் அவர்களது செயல்பாடுகளும் இந்தியாவிற்கும் இந்திய நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.  எனவே அவர்களுக்கும், அவர்கள் பின்னால் இருக்கும் ஆதரவாளர்களுக்கும் எதிராக மக்களை அணி திரட்ட வேண்டியது அவசியமாகும்.  தீவிரவாதக் குழுக்கள் அடையாளங்காணப்பட்டு, அந்த குழு எதுவாக இருந்தாலும், அது எந்த மதத்தைச் சார்ந்ததாக இருந்தாலும், எந்த மதத்தினரால் ஆதரிக்கப்பட்டாலும் கண்டு கொள்ளாமல் தண்டிக்கப்பட வேண்டும்.  தீவிரவாதத்திற்கு மதம் பற்றி தெரியாது என்றாலும், தீவிரவாதக் குழுக்கள் மதத்தின் பெயரால் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் சாதாரண மக்களுக்கெதிராக தீவிரவாதச் சயெல்களை ஊக்குவிப்பதோடு, பின்னால் இருந்து இயக்குகின்றன என்பதும் உண்மையே.  இந்தத் தீவிரவாதக் குழுக்களும், அவற்றின் தலைவர்களும் மிக நீண்ட காலமாக அமெரிக்க உளவாளி நிறுவனத்தின் ஆதரவுடனும், அமெரிக்க அரசு ஏஜென்சிகளின் ஆதரவுடனும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  இவை சோவியத் ஆட்சிக்கு ஆதரவான ஆட்சியமைப்புகள் உள்ள பல நாடுகளில் அமெரிக்காவிற்கு ஆதரவாக பல தீவிரவாதச் செயல்களை அரங்கேற்றி வருவதில் முக்கிய பங்காற்றி வருகின்றன.  உலகம் முழுவதும் உள்ள, முஸ்லிம் நாடுகள் உட்பட அனைத்திலும் உள்ள  ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற மனமுடைய மக்கள் இது போன்ற தீவிரவாதக் குழுக்களை அவற்றின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறார்கள்.   

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் நாள் அமெரிக்காவில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா உலகம் முழுவதும் இஸ்லாமியத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டது மட்டுமல்லாமல் அனைத்து இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தும் பிரச்சாரத்தையும் செய்தது.  இந்தியாவில் பாஜக இதனை, இந்த வக்கிரமான புரிதலை எதிரொலித்தது.  மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல் இதனை மேலும் பலப்படுத்தியது.  ஆனால், பாஜகவின் தீவிரவாதத்திற்கு எதிரான இந்த கேவலமான கபட நாடகம் அவர்கள் இந்ததுத்துவாவால் சத்திய பிரமாணம் செய்து கொண்ட பிரச்சாரகர்களால் நடத்தப்படும் குழுக்களிடம் அவர்கள் காட்டும் அணுகுமறை மூலமாக வெளிப்படையாக வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது.

ஆர்எஸ்எஸ் இந்திய நாட்டில் வாழும் முஸ்லிம் இன மக்களுக்கு எதிராக நடத்தும் மிகக் கேவலமான வெறுப்புடன் கூடிய நிகழ்வுகள், அதனுடைய உச்சகட்ட வடிவத்தில், அதன் முன்னணி அமைப்புகளான விஹெச்பி, பஜ்ரங் தள், துர்க்க வாகினி போன்ற அமைப்புகளாலும், அவற்றால் உருவாக்கப்பட்டுள்ள இந்துத்துவாவினால் சுவீகரிக்கப்பட்டுள்ள தீவிரவாதக் குழுக்களாலும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.  மெக்கா மசூதி, மலேகன், அஜ்மீர் ஷரீஃப், சம்ஜுட்டா எக்ஸ்பிரெஸ் ஆகியவற்றில் முஸ்லிம்களை குறியாக வைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்கள் இந்துத்துவா தீவிரவாதக் குழுக்களால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டவை.  பாஜகவின் தலைவர்கள் அவர்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல், அந்த தீவிரவாதக் குழுக்களை சிறையில் சென்று பார்த்து வருகின்றனர்.  நரேந்திர மோடியே கூட ஒரு போதும் இந்தத் தீவிரவாதக்குழுக்களுக்கு எதிராக ஒரு வார்த்தையை கூட உதிர்த்ததில்லை.  ஆனால், அதே நேரம் மத்திய அரசாங்கத்தை ”மிக மென்மையான அணுகுமுறையுடன் கூடிய அரசு” என்று கொஞ்சம் கூட அசதியாகாமல் குற்றம் சாட்டும் தனது பிரச்சாரத்தை நிறுத்தவுமில்லை.

அப்பாவி முஸ்லிம்களின் கைது

தீவிரவாதம் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த பாஜகவின் இரட்டை வேடம் என்பது முஸ்லிம்களாக பிறந்த காரணத்திற்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து இரையாக்குவதன் மூலம் வெளி வந்துள்ளது.  மலேகன் வழக்கிலாகட்டும், அல்லது மெக்கா மசூதி வழக்கிலாகட்டும் இங்கெல்லாம் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டத இந்துத்துவா தீவிரவாதக் குழுக்கள் தான் என்பது தெரிய வந்த பிறகும் முதலில் கைது செய்யப்படுவது முஸ்லிம் இளைஞர்களே.  அதே போல் மற்ற தீவிரவாதத் தாக்குதல்களிலும் முதலில் முஸ்லிம் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.  பின்னர் 10 முதல் 15 வருடங்களுக்குப் பிறகு நியாய விசாரணைக்குட்படுத்தப்பட்ட பிறகு சில வழக்குகளில் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர்.  உண்மையில், இது மாதிரியான வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் தவறுதலாக கைதுசெய்யப்படுவது மிக அதிகமான வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  இது மாதிரியாக முஸ்லிம் இளைஞர்கள் அவர்கள் முஸ்லிம்களாக பிறந்த ஒரே காரணத்திற்காக, நியாயமற்ற முறையில் மிக மோசமாக கைது செய்யப்பட்டு சிறையிலமைக்கப்படுவது குறித்து பாஜகவும் சரி, காங்கிரஜம் சரி, எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கின்றன.  ஆனால் சிபிஐ(எம்) மட்டுமே பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இப்படி இரையாக்கப்படும் முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தினை இயக்கத்தினை நடத்தி வருகினறது.  சில வழக்குகளில் இந்திய ஜனாதிபதி வரை கொண்டு சென்றுள்ளது.  உள்துறை அமைச்சர் இந்த நிர்ப்பந்தங்களின் காரணமாக இது போன்ற வழக்குகளில் நஷ்ட ஈடும், புனர் வாழ்விற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று பாராளுமன்றத்தில் அறிக்கை விடுத்த பிறகும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தான் உண்மை.  இப்படி அப்பாவி மக்கள் துன்புறுத்தப்பட்டு அவர்களது வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது.

காங்கிரஸ் இப்படி தவறாக இரையாக்கப்படுவதற்கு எதிராக எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்றால் பாஜக அதற்கு ஒரு படி மேலே போய் இந்த கைதுகளை நியாயப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் என்கவுண்டர் கொலைகளை நியாயப்படுத்தி அரங்கேற்றி வருகிறது. பாஜகவன் மாதிரி அரசாங்கமான மோடி அரசாங்கம் அவருடைய ஆட்சிக் காலத்தில் பல்வேறு கட்டங்களில் நடத்தப்பட்ட என்கவுண்டர் கொலைகளை வெட்கங்கெட்ட முறையில் நியாயப்படுத்துகிறது.

என்கவுண்டர் கொலைகளில் ஆட்சியதிகாரத்தின் கட்டுப்பாடு

மோடியின் அரசாங்கத்தின் கீழ் பல போலி என்கவுண்டர் கொலைகள் நடத்தப்பட்டுள்ளன.  அவ்வாறு நடத்தப்பட்ட போலி என்கவுண்டர்களில் பலியானவர்களில் மிகப் பெரும்பான்மையினர் முஸ்லிம் மக்களே.  உயர் காவல் அதிகாரிகளும், முதல் மந்திரியின் இரகசிய கையாட்களும் அவரது அரசின் முன்னாள் உள்துறை அமைச்சரான அமித் ஷா உட்பட பலர் இது போன்ற போலி என்கவுண்டர்களின் முக்கிய குற்றவாளிகள் ஆவார்கள்.  இந்த அமித் ஷா தான், உத்திரப்பிரதேசத்தின் பொறுப்பாளராக பாஜகவால் நியமிக்கப்பட்டு, ஒரு இரக்கமற்ற படுகொலை வழக்கில் சதியாளராகக் குற்றம் சாட்டப்பட்டு, தற்போது பெயிலில் வெளியே வந்துள்ளார். 

2012ம் ஆண்டு ஜனவரி மாதம் இது போன்ற 22 போலி என்கவுண்டர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஒரு மனு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உச்ச நீதி மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  உச்சநீதிமன்றனம் நீதியரசர் ஹெச்.எஸ்.பெடி தலைமையில் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள என்கவுண்டர் கொலைகள் குறித்த விசாரணை நடத்த ஒரு மானிட்டரிங் அதிகார குழுவினை நியமித்தது.  நீதியரசர்கள் ஆலம், மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் ”இது போன்று இரண்டு தடமைக்கு மேல் இந்த நீதி மன்றத்தில் நடந்துள்ளது.  முதலில் அரசு தைரியமாக தீர்மானகரமாக கடுமையாக மறுக்கும்.  அப்புறம் மெல்ல விஷயம் வெளியில் வரத் துவங்கும் போது உண்மை வெளிப்படத் துவங்கியவுடன் மாநில அரசாங்கம் அதனை போலி என்கவுண்டர்  கொலை தான் என்று ஒப்புக் கொள்ளும்” என்று கூறியுள்ளனர். 

ஷ்ராபுதீன் வழக்கு மற்றும் துளசி ராம பிரஜாபதி வழக்குகளை நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.  அவர்கள் இருவரும் மட்டுமல்லாமல் ஷ்ராபுதீனின் மனைவி கொசர் பீயும் இரக்கமற்ற முறையில் குஜராத் காவலரால் காவல் துறை உயர் அதிகாரி வன்சாரா தலைமையிலும் பிற உயர் அதிகாரிகள் தலைமியிலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  மார்பிள் வியாபாரத்தில் பாஜகவிற்கு நிதிஉதவி செய்பவர்களை தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருந்த காரணத்திற்காக ஷ்ராபுதீன் தொடர்ந்து கொலை செய்யப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுக் கொண்டிருந்தவர்.  குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் அமித் ஷா – இவர் தடையங்களை அழிக்க முற்பட்டவர் மற்றும் ராஜஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் குலாப் சந்த கட்டாரியா ஆகியோர் ஆவர். 

இஷ்ரத் ஜஹான் மற்றும் மூன்று பேர்களை மிகக் கொடூரமாக சுட்டுக் கொன்ற என்கவுண்டர் கொலை வழக்கில் இருந்து அதிர்ச்சி தரும் பல்வேறு தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.  மத்திய புலனாய்வுத்துறையின் குற்றப்பத்திரிக்கை வெளிப்படையாகவே இந்த என்கவுண்டர் கொலைகளை போலியானவை என்றும் இரக்கமற்ற முறையில் நான்கு பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் உண்மையில் இஷ்ரத் ஜஹானும் மற்ற மூன்று பேரும் காவல் துறையின் பாதுகாப்பில் சிறையில் கைதுசெய்யப்பட்டு இருந்தவர்கள் என்றும் கூறியுள்ளது.  இந்த விசாரணைகள் மோடிக்கு எதிராக ஒரு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக வெளிக்காட்டுவதற்காக செய்யப்பட்ட ஒரு உச்சபட்ச சதி என்பதும், இது அந்த காவல் துறை அதிகாரிகளுக்கு போலியானது என்று தெரியும் என்பதும் வெளிவந்துள்ளது.  ஷ்ராபுதீன் வழக்கினைப் போலவே இந்த வழக்கிலும், மோடி அரசாங்கத்தில் அமித் ஷாவிற்குப் பன் வந்த பிரஃபுல் பாடீல் எப்படி இந்த போலி என்கவுண்டரை மறைப்பது என்று ஆலோசனை செய்ய ஒரு கூட்டத்தினை நடத்தியுள்ளார்.  இவையனைத்தும் நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத் துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்களின் ஒரு பகுதியாகும்.

இது போன்று பல போலி என்கவுண்டர் கொலைகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது மக வெளிப்படையானதும் ஆச்சரியத்திற்குரியதுமல்ல.  ஏனெனில் முதலமைசசர் மோடி 2007ம் ஆண்டு தேர்தலை சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஷ்ராபுதீன் குறித்து வெளியிட்ட அறிக்கையில் ”அவருக்கு எது உகந்ததோ அது கிடைத்தது’‘ என்று கூறி அந்த போலி என்கவுண்டர் கொலையை நியாயப்படுத்தியது என்பதே இது போன்ற நியாயமற்ற போலி என்கவுண்டர் கொலைகளை அவர் நியாயப்படுத்துகிறார் என்ற செய்தியினை கொடுப்பதாக உள்ளது.

மோடியின் ஆட்சியின் கீழ் என்கவுண்டர் கொலைகள் ஆட்சியதிகாரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாக இருந்தது.

மோடியின் ஆட்சியின் கீழ் சிறுபான்மையின மக்கள் அவர்களுடைய வாழ்க்கைக்கே உத்தரவாதமற்ற சூழலை சந்திக்கும்போது அவர்களால் அவர்களுடைய வழக்குகளில் எப்படி நியாய தர்மத்தை எதிர்பார்க்க முடியும்?

இறுதியாக

ஆர்எஸ்எஸ் – பாஜக இரண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் கிளம்பியுள்ள கோபத்தினை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தேசிய அளவில் ஆட்சிஅதிகாரத்தின் லகானைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று முயல்கின்றன.  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி புறக்கணிக்கப்பட வேண்டும்.  அதே போல அதற்கு பாஜக மாற்றாக முடியாது.  மாறாக அதனுடைய அஜெண்டா என்பது இந்திய நாட்டின் நலன்களுக்கு எதிரானது.  மக்கள் பாஜக தலைமையில் நடந்த 6 ஆண்டு கால தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியை மறந்துவிட முடியாது.  மக்களுக்கு எதிரான கொள்கைகள் மட்டுமல்லாமல் பெரும்பான்மை மதவாத நடைமுறைகள் இரண்டும் விஷம் போல் விரவப்பட்டு நடந்த ஆட்சி அது என்பதை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.  கல்வியை, கலாச்சாரத்தை, வரலாறை, முடிந்தவரையில் எல்லாவற்றையும் காவிமயமாக்கியதை யாரால் மறக்க முடியும்?  அவர்களுக்கு எதிராக சவால் விட்ட அறிவு ஜீவிகளை குறி வைத்துத் தாக்கியதை யாரால் மறந்துவிட முடியுமூ? சிறுபான்மை இன மக்கள் மீது மிக மோசமாக அவிழ்த்துவிடப்பட்ட தாக்குதல்களை யாரால் மறந்துவிட முடியும்?  இந்துத்துவாவின் கொள்கை மற்றும் நடைபமுறைகளை அமல்படுத்திய ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் துன்மார்க்க அமைப்புகளான விஹெச்பி, பஜ்ரங் தள், போன்ற அமைப்புகள் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்டு செயலாற்றியதை யாரால் மறந்துவிட முடியும்?  அது மட்டுமல்லாமல் எஸ்சி மற்றும் எஸ்டி மக்களுக்கெதிரான சவரண சாதி முறையையும் அவர்கள் ஆதரித்து அமல்படுத்தியதையும், பெண்களை மனு சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதையும் யாராலும் மறக்க முடியாது.  சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் மிகப் பெரிய அரசு ஆதரவுடன் நடைபெற்ற மதவாத வகுப்புவாத மனித்ப் படுகொலைக்குத் தலைமை தாங்கி நடத்திய மோடி இன்று இந்திய அரசின் மிகப் பெரிய பொறுப்பினை ஒட்டுமொத்தமாக இது போன்ற விஷயங்களை அரங்கேற்றவே ஏற்றுக் கொள்ள விரும்புகிறார் என்பதை கவனிக்கத் தவறக்கூடாது.

எங்கெல்லாம் இடதுசாரிகள் பலமாக இருக்கிறார்களோ அந்த மாநிலங்களில் மட்டுமே மதவாத ஊடுருவலும், மதவாத வன்முறைகளும், வகுப்புக் கலவரங்களும் ததூண்டிவிடப்படுவது என்பது தடுத்து நிறுத்தப்படவும், முறியடிக்கப்படவும் செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டியுள்ளது.  இடது முன்னணி ஆட்சியில் இருந்த கடைசி மூன்று ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் 12 முதல் 31ஆக இருந்த மதவாத வன்முறைச் சம்பவங்களில் எண்ணிக்கை திரிணாமுல் காங்கிரசின் ஆட்சியின் கீழ் மிகப் பெரிய அளவில் அதிகரித்ததை காணலாம்.  2013ம் ஆண்டில் மட்டும் இது போன்ற சம்பவங்கள் 106 நடந்துள்ளன.  பிப்ரவரி2013க்கும் ஆகஸ்ட் 2013க்கும் இடையிலான ஏழு மாதக் காலத்தில் மேற்கு வங்கத்தில் மதக்கலவரங்கள் மிகப்பெரிய அளவில் 42 சம்பவங்கள் நடந்துள்ளன.  எனவே, இடதுசாரிகள் பலமாக இருந்தால், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்படும் அவற்றின் அஜெண்டாக்கள் முறியடிக்கப்படும் என்பதையும், சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அவர்களது முன்னேற்றம் உத்தரவாதப்படுத்தப்படும் என்பதையும்  மீண்டும் வலியுறுத்திக் கூற வேண்டிய அவசியம் இல்லை.  இதற்கு அத்தாட்சியாக மேற்குவங்கம், திரிபுரா மற்றும் கேரள இடதுசாரி அரசாங்கங்களின் ஆட்சி உள்ளது.

ஒரு குடியாட்சியின் குணாம்சம் என்பது மதச்சார்பின்மையாகும்.  ஒவ் வொரு இந்தியக் குடிமகனின் உரிமையாகும்,  அவன்/அவள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், சாதியைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்தப் பாலினத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் வன்முறை மற்றும் பாகுபாடு குறித்த அச்சமின்றி வாழும் உரிமை பெற்றவர்.  இது தான் நமது எல்லைக்கோலாக இருக்க முடியும்.  அதற்கு பாரதீய ஜனதா கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும்.

English Version:-

 

 

Check Also

‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ‘‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’’ புத்தகம் வியாழனன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் ...

Leave a Reply