பார்வையற்ற பட்டதாரி மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

பார்வையற்ற பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டுமென்றும், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான மதிப்பெண்ணை 40 சதவிகிதமாக நிர்ணயிக்க வேண்டும், மாத உதவித்தொகையை உயர்த்த வேண்டும், மடிக்கணினி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி பார்வையற்ற பட்டதாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கடந்த சில தினங்களாக போராடி வருகிறார்கள்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தை ஒடுக்க முனையும்  தமிழக காவல்துறையின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. போராடும் மாற்றுத்திறனாளிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply