பார்பரம்மாள்புரம் தலித் மக்கள் மீதான தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டக்குழு கண்டனம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நாங்குநேரி தாலுகா விஜயநாராயணம் அருகே உள்ள பார்பரம்மாள்புரம் பதைக்கம் காலனியை சார்ந்த வேல்முருகன், சுபாஷ், சதீஷ், முத்துசரவணன் ஆகியோர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

பதைக்கம் காலனி பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை வீணடித்தும், மாசுபடுத்தியும் வந்த குகானந்தம், ராஜகோபால், பிரேம் ஆனந்த் மூவரையும் பதைக்கம் காலனியை சார்ந்த தலித் மக்கள் தண்ணீரை பாழடிக்காதீர்கள் என்று சொன்னதற்காக சாதிய வன்மத்தோடு இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். வேல்முருகன் தாயார் தமிழ்ச்செல்வியையும் தாக்கி உள்ளனர்.

மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நால்வரும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்கள் பூரணமாக குணமடையும் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், பதைக்கம் காலனி மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உறுதி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வலியுறுத்துகிறது.

கே.ஜி.பாஸ்கரன்
நெல்லை மாவட்ட செயலாளர், சிபிஐ(எம்)

Check Also

மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கவும், சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அக்.20ல் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம்

மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் சூரப்பாவை பதவி ...